செய்திமுரசு

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு!

சுதந்திர தினமான நேற்று, இந்தி யாவுக்கான, அமெரிக்க துாதர், மேரிகே கார்ல்ஸன், காஞ்சிபுரம் பட்டு உடுத்தி எடுத்த புகைப்படத்தை, ‘டுவிட்டர்’ சமூகவலைதளத்தில் வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கான அமெரிக்க பெண் துாதர், மேரிகே கார்ல்ஸன். இந்திய கலாசாரத்தில் அதீத ஈடுபாடு உடையவர். இந்திய சுதந்திர தினத்தில், பாரம்பரிய புடவை உடுத்த விரும்பிய அவர், ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், அது தொடர்பான பதிவை, ஒரு மாதத்துக்கு முன் வெளியிட்டார். அதில், தனக்கு பொருத்தமான உடையை தேர்ந்தெடுத்து சொல்லும்படி, ‘நெட்டிசன்’களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இணையத்தை அதிகளவில் பயன்படுத்தும், ‘நெட்டிசன்’களின் ...

Read More »

கொடைக்கானலில் சிக்கிய அவுஸ்ரேலிய ஆந்தை!

கொடைக்கானல் கொடைக்கானலில் வனப்பகுதியிலிருந்து வெளிவந்த அரியவகை ஆந்தை ஓன்று குடியிருப்பு பகுதியில் சிக்கியது. பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தமிழ்நாடு ஓட்டல் செல்லும் வழியில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு அரிய வகை ஆந்தை கீழே விழுந்து கிடந்தது. அவற்றை பாதுகாப்பாக மீட்ட பொதுமக்கள், அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த ஆந்தை அவுஸ்ரேலியா நாட்டில் உள்ள ஆந்தை இனத்தை சேர்ந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். ரேஞ்சர் ரவி கூறியதாவது: வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஆந்தை வந்திருக்கலாம். ஆந்தையை அடர்ந்த வனப்பகுதியில் விட்டுள்ளோம், என்றார்.

Read More »

அவுஸ்ரேலியாவில் இந்திய சுதந்திர தின விழா!

உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களில் இந்திய சுதந்திர தின விழா நேற்று (15) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவுஸ்ரேலியாவின் கான்பெர்ரா, மெல்போர்ன், சிட்னி நகரங்களில் உள்ள தூதரகங்களில் சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்திய சுதந்திர தின விழாவுக்கு அவுஸ்ரேலிய  பிரதமர் மால்கம் டர்ன்புல் வாழ்த்து செய்தி வெளியிட்டார்.

Read More »

அரசாங்க படிவங்கள் மும்மொழியில் மொழிபெயர்க்கும் பணி ஆரம்பம்

அரசாங்க படிவங்கள் மும்மொழியில் மொழிபெயர்க்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. இலங்கையின் மொழிக்கொள்கை, மும்மொழிக்கொள்கை  என்பதனால்  அனைத்து அரசாங்க அலுவலக படிவங்களிலும் மூன்று மொழிகளும் இடம்பெற வேண்டும். எனினும்  இதுபற்றி தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கியும் மும்மொழிகளிலும் அனைத்து அரசாங்க அலுவலக படிவங்கள் அமைவதில்லை. குறிப்பாக தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படுவது இல்லை. இந்தநிலையில் அரசாங்க படிவங்கள் மும்மொழியில் மொழிபெயர்க்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.   எனவே இனிமேல்  எவரும் மும்மொழி மொழிச்சட்டத்தினை மீற முடியாது என்பதுடன்  எந்த ஒரு அதிகாரியும் மொழிச்சட்டம் தனக்கு தெரியாது எனக்கூறவும் முடியாது எனவும் ...

Read More »

அவுஸ்திரேலியாவின் City West Falcons அணியை இறுதிக் போட்டிக்கு தெரிவு!

ஈழத்தின் முன்னணி வலைப்பந்து வீராங்கனை சிவலிங்கம் தர்ஜினி, தற்பொழுது விளையாடி வரும் அவுஸ்திரேலியாவின் City West Falcons அணி, உலகின் முன்னணித் தொடரான விக்டோரியா வலைப்பந்து லீக்கில் பூர்வாங்க இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தர்ஜினி அரையிறுதியில் பெற்ற அதிக புள்ளிகளே அந்த அணி கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பை நெருக்கியுள்ளமைக்கு முக்கிய காரணியாகும். ACU Sovereigns அணிக்கு எதிராக கடந்த புதன்கிழமை (09) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தர்ஜினி புள்ளிகளை அள்ளியதால் City West Falcons அணி 59-52 என்ற புள்ளிகளால் வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில் ...

