செய்திமுரசு

யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்களின் ஒளிப்படக் கண்காட்சி!

யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் மாணவர்கள் இருளென்பது குறைந்த ஒளி என்னும் கருப்பொருளிலான ஒளிப்படக் கண்காட்சியையும், விவரணப்படங்கள் திரையிடலையும் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் நடாத்தி இருந்தனர். ஊடகக் கற்கைகள் மாணவர்களது தேர்வு செய்யப்பட்ட நூற்றுக்கும் அதிகமான ஒளிப்படங்கள் இந்தக் கண்காட்சியில் காட்சி படுத்தப்பட்டன. குறித்த ஒளிப்படங்கள் யாவும் இயற்கை ஒளியமைப்பைப் பயன்படுத்தியே பதிவுசெய்யப்பட்டவை என்பதுடன், மக்களின் பண்பாடு, பொருளியல், சமூக வாழ்க்கை, சுற்றுச் சூழல் என்பவை இவற்றின்வழி வெளிக்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊடகக் கற்கைகள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட ...

Read More »

ஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் மைத்திரியிடம் கையளிப்பு!

“சிறுவர்களைப் பாதுகாப்போம் ” தேசிய செயல்திட்டம் தொடர்பான  சிறிலங்கா ஜனாதிபதியின் கிளிநொச்சி மாநாட்டில் ஆனந்தசுதாகரனை விடிவிக்க கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் மாகாணக் கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரனால் கையளிக்கப்பட்டது. தாயை இழந்தும்,தந்தையைச் சிறையில் அடைக்கப்பட்டதாலும் அனாதரவாக்கப்பட்டு, உறவினரின் அனுசரணையில் வாழும்,இரு சிறுவர்களின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உத்தரவாதம் செய்யும் வகையில் அரசியல் கைதியான, ஆனந்தசுதாகரன் ஜனாதிபதியின் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படவேண்டுமென வடக்குக் கிழக்கு,தெற்கு,மேற்கு என இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மற்றும் சமுக,அரசியல் அமைப்புக்கள் ஏராளமான கையெழுத்துப் போராட்டங்களை ...

Read More »

பேச்சுவார்த்தைகளால் தீர்க்க முடியாததை துப்பாக்கிகளால் நிச்சயம் தீர்க்க முடியாது!

ஒரு பத்திரிகையாளரின் இறுதிச் சடங்கில் ஏன் இத்தனை பேர் கூடவேண்டும் என்கிற கேள்வி அந்தப் புகைப்படங்களைப் பார்த்ததும் தனிச்சையாக எழுந்தது. கொள்கைகளால் பிரிவுபட்டிருந்த காஷ்மீரின் அனைத்துத் தரப்பு அரசியல்வாதிகளும் பலத்த மழைக்கு இடையே சையது சுஜாத் புகாரி குடும்பத்தின் கல்லறைத் தோட்டத்தில் அவரை நல்லடக்கம் செய்யக் கூடியிருந்தார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தங்களின் அமைதியான வாழ்வுக்காக போராடியவரை இறுதியாகப் பார்க்க வந்ததில் ஆச்சரியம் இல்லைதான். சகபத்திரிகையாளர்களே மக்களுக்கான சுஜாத்தின் பங்களிப்பை விவரிக்கிறார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் மிகத் ...

Read More »

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முதன் முறையாக சர்வதேச யோகா தினம்!

ஆஸ்திரேலிய நாட்டின் பாராளுமன்றத்தில் முதன் முறையாக கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினத்தில் முன்னாள் பிரதமர் டோனி அப்போட் பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டார். ஜுன் 21-ம் திகதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆஸ்திரேலிய நாட்டின் வாசுதேவ் கிரியா யோகா என்ற அமைப்பின் சார்பில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி அப்பேட் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினார். இதுதொடர்பாக பேசிய அவர், ...

Read More »

ட்ரம்ப் – கிம் சந்திப்பு: பலன் யாருக்கு?

