எங்கள் நிறுவனம் எந்த மின்னஞ்சலையும் அழிக்கவில்லை

எங்கள் நிறுவனம் எந்த மின்னஞ்சலையும் அழிக்கவில்லை என்பதை எங்களால் உறுதியாக தெரிவிக்கமுடியும் என எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்ளுர் முகவரான சீ கொன்சேர்ட்டியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கப்பலில் நைட்ரிக் அசிட் கசிவு காணப்படுகின்றது என சர்வதேச கடற்பரப்பில் கப்பல் நின்றவேளை இலங்கைக்கு தகவல் வழங்கினோம் எனவும் அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சண்டே டைம்ஸிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
1
கப்பலில் இருந்தவர்களிற்கும் உங்களிற்கும் ஹார்பர் மாஸ்டருக்கும் இடையிலான இடையிலான மின்னஞ்சல்கள் ஏன் அழிக்கப்பட்டன?

பதில் -எங்கள் நிறுவனம் எந்த மின்னஞ்சலையும் அழிக்கவில்லை என்பதை எங்களால் உறுதியாக தெரிவிக்கமுடியும். எக்ஸ்பிரஸ்பேர்ள் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் வருவதற்கு முன்னர் இடம்பெற்ற விடயங்கள் குறித்த தடயங்களை அழிப்பதற்காக- நிறுவனம் ஆதாரங்களை அழித்தது என்ற உணர்வை உருவாக்குவதற்காக பல தரப்பினர் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இது முற்றிலும் பொய்யான விடயம் சிஐடியினரிடம் நாங்கள் வழங்கிய கணிணிகள் மூலம் இதனை உறுதிப்படுத்த முடியும். குறிப்பிட்ட மின்னஞ்சல்கள் அழிக்கப்படவில்லை அவை உள்ளன என என்னால் உறுதியாக தெரிவிக்க முடியும்.

கேள்வி- தங்கள் கொள்கலன் ஒன்றில் நைட்ரிக் அசிட் கசிவு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து இலங்கை அதிகாரிகளிற்கு கப்பலில் இருந்தவர்கள் எப்போது அறிவித்தனர்

பதில்-
கப்டனின் மின்னஞ்சல் இலங்கை முகவருக்கு 19ம் திகதி 6.42 மணிக்கு அனுப்பப்பட்டுள்ளது,கொள்கலனில் புகைவருகின்றது,தீ ஆபத்து இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,அவ்வேளை கப்பல் சர்வதேச கடற்பரப்பில் காணப்பட்டது.
3
நீங்கள் – அதாவது முகவர் அதனை தொடர்ந்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எப்போது நடவடிக்கை எடுத்தீர்கள்?
பதில்- இலங்கை துறைமுக அதிகாரசபையின் போர்ட் மாஸ்டரிற்கு மறுநாள் இதனை அறிவித்தோம்,

கொள்வனவில் கசிவும் புகையும் காணப்படுகின்றது,கொள்கலனை அகற்றுவதற்கு அனுமதி வேண்டும் என எங்கள் மின்னஞ்சலில் தெரிவித்துள்ளோம்.

கேள்வி – எனினும் உங்கள் மின்னஞ்சல் அனுப்பப்படுவதற்கு முன்னரே கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்துவிட்டது- இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதற்கு அனுமதி கோரியது யார்? இலங்கைக்குள் கப்பலை அனுமதித்தது யார்?

பதில்- இது இலங்கை துறைமுகத்திற்கான வழமையான பயணம் என்பதால் நாங்கள் விசேட வேண்டுகோளை விடுக்கவேண்டிய தேவை எழவில்லை.

எங்கள் மின்னஞ்சலை தொடர்ந்து அதிகாரிகள் கப்பலிற்குள் ஏறி கப்பலை ஆராய்ந்தவேளை கப்பலில் தீ பரவவில்லை.

கேள்வி
கப்பலில் தீப்பிடிக்ககூடிய பொருட்கள் உள்ளன என நீங்களோ அல்லது கப்பலின் கப்டனோ ஹார்பர் மாஸ்டருக்கு செய்தி அனுப்பினீர்களா?

பதில் – கப்பலில் அவ்வாறான பொருள் காணப்படுகின்றது என இலங்கை அதிகாரிகளிற்கு தெரிவித்தோம்,