அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை முத்தமிட்ட இலங்கையைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவு குடியகழ்வு தடுப்பு முகாமில் கடமையாற்றிய இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு ஒரு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
37 வயதான நபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். பெண் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை குறித்த இலங்கையர் முத்தமிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு அளிக்கும் தரப்பினரே இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என நீதவான் Meaghan Keogh தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த இலங்கையரும் ஓர் புகலிடக் கோரிக்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal