யாழ்மாவட்டம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோசிற்கு மத்திய மாகாணத்தில் பதியப்பட்ட வாகனத்தில் வந்த சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதுடன் அவரை கற்களால் தாக்க முயற்சித்துள்ளனர்.
இது தொடர்பில் தியோகராஜா நிரோஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நான் எனது உத்தியோகபூர்வ வாகனத்தில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி ஊடாக பழைய தபாற்கந்தோர் ஒழுங்கை ஊடாக சென்றுகொண்டிருந்தபோது-எங்களிற்கு பின்னர் வந்துகொண்டிருந்த மத்திய மாகாணத்தில் பதியப்பட்ட பிபீ 0595 என்ற அதிசொகுசு பிக்கப்பில் வந்த பத்துபேர் என்னை அச்சுறுத்தினார்கள்.
அவர்கள் பொதுமக்கள் அதிகமாக காணப்படுகின்ற பகுதியில் மிக மோசமான தகாதவார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டனர்.
அவர்கள் என்னை கற்களால் தாக்க முயற்சித்தனர்,தாங்கள் அரசாங்கத்தின் ஆட்கள் எனவும் தெரிவித்தார்கள்.
இது தொடர்பாக நான் யாழ்ப்பாணம் காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றேன்,என்னை கொல்வோம் எனக்கூட அச்சுறுத்தியிருந்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal