உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் மீண்டும் முதலிடத்தை பிடித்தார். உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றிய செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (9,720 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். 32 வயதான ஜோகோவிச் 5-வது முறையாக நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அவர் நம்பர் ஒன் இடத்தை 276-வது வாரமாக அலங்கரிக்கிறார். ...
Read More »செய்திமுரசு
ஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து சிறுவர், சிறுமிகள் 4 பேர் பலி!
ஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 3 சிறுமிகளும், சிறுவனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள ஒரு வீதியில் சாலையோர நடைபாதை மீது சிறுவர், சிறுமிகள் 7 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக கடைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த சாலையில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று நடைபாதை மீது ஏறி சிறுவர், சிறுமிகள் கூட்டத்துக்குள் பாய்ந்தது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 8 முதல் 12 வயதுக்குட்பட்ட ...
Read More »எமது உறவுகளின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கவும்!
இலங்கையின் சுதந்திரத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி நீதிக்காக எமது உறவுகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் இதற்கு பூரண ஆதரவினை வழங்குவதோடு போராட்டத்தில் கலந்து கொண்டு வலுச்சேர்க்குமாறு தமிழ் உறவுகள் அனைவரிடமும் அன்புரிமையுடன் கேட்டு நிற்கின்றோம். எமது மக்களின் ஜனநாயக முறையிலான போராட்டங்களில் எமது மாணவர் ஒன்றியம் தொடர்ந்தும் பயணிக்கும். மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு ஈழத்தமிழர்கள் இலங்கை சுதந்திரமடைந்த நாள் தொடக்கம் இன்று வரையில் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் எம் மக்களும் காலா காலமாக நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கின்ற போதும் எமது மக்களின் ...
Read More »தமிழர் விளையாட்டு விழா 2020 – சிட்னி
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் நடத்தப்படும் தமிழர் ஒன்றுகூடலும் கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்கள் நினைவாக நடத்தப்படும் விளையாட்டு விழா நிகழ்வும் 26 – 01 – 2020 அன்று துங்காபி பினாலொங் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. காலை எட்டு மணிக்கு கிரிக்கற் மற்றும் காற்பந்தாட்டம் ஆகிய போட்டிகளுடன் ஆரம்பமான விளையாட்டு நிகழ்வில் சிறுவர்களுக்கான போட்டிகள் மதியம் ஒரு மணி தொடக்கம் நடைபெற்றன. சாக்கோட்டம் தேசிக்காயும் கரண்டியும் ஓட்டம் தவளைப்பாய்ச்சல் பழம்பொறுக்குதல் போன்ற சிறுவர்களுக்கான போட்டிகளும் பெரியவர்களுக்கான ஓட்டப்போட்டி பின்னால் ஓடும் போட்டி என்பனவும்நடைபெற்றன. மாலையில் ...
Read More »மோட்டார் குண்டுகள் அடங்கிய 13 பெட்டிகள் மீட்பு!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் கொண்ட 13 பெட்டிகளை பொலிஸ் விசேட அதிரடைப் படையினர் மீட்டுள்ளனர். குறித்த வெடிபொருட்கள் புதைக்கப்பட்டிருந்த நிலத்தின் உரிமையாளர் இது தொடர்பில் தகவல் அறிந்து காவல் துறைக்கு வழங்கிய உத்தரவுக்கு அமையவே முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய இவை மீட்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்க்கப்பட்ட பல பெட்டிகள் சிதைவடைந்த நிலையில் இருந்ததாகவும், அவை விடுதலை புலிகளினால் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் காவல் துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும் இது தொடர்பான விசாரணைகளை முல்லைத்தீவு ...
Read More »தஞ்சைப் பெரியகோயில் எனும் தமிழனின் பெருமை!