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்புக்கு பிறகு நாடு திரும்பியதும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ட்விட்டரில் இவ்வாறு பதிவிடுகிறார் ‘நம்முடைய மிகப்பெரிய மற்றும் மிக ஆபத்தான பிரச்சினை வட கொரியா என்று அதிபர் ஒபாமா சொன்னார். இனிமேல் அப்படி இல்லை. இன்றிரவு நிம்மதியாக உறங்குங்கள்’. ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிட்டான் என்று ஒரு சொலவடை நம் ஊரில் உண்டு. அதுபோல, கிம் ஜாங் உன் உடனான சந்திப்புக்குப் பிறகு தனது பழைய நடவடிக்கைகளை மறக்கச் செய்து, ஒரே இரவில் ஒபாமாவின் ...

Read More »

6-ம் இடம் என்பது ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை பாதாளம்!

உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி ஐசிசி சர்வதேச ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6-வது இடத்துக்குச் சரிந்து, பாகிஸ்தானுக்கும் கீழாகச் சென்றுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி முதல் இரு போட்டிகளிலும் மோசமான தோல்வியை அடைந்த காரணத்தால், தரவரிசைப்பட்டியலில் பாதாளத்துக்குச் சென்றது. 6-ம் இடம் என்பது ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை பாதாளம் என்றேதான் கூற முடியும். இதற்கு முன் கடைசியாக தரவரிசைப்பட்டியலில் 6-ம் இடத்தில் கடந்த 1984ம் ஆண்டு ஆஸ்திரேலியா இருந்தது அதற்குப்பின் இப்போது சரிந்துள்ளது. இங்கிலாந்து ...

Read More »

அந்நியர்கள் பேராசைக்காரர்கள் எங்கள் நிலத்தைவிட்டுப் போகவேண்டும்!எங்கள் நிலம் எங்களுக்கே!

சிலியின் காடுகளைப் (Chilean forests) பற்றித் தெரியாதவன், இந்தப் பூமியை நன்குணர்ந்தவன் என்று சொன்னால் அதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்” – என்கிறார் சிலியன் கவிஞர் பாப்லோ நெருடா. அந்தப் பழைய கவிஞர் 50 வருடங்கள் கடந்து வந்து அவர் உலவித்திரிந்த சிலியின் மேற்குக் காடுகளைப் பார்த்தால் “நாம வேற எங்கேயோ இருக்கிறோம்” எனக் குழம்பிவிடுவார். அந்த அளவிற்கு அந்த வனப்பகுதி முழுவதும் மாற்றமடைந்து தற்போது முழுக்கப் பைன் மற்றும் யூகலிப்டஸ் மரங்களால் நிரம்பியுள்ளது.  சிலியன் அரசாங்கமும், சில மேல்நாட்டு நிறுவனங்களும் அந்நாட்டின் ஒரு பகுதியான அரகானியாவில் ( ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பறக்கும் டாக்சி சேவை!

அவுஸ்திரேலியாவில் வான்வழி பறக்கும் டாக்சி சேவையை அறிமுகம் செய்ய Uber நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சிட்னியிலிருந்து மெல்போர்னுக்கு அல்லது மெல்போர்னிலிருந்து சிட்னிக்கும் அதி விரைவில் செல்லும் வகையில் வான்வழி பறக்கும் டாக்சி சேவை அறிமுகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னும் 2 ஆண்டுகளில், இந்த சேவையை அவுஸ்திரேலியாவில் அறிமுகம் செய்து 5 ஆண்டுகளில் அதாவது எதிர்வரும் 2023 ஆண்டுக்குள் இந்த சேவையை உலகம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. Uber நிறுவனம் அறிமுகம் செய்யும் இந்த பறக்கும் டாக்சி UberAir என்று அழைக்கப்படும் என ...

Read More »

புதிய அரசியல் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை!

புதிய அரசியல் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிலையில், தமிழ் மொழிக்கான சம அந்தஸ்த்தை ஏற்படுத்தும் 21வது திருத்தத்தை கொண்டுவருவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Read More »

மல்லாகம் துப்பாக்கிச் சூடு! மனித உரிமை ஆணைக்குழு நேரடி விசாரணை!

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக, யாழ்ப்பாணம் மாவட்ட மனித உரிமை ஆணையாளர் கனகராஜ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு தற்போது நேரடியாகச் சென்று விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பா.சுதர்சனின் உறவினர்களிடமும், சம்பவத்தை நேரில் கண்ட சிலரிடமும் அவர்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். மல்லாகம் சகாய மாதா ஆலயம் முன்பாக நேற்று(17) இரவு இந்தச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. தற்போது அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. காவல் துறையினர்   பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

Read More »