செய்திமுரசு

நான் ஏன் நாடாளுமன்றம் செல்கின்றேன்’?

நாட்டில் தீவிரமாக பரவிச்செல்லும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை. அதேபோன்று இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைவது பயங்கரமான நிலையாகும். இதற்கு எதிர்க்கட்சியும் மாற்று வழியொன்றை இதுவரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவில்லை. அதனால் இது தொடர்பில் குரல்கொடுக்க வேண்டும் என உணர்ந்தே நாடாளுமன்றத்துக்கு செல்வதற்கு தீர்மானித்திருக்கின்றேன் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் நாடாளுமன்றம் செல்வதற்கு ; நான் எதிர்பார்த்திருக்கவில்லை. என்றாலும் இதுதொடர்பில், பாரிய அழுத்தம் வந்தது. விசேடமாக ...

Read More »

கொரோனாச் சந்தைகளும் தமிழ் அரசியல்வாதிகளும்

கிளிநொச்சியைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர் சொன்னார்.திரு நகரிலும் உதய நகரிலும் கொரோனாச் சந்தைகள் இயங்குவதாக.பிரதான சந்தைகள் மூடப்பட்ட காரணத்தால் தற்காலிக கள்ளச் சந்தைகளாக இவை இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.சிலசமயங்களில் உதயநகர் சந்தையில் படைத்தரப்பும் வாகனத்தை நிறுத்திவிட்டு பொருள் வாங்குவதை தான் கண்டதாகவும் சொன்னார். இதைப்போலவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒர் ஊடகவியலாளர் சொன்னார் கொக்குவில் இந்து பள்ளிக்கூடத்தின் மைதான வீதியில் காலை வேளைகளில் ஒரு மீன் சந்தை இயங்குவதாகவும் அது மிகவும் நெரிசலான ஒரு சந்தை என்றும்.யாழ்ப்பாணம் பாசையூர் சந்தையும் இயங்குகிறது. இடையில் போலீசாரோடு சில ...

Read More »

பிரியா குடும்பத்தை உடனடியாக விடுவிக்குக

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரியா-நடேஸ் குடும்பத்தை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமென ஒன்பது மருத்துவ அமைப்புகள் ஒன்றாக இணைந்து கோரிக்கைவிடுத்துள்ளன. நீண்டகாலம் தடுப்புமுகாமில் வாழ்வது பிரியா-நடேஸ் தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கும் பாரதூரமான பாதிப்புகளை உண்டுபண்ணும் என்பதால் இனிமேலும் தாமதிக்காமல் இக்குடும்பம் சமூகத்தில் வாழ அனுமதிக்கப்படவேண்டுமென Royal Australasian College of Physicians (RACP) அமைப்பு உட்பட ஒன்பது அமைப்புகள் கடிதம் மூலம் கோரிக்கைவிடுத்துள்ளன நீண்டகால தடுப்புமுகாம் வாழ்க்கை குழந்தைகள் மற்றும் சிறுவர்களில் அளவிட முடியாத மனநிலை பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் இந்நிலை ...

Read More »

இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றார்

இஸ்ரேலில் பெஞ்சமின் நேதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி பெஞ்சமின்-நேதன்யாகு பிரதமராக இருந்து வந்தார். அங்கு 2 ஆண்டுகளாக 4 முறை பாராளுமன்ற தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின்-நேதன்யாகு கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது. இதற்கிடையே, ...

Read More »

ஆஷஸ் தொடருக்கு உதவாது: வாகன் எச்சரிக்கை!

நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில், மைக்கேல் வாகன் எச்சரித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்பின் டி20 உலகக்கோப்பையில் விளையாடிய பின்னர், ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது. இந்திய தொடருக்கு முன் நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இரண்டிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை. முதல் போட்டியில் ஒருநாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால் அந்த ஆட்டம் ...

