கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார் அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தான் வருவார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார் .
நேற்று மடடக் களப்பு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட செயலக அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்துக்குள் தீர்வு இல்லை என்றால் நாங்கள் தீர்க்கமாக பேசி நல்லதொரு முடிவினை எமது மக்களுக்கு தெரிவிப்போம் ஆகவே மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
கிழக்கை பொறுத்த வரையில் தமிழ் கட்சிக்குல் அறுதி பெரும்பாண்மையை பெற்று கொண்டதில்லை ஆகவே இங்கு ஆட்சி அமைப்பது என்பது மிகவும் ஒரு பாரிய சவலாகத்தான் இருக்கும்.
எனவே எமது கட்சி மக்களின் நலன் சார்ந்து எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் ,வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜி லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
Eelamurasu Australia Online News Portal