வடகொரியாவில் உள்ள பிரதான அணு ஆயுத வளாகத்தை அழிக்க வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஒப்புக்கொண்டுள்ளார். கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம் அதிகரித்த நிலையில், சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சம்மதம் தெரிவித்தார். இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். ...
Read More »செய்திமுரசு
பாக். பிரதமர் அலுவலகத்தின் 70 ஆடம்பர கார்கள் ஏலம்!
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் சிக்கன நடவடிக்கையால் பிரதமர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் புரூப் கார் உள்ளிட்ட 70 ஆடம்பர கார்கள் ஏலம் விடப்பட்டது. பாகிஸ்தான் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றதும் அரசில் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டார். பிரதமர் பங்களாவில் தங்காமல் ராணுவ அதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் இருக்கிறார். ஆளுநர் மாளிகை மற்றும் உயர் அதிகாரிகள் பங்களாக்களில் ஆடம்பர வசதிகள் கூடாது என்றும் உத்தரவிட்டார். பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து மட்ட அதிகாரிகளுக்கும் விமானத்தில் முதல் வகுப்பு பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ...
Read More »தமிழ் மக்களை கருவறுக்கும் மகாவலி அபிவிருத்தி!
ஓர் இனத்திலுள்ள மக்களை அழிப்பது மட்டும் இன அழிப்பன்று. அம்மக்களை இனமாகக்காட்டும் கூறுகளை அழிப்பதும் இனவழிப்பே. தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து சிங்களவர்களை குடியேற்றி தமிழர் பெரும்பான்மையை சீரழிக்க தென்னிலங்கை அரசாங்கம் காலத்திற்குக் காலம் செயற்பட்டுவருகின்றது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்காவினால் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகப் பகுதியான அம்பாறையில் கல்லோயாவை மறித்த அணை கட்டி அதன் ஊடாக 40000 ஏக்கர் விவசாயக் காணிகள் உருவாக்கப்பட்டனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட நிலப்பரப்பில் 50 வீதத்திற்கும் அதிகமான சிங்கள் மக்கள் குடியேற்றப்பட்டனர். ...
Read More »வெலிக்கடை மோதல் தொடர்பில் கைதானவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
வெலிக்கடை சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட காவல் துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் நியோமல் ரங்கஜீவ மற்றும் சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரன்ஜன் லமாஹேவா ஆகியோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரையும் இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து ...
Read More »கைதிகள் விடுதலை தொடர்பில் கூட்டமைப்பு பல உண்மைகளை மூடிமறைக்கிறது!
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல உண்மைகளை மூடி மறைத்துவருவதுடன் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு சர்வதேசத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்தும் வருகிறதென தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதனாலேயே பங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ஆகியன இவ்வளவு தாமதமாகி வருகிறதெனவும் அவர் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்து நேற்று திங்கட்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் ...
Read More »அவுஸ்ரேலிய ஸ்ரோபரி பழங்களுக்குள் தையல் ஊசி! – மக்களுக்கு எச்சரிக்கை
அவுஸ்ரேலியாவில் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்ட ஸ்ரோபரி பழங்களில் தையல் ஊசிகளை மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. தையல் ஊசிகளை மறைத்த ஸ்ரோபரி பழங்களைக் கொள்வனவு செய்த 6 மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த மக்கள் குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர். பொதுமக்கள் உண்ணும் பழங்களுக்குள் தையல் ஊசியை மறைத்து வைத்து மறைமுக தாக்குதல் நடத்தும் மிகவும் மோசமான குற்றத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்நாட்டு சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் தெரிவித்துள்ளார். இவ்வாறு தையல் ஊசி வைக்கப்பட்ட ஸ்ரோபரிப் பழத்தினை உட்கொண்ட ...
Read More »அண்ணா புரிந்த அரசியல் சாகசம்!
தென்னிந்திய நலச் சங்கம், சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என வெகுமக்களுக்கு எதிராக அடர்த்தியான தத்துவச் செறிவைக் கொண்ட இயக்கங்களின் வழியாகத் தன்னை வார்த்துக் கொண்டவர் அண்ணா. ஆனால், வெகுமக்களின் உளவியலில் தவிர்க்க முடியாத பேரியக்கமாக இன்று வரை வேரூன்றிப் படர்ந்திருக்கும் திமுக என்ற கட்சியைத் தொடங்கிய இடத்தில்தான், அண்ணா என்ற அரசியல் ஆளுமை தமிழகம் பயணிக்க வேண்டிய எதிர்காலத் திக்கைச் சுட்டிக்காட்டும் பேருருவாக வசீகரம் பெற்று எழுந்து நிற்கிறது. தந்தையின் பாதையிலிருந்து விலகாத தனயனாகவே தனது அரசியலின் அடுத்த கட்டத்தை அவர் தொடர்ந்தாலும், ...
Read More »ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு!
கல்குடாவில் எத்தனோல் மதுபான தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை எதிர்வரும் அக்டொபர் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார். நான்காவது சாட்சியான ஏறாவூர் பொலிஸார் மன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால் இன்றும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். குறித்த தொழிற்சாலைக்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் ...
Read More »பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் இடமாற்றம்!
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வாவை தற்காலிகமாக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு இடமாற்றம் செய்துள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த இடமாற்றமானது காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்திரவுக்கமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ருவான் குணசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஷபக்ஷவை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியதாக நாலக சில்வாவின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கடந்த 12 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ...
Read More »சீன பொருட்களுக்கு கூடுதல் வரி! – டிரம்ப்
மேலும் ரூ.14 லட்சம் கோடி சீனப்பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இன்று வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அது வர்த்தக போராக மாறி உள்ளது. சீனா தனது அறிவுசார் சொத்துக்களை திருடுவதாகவும், தொழில் நுட்பங்களை தன் நாட்டுக்கு மாற்றிக்கொண்டு வருவதாகவும் அமெரிக்கா புகார் கூறுகிறது. சீனா தொடர்ந்து இந்தப் புகாரை மறுத்து வருகிறது. ஆனாலும்கூட, சீனாவால் தங்களுக்கு ஏற்படுகிற வர்த்தக ...
Read More »