யாழ்மாவட்டம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோசிற்கு மத்திய மாகாணத்தில் பதியப்பட்ட வாகனத்தில் வந்த சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதுடன் அவரை கற்களால் தாக்க முயற்சித்துள்ளனர். இது தொடர்பில் தியோகராஜா நிரோஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார். நான் எனது உத்தியோகபூர்வ வாகனத்தில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி ஊடாக பழைய தபாற்கந்தோர் ஒழுங்கை ஊடாக சென்றுகொண்டிருந்தபோது-எங்களிற்கு பின்னர் வந்துகொண்டிருந்த மத்திய மாகாணத்தில் பதியப்பட்ட பிபீ 0595 என்ற அதிசொகுசு பிக்கப்பில் வந்த பத்துபேர் என்னை அச்சுறுத்தினார்கள். அவர்கள் பொதுமக்கள் அதிகமாக காணப்படுகின்ற பகுதியில் மிக ...
Read More »செய்திமுரசு
அடுத்த பிரமர் நாமல் ராஜபக்சவா?
அடுத்த சில வாரங்களில் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கவனம் செலுத்தி வருகின்றார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதுமாக திறக்கப்படும்போது துரித அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் திறமை வாய்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கவேண்டும் என ஜனாதிபதி விரும்புகின்றார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கான ஆதரவு குறைவடைந்துள்ளதையும் சில அமைச்சுகளின் செயற்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளதையும் ஜனாதிபதி கருத்தில் எடுத்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறப்பாக செயற்படாத சிரேஸ்ட அமைச்சர்களின் பதவிகள் பறிபோகலாம் அல்லது ...
Read More »அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் பலி
அவுஸ்திரேலியா மெல்பேன் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் பலியானவர் காலி மஹிந்தா கல்லூரி, மொரட்டுவ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் முன்னாள் மாணவரான குஷான் நிரோஷன என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த விபத்து நேற்று மாலை 06.00 மணிக்கு இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ள தாக அந்நாட்டு வைத்திய சாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
Read More »பசிலின் மறுபிறவி
ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, நாளை (08 ஆம் திகதி) தேசிய பட்டியல் மூலமாக, பாராளுமன்றத்துக்கு வருவார் எனச் செய்திகள் பரவியுள்ளன. அவர், தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குத் தடையாக இருந்த, பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்ற நிலைமை தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த தேசிய பட்டியல் உறுப்பினர்கள் நான்கு பேர், அவருக்காக இராஜினாமாச் செய்யத் தயாராக இருப்பதாக, கடந்த ...
Read More »தடுப்பூசி போட்டிருந்தால் ஒரு beer இலவசம்
கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச beer வழங்கப்படும் என்ற மெல்பன் pub ஒன்றின் அறிவிப்பிற்கு பிரதமர் ஆதரவு தெரிவித்துள்ளார். Port Melbourne-இலுள்ள Prince Alfred ஹோட்டலுக்கு அருகில் தடுப்பூசி வழங்கும் மையம் இயங்க ஆரம்பித்ததையடுத்து, கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இலவச beer வழங்கும் செயன்முறையை கடந்த வாரம் குறித்த ஹோட்டல் ஆரம்பித்திருந்தது. ஆனால் மருந்துப்பொருளுடன் தொடர்புடைய சலுகையாக மதுபானத்தை வழங்கமுடியாது என நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டு வாரியமான Therapeutic Goods Administration (TGA) இதற்கு தடைவிதித்தது. TGA-இன் இத்தீர்மானம் நியாயமானது என்றாலும் தற்போதைய சூழலில் ...
Read More »இந்தோனேசியாவில் ஒரேநாளில் கொரோனா வைரசினால் ஆயிரம் பேர் மரணம்
இந்தோனேசியாவில் முதல்தடவையாக கொரோனாவைரசினால் ஒரே நாளில் ( புதன்கிழமை) ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவாவில் மருத்துவமனைகள் சிகிச்சை வழங்க கூடிய எல்லையை கடந்துவிட்டன ,ஆறுநகரங்களில் ஒக்சிசனிற்கு பெரும் தட்டுப்பாடு காணப்படுகின்றது. இதேவேளை இந்தோனேசியாவின் பல பகுதிகளில் புதிதாக வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது என்ற அச்சமும் உருவாகியுள்ளது. சிவப்பு வலயங்கள் என குறிக்கப்படும் பகுதிகளில் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வரும் அதிகாரிகள் பொதுமக்கள் நடமாட்டத்தின் மீதான கட்டுபாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ...
Read More »விடுதலைப் புலிகள் தொடர்பான புகைப்படங்களை வைத்திருந்த இளைஞர் கைது
விடுதலைப்புலிகள் தொடர்பான புகைப்படங்களை வைத்திருந்தமை மற்றும் குற்றங்களைச் செய்ய இளைஞர்களைத் தூண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். சந்தேக நபர் கிளிநொச்சியைச் சேர்ந்த 21 வயதுடைய நாகராசா பிரபா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் 27 1/2 அங்குல நீளமும் 11/4 அங்குல அகலமும் கொண்ட இரும்பினால் செய்யப்பட்ட வாள் ஒன்றை வைத்திருந்ததாகவும் சிம் அட்டைகளுடன் கூடிய ...
Read More »யாழில் 16 பேர் உட்படவடக்கில் 32 பேருக்கு கொவிட் தொற்று!
யாழ்ப்பாணத்தில் 16 பேர் உட்பட வடக்கில் 32 பேருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 27 பேரும், யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் ஆறு பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 418 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் யாழ். மாவட்டத்தில் 10 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 27 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 10 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் 04 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,பருத்தித்துறை ஆதார ...
Read More »இலங்கை: வீழ்ச்சி கண்ட நாடாகியுள்ளதா…..?
இலங்கை ஒரு தோல்வியுற்ற நாடாக மாறி வருகின்றதா என்ற சந்தேகம் பல தரப்பினரிடையேயும் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி கோத்தாபாய ராஜபச்ச தலைமையிலான அரசாங்கத்தின் செயல் வல்லமையற்ற செயற்பாடுகளினால் இந்த நிலைமை உருவாகி உள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அறுபத் தொன்பது இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்று, தன்னிகரற்ற தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் ஆட்சி முறைமை பல துறைகளிலும் பலவீனமாகி இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என அவதானிகளும், ஆய்வாளர்களும் சுட்டிக் காட்டி உள்ளனர். தேசிய பாதுகாப்பை உறுதிப் படுத்தி, சுபீட்சம் மிகுந்ததாக ...
Read More »சிட்னி முடக்கநிலை மேலும் ஒரு வாரத்தால் நீடிக்கப்படுகிறது!
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் 5 பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை மேலும் ஒரு வாரத்தால் நீடிக்கப்படுகிறது. நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தின் Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் Shellharbour பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கநிலை மேலும் ஒரு வாரத்தால் நீடிக்கப்படுவதாக Premier Gladys Berejiklian அறிவித்தார். அங்கு கடந்த 24 மணிநேரத்தில் சமூகப் பரவல் ஊடாக புதிதாக 27 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி Greater Sydney, Blue Mountains, Central Coast, Wollongong மற்றும் ...
Read More »