அவுஸ்ரேலிய இசைத்திருவிழாவில் அளவு கடந்து போதை மாத்திரைகளை உட்கொண்டதால் 23 வயதான ஆணும், 21 வயதான பெண்ணும் உயிரிழந்தனர். அவுஸ்ரேலியாவில் சிட்னி நகரில் 2009-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் இசைத்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் அந்த இசைத்திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் போதை மாத்திரைகளை உட்கொண்டு உற்சாகத்தில் மிதந்தனர். சிலர் அளவு கடந்து போதை மாத்திரைகளை உட்கொண்டதால் சுய நினைவுகளை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்திசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர். அங்கு 23 வயதான ஒரு ஆணும், 21 ...
Read More »செய்திமுரசு
கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார்! -ஸ்ரீகாந்தா
கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார் அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தான் வருவார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார் . நேற்று மடடக் களப்பு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலக அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த வருடத்துக்குள் தீர்வு இல்லை என்றால் நாங்கள் தீர்க்கமாக பேசி நல்லதொரு முடிவினை எமது மக்களுக்கு தெரிவிப்போம் ஆகவே மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கிழக்கை பொறுத்த வரையில் ...
Read More »விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்!
யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம் பின்வருமாறு கேட்டார். ‘முதலமைச்சர் விக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் எழுந்து நிற்க வைத்ததை ஒரு தரப்பினரும் சில ஊடகங்களும் ரசிப்பது போல தெரிகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமன்தான். ஒரு முன்னாள் நீதியரசராக இருந்தாலும் அவர் நீதிமன்ற ஒழுங்கிற்கு உட்பட்டவர்தான். ஆனால் அவர் ஒரு முன்னாள் நீதியமைச்சர் மட்டுமல்ல ஒரு முதலமைச்சரும் கூட. இப்போதுள்ள தமிழ் தலைவர்களில் அவர் ...
Read More »ஆட்சி மாற்றத்தின் பின் தீர்வு என்கிறார் பந்துல!
கடந்த 2017 ஆம் ஆண்டு ரவி கருணாநாயக்க ஐ.ஓ.சி. நிறுவனத்துடன் செய்துகொண்ட முறையற்ற உடன்படிக்கையே எரிபொருள் கட்டண மாற்றம் தொடர்பில் நீடித்து வரும் பிரச்சினைக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் 2020 ஆம் ஆண்டு மஹிந்தவின் தலைமைத்துவத்திலான ஆட்சியே தோற்றம் பெறும் என்று சர்வதேச நிறுவனங்கள் கருத்துக்கணிப்புக்களின் ஊடாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இக்கணிப்புக்கள் நிச்சயம் வெற்றிப் பெறும் என்றார். அத்துடன் அரசாங்கத்தின் முறையற்ற மூன்று வருடகால பொருளாதார முகாமைத்துவத்தினால் பொருளாதாரம் பல துறைகளை பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. ஆகவே ...
Read More »பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த குழந்தைகள்!
ஜெர்மனி நாட்டின் ஹம்பர்க் நகரில் பெற்றோர்கள் செல்போனே கதி என இருந்ததால் 7 வயதே நிரம்பிய குழந்தைகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஜெர்மனி நாட்டில் இருக்கும் ஹம்பர்க் என்ற நகரில் ஏழு வயது நிரம்பிய குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “போராட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறோம். ஏனென்றால் நீங்கள் எப்போதும் மொபைல் போன்களை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என எழுதப்பட்ட பதாகைகளை தூக்கிகொண்டு அவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இந்த போரட்டத்தை ...
Read More »கட்டாய தடுப்புக்காவலில் உள்ள மூவர்: அவுஸ்திரேலியாவுக்கு ஐ.நா. கண்டனம்!
அவுஸ்திரேலியாவில் சட்டத்துக்கு முரணான வகையில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலான கட்டாயத்தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மூன்று புகலிடக்கோரிக்கையாளர்களது விடுதலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பொன்று கண்டனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்கும் “UN working group on arbitrary detention -சட்டத்துக்கு முரணான தடுப்புக்காவல்களை கண்காணிக்கும் சர்வதேச அமைப்பு” இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது. பல்வேறு நாடுகளிலும் உள்ள தடுப்புக்காவல்களில் அந்நாட்டு அரசாங்கங்கள் இவ்வாறு சட்டத்துக்கு முரணான வகையில் – நீண்ட காலமாக – தடுப்புக்காவலில் வைத்திருக்கும் 94 பேர் சம்பந்தப்பட்ட விடயங்களை ...
Read More »ஆட்கடத்தல்களை தடுப்பதற்கு, அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகள்!
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படுகின்ற ஆட்கடத்தல்களை தடுப்பதற்கு, அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக விமான நிலையங்களிலும், விமானங்களிலும் ஆட்கடத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றவர்களை அடையாளம் கண்டு தடுக்கும் வகையிலான வேலைத்திட்டம் தற்போது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் சிறிலங்கன் விமான சேவையில் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. அதற்கான பயிற்சியளிப்புகளும் விமான சேவையாளர்களுக்கு அவுஸ்திரேலியாவினால் வழங்கப்பட்டு வருகிறது.
Read More »அவுஸ்திரேலியாவுக்கு தெங்கு உற்பத்திகளை அதிகளவில் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!
அவுஸ்திரேலியாவிற்கு இலங்கையில் இருந்து தெங்கு உற்பத்திகளை அதிகளவில் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது. இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் மெல்பேர்னில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் ஆகியோர், அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றனர். இதில் இலங்கையின் தெங்கு உற்பத்தி ஏற்றுமதியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Read More »தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை எழுந்து நிற்க மறுத்த சிறுமி!
அவுஸ்திரேலியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டவேளை அதற்கு மரியாதை செலுத்துவதற்கு எழுந்து நிற்க மறுத்த 9 வயது சிறுமி தொடர்பில் பெரும் சர்ச்சை மூண்டுள்ளது. ஹாப்பர் நியெல்சன் எனற சிறுமியே இவ்வாறு தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்க மறுத்துள்ளார். தேசிய கீதம் நாட்டின் பூர்வீக மக்களை அவமதிக்கின்றது என கருதியதாலேயே அது இசைக்கப்பட்டவேளை நான் எழுந்து நிற்கவில்லை என அந்த சிறுமி தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தேசிய கீதம் வெள்ளையினத்தவர்களை மையமாக கொண்டது சுதேசிய மக்களை முற்றாக புறக்கணிக்கின்றது எனவும் சிறுமி தெரிவித்துள்ளார். சிறுமியின் இந்த கருத்திற்கு வலதுசாரி ...
Read More »குருந்தூர் மலை பகுதியில் பாரம்பரிய வழிப்பாடுகளில் ஈடுபட அனுமதி!
முல்லைத்தீவு – குருந்தூர் மலை பகுதியில் பாரம்பரிய வழிப்பாடுகளில் ஈடுபட்டு வந்த மக்கள் அங்கு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அண்மையில் குறித்த பகுதியில் பிக்குமார்கள் உள்ளிட்ட சிலர் ஆய்வு செய்வதற்காக சென்றிருந்த நிலையில், அங்குள்ள மக்கள் கூடி அவர்களை அங்கிருந்து வெளியேற்றியிருந்தனர். இந்தநிலையில், இது குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது. நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, குறித்த பிக்குமார்கள் உள்ளிட்டவர்களுக்கு அங்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ள முடியாது எனவும் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. அத்துடன், அவர்களை ...
Read More »