புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரை காப்பாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா? என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்க கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியார்ளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“தமிழ் பிரிவினைவாதிகளின் தேவைக்காகவே புதிய அரசியல் யாப்பு ஒன்று ஏற்படுத்தப்படுகின்றது. இந்நிலையில், காணாமல் ஆக்கப்படுதலை குற்றமாக்கும் சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டால் பாரிய விளைவுகளை சந்திக்கவேண்டிவரும்.
இதன் காரணமாக புலம்பெயர் தமிழ் மக்களின் எண்ணம் ஈடேறும். மறுபுறம் காணாமல் போனோர் தொடர்பில் ஆய்வு செய்ய நீதிமன்றம் மற்றும் சமஷ்டி யாப்பு ஏற்படுத்தப்படும். இது நாட்டிற்கு பாரிய ஆபத்தானது.”
இதேவேளை, புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரை காப்பாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும், பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, படுகொலை செய்த நபரை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காப்பாற்றுவாராயின் நீதி செயற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal