கொடைக்கானல் கொடைக்கானலில் வனப்பகுதியிலிருந்து வெளிவந்த அரியவகை ஆந்தை ஓன்று குடியிருப்பு பகுதியில் சிக்கியது. பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தமிழ்நாடு ஓட்டல் செல்லும் வழியில் குடியிருப்பு பகுதி உள்ளது.
இங்கு அரிய வகை ஆந்தை கீழே விழுந்து கிடந்தது. அவற்றை பாதுகாப்பாக மீட்ட பொதுமக்கள், அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த ஆந்தை அவுஸ்ரேலியா நாட்டில் உள்ள ஆந்தை இனத்தை சேர்ந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
ரேஞ்சர் ரவி கூறியதாவது: வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஆந்தை வந்திருக்கலாம். ஆந்தையை அடர்ந்த வனப்பகுதியில் விட்டுள்ளோம், என்றார்.
Eelamurasu Australia Online News Portal