மென்பேர்னில் இருந்து புறப்பட்ட மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் இலங்கையர் ஒருவர் ஏற்படுத்திய குண்டுப் புரளி, தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையது அல்ல என்று அவுஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு 11.11 மணியளவில் மலேசியன் எயர்லைன்ஸ் விமானம் மெல்பேர்ன் விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் நோக்கிப் புறப்பட்ட சற்று நேரத்தில், அதில் பயணம் செய்த இலங்கையர் ஒருவர் தன்னிடம் குண்டு இருப்பதாகவும், விமானத்தை வெடிக்க வைக்கப் போவதாகவும் சத்தமிட்டார். அத்துடன் அவர் விமானியின் அறைக்குள்ளேயும நுழைய முயன்றார். இதையடுத்து, புறப்பட்ட ஒரு மணிநேரத்திலே அந்த விமானம், ...
Read More »செய்திமுரசு
மலேசிய விமானம் மெல்பேர்னில் அவசரமாக தரையிறக்கம்!
மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவர் குண்டுப் புரளி கிளப்பியதுடன் விமானியின் அறைக்குள் நுழைய முயன்றதால் விமானம் அவசரமாக மெல்பேர்ன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. மெல்பேர்னில் இருந்து கோலாலம்பூர் சென்று கொண்டிருந்த மலேசியன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த இலங்கையர் ஒருவர் தன்னிடம், குண்டு இருப்பதாக கூறி, விமானியின் அறைக்குள் நுழைய முயன்றார். இதனால், விமானி மெல்பேர்ன் விமான நிலையத்துக்கே திருப்பினார். நேற்றிரவு 11.40 மணியளவில் இந்த விமானம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மெல்பேர்ன் விமான நிலையத்தில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து. குண்டுப் ...
Read More »சிட்னியில் விவிட் என்ற ஒளியோவிய நிகழ்வுகள்!
அவுஸ்ரேலியா சிட்னியில் விவிட் என்ற ஒளியோவிய நிகழ்வுகள்.
Read More »ஆப்கானுக்கு 30 மேலதிக துருப்புக்களை அனுப்பவுள்ள அவுஸ்ரேலியா!
அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க, மேலதிகமாக 30 துருப்புக்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. குறித்த துருப்புக்கள் அனுப்பிவைக்கப்பட்டால், ஆப்கானிஸ்தானில் உள்ள மொத்த அவுஸ்ரேலிய துருப்புக்களின் எண்ணிக்கை 300ஆக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மரைஸ் பெய்ன் (Marise Payne) உறுதி செய்துள்ளார். தலிபான் தீவிரவாதிகளுடன் தாக்குதல் நடத்துவதற்காக, குறைந்த பட்சம் 3,000 துருப்புக்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என இம்மாத ஆரம்பத்தில் அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையிலேயே துருப்புக்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப அவுஸ்ரேலியா தீர்மானித்துள்ளது. குறித்த துருப்புக்கள் ...
Read More »காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!
காணாமற் போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி, கிளிநொச்சியிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம், இன்றுச் செவ்வாய்க்கிழமை (30) 100ஆவது நாளை எட்டியது. இந்நிலையில், இன்றுக் காலை 10.30 மணியளவில், சர்வமதப் பிரார்த்தனையில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பின்னர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னதாகவுள்ள யு9 வீதியின் இருவழிப் பாதைகளையும் முடக்கும் வகையில் நடு வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஏ9 வீதியின் போக்குவரத்து, முற்றாக ஸ்தம்பித்துள்ளது. இதேவேளை, காணாமற் போனவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தால், பொதுமக்களுக்கு ...
Read More »சீரற்றகாலநிலை ; மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அவுஸ்ரேலியா நிதி உதவி!
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, நிவாரணங்களை பெற்று தருவதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு, 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை சிறீலங்காவுக்கு, அவுஸ்திரேலியா உதவித்தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. சிறீலங்கா அசாதாரண காலநிலை காரணமாக இதுவரை 188 பேர் உயிரிழந்துள்ளதுடன், 99பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு மொத்தமாக 15 மாவட்டங்களில் 149 ஆயிரத்து 678 குடும்பங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 75 ஆயிரத்து 885 பேர் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறீலங்காவின் நிவாரண பணிகளுக்காக, ...
Read More »மழையினால் அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் போட்டி 10.2 ஓவருடன் கைவிடப்பட்டது
சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டத்தில் மழையினால் அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி 10.2 ஓவருடன் கைவிடப்பட்டது. இங்கிலாந்து, வேல்ஸில் வருகிற வியாழக்கிழமை (ஜூன் 1-ந்திகதி) சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னோட்டமாக பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. மழைக் காரணமாக ஆட்டம் காலதாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற அவுஸ்ரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி வார்னர், ஆரோன் பிஞ்ச் ...
Read More »முத்தமிட்ட பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அவுஸ்ரேலியாவில் சிறை!
அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை முத்தமிட்ட இலங்கையைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவு குடியகழ்வு தடுப்பு முகாமில் கடமையாற்றிய இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு ஒரு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 37 வயதான நபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். பெண் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை குறித்த இலங்கையர் முத்தமிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு அளிக்கும் தரப்பினரே இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என நீதவான் Meaghan Keogh தெரிவித்துள்ளார். இதேவேளை, பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ...
Read More »அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய அமைப்பு!
அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைக்குமிடையில், வருடாந்த ஒப்பந்தம் தொடர்பான முரண்பாடு அதிகரித்துள்ள நிலையில், வீரர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை முகாமை செய்வதற்காக, புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. உருவாக்கப்பட்டுள்ள அமைப்பே, வீரர்களின் வர்த்தக ஒப்பந்தங்கள், அனுசரணையாளர்களை முகாமை செய்தல், ஊடகங்களுக்கும் ஒளிபரப்பாளர்களுக்கும் அணுக்கத்தை வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளவுள்ளது. இதன்மூலம், அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்கள் அமைப்புக்கான நிதியளிப்பும் பெறப்படவுள்ளது. தற்போதுள்ள நடைமுறையின்படி, விரர்களின் அறிவுசார் சொத்துரிமைகளை, அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை பயன்படுத்துவதோடு, அதற்காக வருடாந்தம், கிரிக்கெட் வீரர்களின் சங்கத்துக்கு நிதியளித்து வருகிறது. ஆனால், அச்சங்கத்துக்கு நிதியளிப்பதை ...
Read More »சிறீலங்கா அனர்த்தம் தொடர்பில் அவுஸ்ரேலியா இரங்கல்!
சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் அவுஸ்ரேலியா இரங்கல் வெளியிட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு கொள்வதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஸொப், இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஸ டி சில்வாவிற்கு இரங்கல் செய்தியை அனுப்பி வைத்துள்ளார். சிறீலங்காவுக்கு தேவை ஏற்பட்டால் உதவிகளை வழங்க ஆயத்தமாக இருப்பதாக அவர் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Read More »