கடந்த 2017 ஆம் ஆண்டு ரவி கருணாநாயக்க ஐ.ஓ.சி. நிறுவனத்துடன் செய்துகொண்ட முறையற்ற உடன்படிக்கையே எரிபொருள் கட்டண மாற்றம் தொடர்பில் நீடித்து வரும் பிரச்சினைக்கு காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் 2020 ஆம் ஆண்டு மஹிந்தவின் தலைமைத்துவத்திலான ஆட்சியே தோற்றம் பெறும் என்று சர்வதேச நிறுவனங்கள் கருத்துக்கணிப்புக்களின் ஊடாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இக்கணிப்புக்கள் நிச்சயம் வெற்றிப் பெறும் என்றார்.
அத்துடன் அரசாங்கத்தின் முறையற்ற மூன்று வருடகால பொருளாதார முகாமைத்துவத்தினால் பொருளாதாரம் பல துறைகளை பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது.
ஆகவே அரசாங்கம் தனது நிர்வாக இயலாமையினை மறைக்க கடந்த அரசாங்கத்தின் மீது வீண் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம், தற்போது இடம்பெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றார்.
Eelamurasu Australia Online News Portal