Read More »

39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட குடும்பத்தை உடைய மிசோரம் நபர் காலமானார்

ஜியோனா சனா என்பவரின் குடும்பத்தால் மிசோரமின் ஒரு கிராமம் குறிப்பிடத்தகுந்த சுற்றுலா இடமாக மாறியது குறிப்பிடத்தக்கது மிசோரம் மாநிலத்தின் பங்தங் டிலாங்நுயம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஜியோனா சனா. 76 வயதான இவருக்கு 39 மனைவிகள், 94 குழந்தைகள். உலகின் மிகப்பெரிய குடும்பத்தை உடையவர் என்ற பெருமைக்குரியவர். இவர் காலமாகிவிட்டதாக அம்மாநில முதல்வர் ஜோரம்தங்கா தெரிவித்துள்ளார். மேலும், ஜியோனா தானாவின் குடும்பத்தால் அவர் வசித்த பக்தங் கிராமம் மற்றும் மிசோரம் குறிப்பிடத்தகுந்த வகையில் சுற்றுலா பயணிகள் கவனத்தை ஈர்க்கும் இடமாகியது என முதலமைச்சர் ...

Read More »

எங்கள் நிறுவனம் எந்த மின்னஞ்சலையும் அழிக்கவில்லை

எங்கள் நிறுவனம் எந்த மின்னஞ்சலையும் அழிக்கவில்லை என்பதை எங்களால் உறுதியாக தெரிவிக்கமுடியும் என எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்ளுர் முகவரான சீ கொன்சேர்ட்டியம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பலில் நைட்ரிக் அசிட் கசிவு காணப்படுகின்றது என சர்வதேச கடற்பரப்பில் கப்பல் நின்றவேளை இலங்கைக்கு தகவல் வழங்கினோம் எனவும் அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சண்டே டைம்ஸிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 1 கப்பலில் இருந்தவர்களிற்கும் உங்களிற்கும் ஹார்பர் மாஸ்டருக்கும் இடையிலான இடையிலான மின்னஞ்சல்கள் ஏன் அழிக்கப்பட்டன? பதில் -எங்கள் நிறுவனம் எந்த மின்னஞ்சலையும் ...

Read More »

போக்குவரத்துக் கட்டுப்பாடு களைப் பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் எதிராளிகளை ஒடுக்க முயல்கின்றது

போக்குவரத்து கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி அரசாங்கம் அரசியல் எதிராளிகளை ஒடுக்க முயல்கின்றது என ஜேவிபி குற்றம் சாட்டியுள்ளது. ஜேவிபியின் டில்வின் சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எழக்கூடிய கடும் எதிர்ப்பையும் விமர்சனங் களையும் ஒடுக்குவதற்காகவே அரசாங்கம் நாடளாவிய ரீதியில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை நீடித்தது என டில்வின் சில்வா தெரிவித் துள்ளார். தனது குறைபாடுகளை மறைப்பதற்காக அரசாங்கம் போக்குவரத்துக் கட்டுப் பாடுகளைப் பயன்படுத்து கின்றது என அவர் தெரிவித் துள்ளார். ஆடைத் தொழிற்சாலைகள், அரச அலுவலகங்கள், சிறிய வர்த்தகங்கள், சில கடைகள் தொடர்ந்தும் இயங்குகின்றன ...

Read More »

ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை அரசாங்கம் அரசியல்மயப்படுத்தக்கூடாது – அதனை இழந்தால் பெரும் பாதிப்பு

ஜிஎஸ்பி பிளஸ் சலுகை இரத்துச்செய்யப்படலாம் என இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை நம்பியுள்ளது அதனை இழந்தால் இலங்கையின் நாணயம் மேலும் பெறுமதி இழக்கும் டொலரின் பெறுமதி 300 ருபாயாக அதிகரிக்கும் ஐரோப்பிய ஓன்றியத்திடமிருந்து கிடைக்கும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்லுகையை அரசியல்மயப்படுத்தவேண்டாம் என ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில்விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுவதற்காக 2017 இல் மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்கான நடவடிக்கைகளை தனது அரசாங்கம் எடுத்தது என அவர் தெரிவித்துள்ளார். இதனை ...

Read More »

தமிழக கடல் வழியாக கனடா செல்ல முன்ற 27 இலங்கையர்கள் கைது

கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி வெளிநாடுளுக்கு ; தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் இந்திய காவல் துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகம் சென்று தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு கடந்த 27 ஆம் திகதி இலங்கை புத்தளம் மாவட்டம் சிலாபத்துறையிலிருந்து 24 ஆண்கள் இரண்டு பெண்கள் ஒரு குழந்தை என மொத்தமாக 27 பேர் ;கடல்வழியாக சட்டவிரோதமான முறையில் தூத்துக்குடி சென்றடைந்துள்ளனர். தூத்துக்குடிக்கு சென்ற 27 பேரும் மதுரையில் தங்கி ...

Read More »