செய்திமுரசு

மனைவியையும், குழந்தையையும் கொலை செய்த தமிழர் தானும் தற்கொலை!

லண்டனில் உள்ள தொடர் மாடி குடியிருப்பு ஒன்றில் தனது மனைவியையும், மூன்று வயதான மகளையும் கோரமாகக் கொலை செய்த தமிழரான தந்தை ஒருவர், தானும் தற்கொலை செய்துகொண்ட பரிதாபகரமான சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கின்றது. இக்குடும்பத்தினர் மலேஷியத் தமிழர்கள் என லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று வயது சிறுவனும் அவரது தாயும் குறிப்பிட்ட தொடர்மாடி குடியிருப்பில் இறந்து கிடந்தனர், புதன்கிழமை காலை தகவல் அறிந்த பிரிட்டிஷ் காவல் துறை அந்த வீட்டுக்குள் நுளைந்தபோது தந்தை தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன.     ...

Read More »

அவுஸ்திரேலிய காட்டில் விடப்பட்ட ‘டாஸ்மானியாவின் பேய்’

பாலூட்டி விலங்கினமான டாஸ்மானியாவின் பேய்(Tasmanian devil) 3,000 ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலிய பெருநிலப் பரப்பில் மீண்டும் விடப்பட்டுள்ளது. இயற்கை பாதுகாப்புக் குழுக்கள் சிட்னியின் வடக்குப் பகுதியிலுள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் 26 பாலூட்டிகளை விடுவித்துள்ளனர். டாஸ்மானியாவின் பேய் என்று அழைக்கப்படும் இந்த விலங்குகள் அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு விலங்கினம். இது எழுப்பும் அதீத ஒலிதான் இந்த விலங்கிற்கு இந்தப் பெயர் வரக் காரணம். மேலும் இந்த விலங்கு, விலங்குகளின் சடலங்களை வெறித்தனமாக தேடிச் சென்று, கடித்து நொறுக்கிவிடும். தனது தாடைகளின் சக்தியைக் கொண்டு ...

Read More »

முற்றாக முடக்கப்பட்டது புங்குடுதீவு

யாழ். மாவட்டம், தற்போது ஏற்பட்டிருக்கும் அனர்த்தத்தை மிகவும் சிக்கலான நிலையில், எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் எச்சரித்துள்ளார். புங்குடுதீவு முற்றாக முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்:- யாழ்.மாவட்டத்தில், கொரோனா தொற்று தீவிரம் காரணமாக, அவசரமாக மாவட்ட கொரோனா ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தை நடத்தியிருந்தோம். இந்தச் ...

Read More »

பாலச்சந்திரன் “ சிறுவர் படையணியின் தளபதி” என்கிறார் பொன்சேகா

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரன் சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லவில்லை என சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா பிரபாகரன் மகன் சிறுவர் படையணியின் தளபதி எனவும் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத்தினர் பிஸ்கட் வழங்கிய பின்னர் பிரபாரகனின் மகனை கொன்றனர் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் குற்றம்சாட்டியவேளை அதற்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரபாகரனின் மனைவி விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா அவரது மூத்த மகன் விடுதலைப்புலிகள் ...

Read More »

ஊடகச்செயலாளருக்கும் கொரோனா!

வெள்ளை மாளிகையின் ஊடகச்செயலாளர் கேய்லேய் மக்எனானி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது நான் கொரோனா வைரசினால் பாதிக்கப்படவில்லை என முடிவுகள் வெளியான போதிலும் இன்றுநான் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளேன் என முடிவுகிடைத்துள்ளது என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரசிற்கான அறிகுறிகள் எதுவும் தன்னிடம் காணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எந்த நிருபரும் தயாரிப்பாளரும் பத்திரிகை துறை சார்ந்தவர்களும் என்னுடன் தொடர்பிலிருந்தனர் என வெள்ளை மாளிகை தெரிவிக்கவில்லை எனவும் வெள்ளை ...

Read More »

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 246 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணி யாற்றி வந்த மேலும் 246 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகளின் படி கொரொனா தொற்றாளர் கள் 246 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வர்களின் மொத்த எண்ணிக்கை 569 ஆக அதிகரித் துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

ரிசாத்தின் சகோதரருக்கு பயங்கரவாதத்துடன் நேரடி தொடர்புகள் இல்லையாம்!

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரியாட் பதியுதீனிற்கு பயங்கரவாதிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என விசாரணைகளின் பின்னர் உறுதியான பின்னரே அவர் விடுதலை செய்யப்பட்டார் என உள்நாட்டுபாதுகாப்பிற்கான இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ரியாட் பதியுதீனின் விடுதலை குறித்து கேள்விஎழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பொலிஸார் இது குறித்து வழங்கியுள்ள அறிக்கை முரணாணதாக காணப்படுகின்றது என தெரிவித்து விளக்கம் கோரினார். இதற்கு பதிலளித்த சமல்ராஜபக்ச முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரியாட் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் இலங்கைமாணவி விபத்தின் மூலம் உயிரிழப்பதற்கு காரணமான நபருக்கு பத்து வருட சிறை

அவுஸ்திரேலியாவில் கடந்த வருடம் இலங்கை மாணவி விபத்தின் காரணமாக உயிரிழப்பதற்கு காரணமான நபருக்கு நீதிமன்றம் பத்து வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது. மொனால் பல்கலைகழகத்தில் கல்விகற்ற நிசாலி பெரேரா வெலிங்டன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் உயிரிழந்தார். இன்றைய நீதிமன்ற அமர்வில் இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி லிஸ் கையினர் விபத்துக்கு காரணமான சேன் கொச்ரனே என்ற நபர் நிசாலியின் குடும்பத்தை நிரந்தரமாக சிதைத்துவிட்டார் என தெரிவித்துள்ளார். மிகவும் நேசிக்கப்பட்ட ஒரேயொரு மகளின் மரணத்திற்கு காரணமாகிவிட்டீர்கள் என சேன் ...

Read More »

மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டு செயற்திட்டம்

2014 செப்டெம்பரில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் அன்றைய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தை கூட்டாக ஆரம்பித்துவைத்தார்கள்.கடலில் இருந்து 269 ஹெக்டேயர் நிலத்தை மீட்டு, இலங்கையின் தலைநகர் கொழும்புக்கான நிதித்துறை, சுற்றுலாத்துறை, விநியோகங்கள் ஒழுங்கமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளை ஒருங்கிணைக்கும் புத்தம் புதிய மத்திய வர்த்தக மாவட்டமொன்றை நிர்மாணிப்பதே இந்த திட்டமாகும். ஆரம்பித்தவைக்கப்பட்டு 6 வருடங்கள் கடந்த நிலையில், இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடாக இப்போது விளங்கும் கொழும்பு துறைமுகநகரத்திட்டம் உள்நாட்டு மற்றும் பிராந்திய பொருளாதாரத்தை மீளவடிவமைப்பதற்கான எதிர்கால ...

Read More »

நியுசிலாந்து பிரஜைகளுக்கு அவுஸ்திரேலியால் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை தளர்வு!

நியுசிலாந்து பிரஜைகளுக்கு அவுஸ்திரேலியால் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் கடடுப்பாட்டு நடவடிக்கையாக பல்வேறு நாடுகள் பயணத்தடை விதித்திருந்தது. இந்த நிலையில் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்துள்ளதன் காரணமாக பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Read More »