தஞ்சையில் சோழப் பேரரசன் முதலாம் ராஜராஜனால் கி.பி. (பொ.ஆ) 1010ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப் பெற்றதே ‘இராஜராஜீச்சரம்’ எனும் சிவாலயமாகும். இதை மக்கள் வழக்கில் தஞ்சைப் பெரிய கோயில் எனக் குறிப்பிடுவர். இக்கோயில் கடைக்காலில் தொடங்கி விமானத்துச் சிகரம்வரை கருங்கற்கள் கொண்டே கட்டப்பெற்றதாகும். அதனால் இதனைக் கற்றளி எனக் குறிப்பிடுவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி காலகட்டத்தில் பாமர மக்கள் இதனைப் பூதம் கட்டிய கோயிலென்றே கூறி வந்தனர். தஞ்சையில் ஆட்சிபுரிந்த மராட்டிய அரசர் சரபோஜி மன்னரின் ஆட்சிக் காலத்தில் மராட்டி மொழியில் எழுதப் பெற்ற ...
Read More »தஞ்சமடைய முயற்சிப்பவர்களை ‘ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த மாட்டோம்!
ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே ஏற்பட்ட அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவில் மீள்குடியேற்றப்பட்ட அகதிகள், தற்போது மனுஸ்தீவு மற்றும் நவுருத்தீவில் இருக்கும் அகதிகளை அமெரிக்கா வர வேண்டாம் என எச்சரிப்பதாகக் கூறுகிறார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன். “இதுகுறித்து என்னால் எதுவும் செய்ய முடியாது,” எனக் கூறும் பீட்டர் டட்டன், பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுகளில் உள்ள அகதிகளை வெளியேற்ற நான் நினைத்துக்கொண்டிருக்கும் பொழுது இப்படியான செயல் தன்னை சினங்கொள்ள வைப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில் ...
Read More »நோபல் பரிசுக்கு கிரேட்டா துன்பர்க் பெயர் பரிந்துரை!
கடந்த 2018 ஆகஸ்ட் மாதம், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான பள்ளி மாணவர்கள் போராட்டத்தை ஸ்வீடன் நாடாளுமன்றத்துக்கு வெளியே கிரேட்டா துன்பெர்க் என்ற இளம் மாணவி தொடங்கினார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘பிரைடேஸ் பார் பியூச்சர்’ என்ற ஹாஷ்டேக் உலக அளவில் பிரபலமானது. அந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கானோரை பங்கேற்கச் செய்ததில் கிரேட்டா முக்கிய உந்துசக்தியாக திகழ்ந்தார். இந்நிலையில் 2020-ம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு கிரேட்டா துன்பெர்க் மற்றும் ‘பிரைடேஸ் பார் பியூச்சர்’ அமைப்பின் பெயரை ஸ்வீடன் நாட்டின் ...
Read More »கிளிநொச்சியில் சிறிலங்கா இராணுவத்தால் ஒருவர் கைது!
விடுதலைப் புலிகளின் கொடியை வைத்திருந்தக் குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி விவேகானந்தா நகரைச் சேர்ந்த குறித்த நபர் இன்று முன்னர் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .கைது செய்யப்பட்ட குறித்த நபர் கிளிநொச்சி காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Read More »கூட்டுத் தலைமத்துவம் அல்ல முக்கியம் கொள்கை தான் முக்கியம்!
யதார்த்தத்தை உணரத் தொடங்கியிருக்கின்ற தமிழ் மக்கள் உண்மையான நேர்மையான கொள்கையில் விட்டுக் கொடுப்பில்லாத எங்களது தரப்பிற்கு முழுமையான ஆதரவை வழங்குவார்கள் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டுத் தலைமைத்துவம் முக்கியமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். கூட்டுத் தலைமையின் முக்கியத்துவம் குறித்து கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்ததாவது, என்னைப் பொறுத்தவரையில் கூட்டுத் தலைமத்துவம் முக்கியமான விடயமல்ல. ஏனெனில் இங்கு கூட்டுத் தலைமத்துவம் அல்ல முக்கியம். கொள்கை தான் முக்கியம். நேர்மைத் தன்மை தான் முக்கியம். ...
Read More »