அவுஸ்திரேலியாவின் உயரமான மலைச்சிகரத்தில் ஏறி சாதனை! 8 வயது இந்திய சிறுவன்!

அவுஸ்திரேலியாவின் உயரமான மலைச் சிகரத்தில் ஏறி தெலுங்கானாவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சாதனைப் படைத்துள்ளான்.
இந்தியா, ஐதராபாத்தைச் சேர்ந்த சமன்யு பொத்துராஜ்(8) என்ற சிறுவன், அவுஸ்திரேலியாவின் மிக உயரமான மலையான கொஸ்கியஸ்கோவின் மீது ஏறி சாதனை படைத்துள்ளான்.

சமன்யு கடந்த 12ஆம் திகதி தனது தாய், சகோதரி உட்பட 5 பேருடன் இந்த மலையில் ஏறி இந்த சாதனையை படைத்தான். ஏற்கனவே, தான்சானியாவில் உள்ள கடல் மட்டத்தில் இருந்து 5,895 அடி உயரம் கொண்ட மலைச் சிகரத்தில் ஏறி இந்த சிறுவன் சாதனை படைத்திருந்தான்.

மேலும் தென் ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலைச் சிகரமான கிளிமன்ஜாரோவின் மீதும் கடந்த ஏப்ரல் மாதம் ஏறி சமன்யு சாதனை படைத்தான். இதுகுறித்து சமன்யு கூறுகையில்,

‘இதுவரை நான்கு மலைச் சிகரங்களில் ஏறி இருக்கிறேன். அடுத்து 3,776 மீற்றர் உயரம் உள்ள ஜப்பானின் புஜி மலையில் ஏற முடிவு செய்துள்ளேன். நான் வளர்ந்த பின், விமானப் படை அதிகாரியாக ஆக வேண்டும் என்பது எனது ஆசையெனவும் தெரிவித்துள்ளான்.

மேலும் சிறுவனின் தாய்  கூறுகையில், ‘ஒவ்வொரு முறையும் ஏதாவது நோக்கத்தோடு மலை ஏறுகிறான். இந்த முறை கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக ஏறியுள்ளான்’ என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.