Read More »

நான் நாடாளுமன்றத்திற்கு தகுதியானவர் இல்லை!- அவுஸ்ரேலிய துணைப் பிரதமர்

இரட்டை குடியுரிமை கொண்டிருப்பதால் தான் நாடாளுமன்றத்திற்கு தகுதியானவர் இல்லை என அவுஸ்ரேலிய துணைப் பிரதமர் பர்னாபி ஜோய்ஸ் (Barnaby Joyce) தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவிலும் நியூசிலாந்திலும் இரட்டைக்குடியுரிமை கொண்டவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. அவுஸ்திரேலிய துணைப் பிரதமரின் இந்த அறிவிப்பால் ஆளும் கன்சர்வேடிவ் ஆட்சியை நிலைகுலைய செய்யும் என எதிர்வு கூறப்படுகிறது. அத்துடன் அவர் பதவி விலகினால், அரசு பெரும்பான்மையை இழக்க நேரிடலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஜோய்ஸின் தாயார் அவுஸ்திரேலிய பிரஜை. அவரது தந்தை நியூசிலாந்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கடந்த 1947ஆம் ...

Read More »

சிட்னியில் “கலைமாமணி” தேச மங்கையர்க்கரசி!

சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் இனிய இலக்கிய சந்திப்பு எதிர்வரும் 19ம் திகதி Redgum Function Centre, 2 Lane Street, Wentworthville எனும் முகவரியில் பிற்பகல் 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பிரபல சொற்பொழிவாளர் திருமதி தேச மங்கையர்க்கரசி பங்கேற்கவுள்ளார்.

Read More »

விஜயகலா கைது செய்யப்பட்டாரா? – விமல் வீரவன்ச

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரை காப்பாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா? என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்க கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியார்ளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “தமிழ் பிரிவினைவாதிகளின் தேவைக்காகவே புதிய அரசியல் யாப்பு ஒன்று ஏற்படுத்தப்படுகின்றது. இந்நிலையில், காணாமல் ஆக்கப்படுதலை குற்றமாக்கும் சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டால் ...

Read More »

குரோஷிய ஜனாதிபதி அவுஸ்ரேலியா விஜயம்!

அவுஸ்ரேலியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை குரோஷிய ஜனாதிபதி கொலின்டா கிராபர் கிராரோவிக், முதற் தடவையாக மேற்கொண்டுள்ளார். அவுஸ்திரேலிய ஜனாதிபதியை குரோஷிய ஜனாதிபதி கொலின்டா, சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகிறது. மேலும், அவர் தனது விஜயத்தின் ஒருபகுதியாக நேற்று ( 13,ஞாயிற்றுக்கிழமை) சிட்னியிலுள்ள தேவாலயமொன்றுக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.  

Read More »

அவுஸ்திரேலியாவின் பிரதிப்பிரதமர் இரட்டை பிரஜாவுரிமைக்குரியவர் !

அவுஸ்திரேலியாவின் பிரதிப்பிரதமர்  பார்னபி ஜொய்ஸ் இரட்டை பிரஜாவுரிமைக்குரியவர் என்பதை நியுசிலாந்து உறுதிசெய்துள்ளதை தொடர்ந்து அவுஸ்திரேலிய அரசியலில் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது நியுசிலாந்தின் உள்துறை அமைச்சரின் அலுவலகம் நியுசிலாந்து பிரஜையொருவரிற்கு பிறந்த குழந்தைக்கு  நியுசிலாந்து பிரஜாவுரிமை வழங்கப்படுவது வழமை என தெரிவித்துள்ளதை தொடர்ந்தே இந்த சர்ச்சை உருவாகியுள்ளது. இதனை உறுதிசெய்துள்ள நியுசிலாந்து பிரதமரும் அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் ஓரு நியுசிலாந்து பிரஜை என   தெரிவித்துள்ளார். எனினும் தான் அவுஸ்திரேலிய சட்டத்தை மீறவில்லை என தனக்கு சட்டத்துறையினர்  ஆலோசனை வழங்கியுள்ளனர் எனவும் தான் தொடர்ந்தும் பிரதிபிரதமராக பதவி ...

Read More »