ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சாதாரண அப்பாவி முஸ்லிம்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கத்தில் பதவி வகிக்கும் முஸ்லிம் எம்.பி. க்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இதன்போதே, பைஸர் முஸ்தபா எம்.பி., ஏனைய முஸ்லிம் எம்.பி.க்கள் ...
Read More »செய்திமுரசு
கோடீஸ்வரராக இருந்தவர் நடுத்தெருவுக்கு வந்த பரிதாபம்!
அவுஸ்திரேலியாவில் £17 மில்லியன் லொட்டரியில் வென்ற நபர் மொத்த பணத்தையும் தவறான முதலீட்டால் இழந்துள்ளார். ஷெரீப் கிர்கிஸ் என்பவருக்கு தற்போது 35 வயதாகிறது. இவருக்கு கடந்த 2007-ல் 23 வயதிருக்கும் போது லொட்டரியில் £17 மில்லியன் பரிசு விழுந்தது. ஆனா இவ்வளவு பெரிய பரிசு பணம் அவர் வாழ்க்கையை வசந்தமாக மாற்றிவிடவில்லை என்றால் நம்பமுடிகிறதா? ஆம், ருசல் போலிவிகா என்ற நபரின் வழிகாட்டுதலோடு பரிசு பணத்தில் மதுபான விடுதியை விலை கொடுத்து வாங்கியது, சொகுசு படகை வாங்கியது போன்ற விடயங்களில் ஷெரீப் முதலீடு செய்தார். ...
Read More »இறந்த குழந்தையின் புகைப்படத்தை வைத்து பெற்றோரை மிரட்டிய இளம்பெண்!
அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜே மற்றும் டீ விண்ட்ரோஸ் என்கிற தம்பதியினரின் மகள் அமியா ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது. இந்த தம்பதியினர் ஒரு வணிகவளாகத்திற்கு சென்ற போது தங்களுடைய செல்போனை தவற விட்டுள்ளனர். அதில் இறந்த தங்களுடைய குழந்தையின் புகைப்படங்கள் இருப்பதால், யாரேனும் கண்டறிந்தால் தகவல் தெரிவிக்குமாறு பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இதனை பார்த்த சிட்டி நூர்ஹிதாயா கமல் (24) என்கிற மலேசிய இளம்பெண், நீங்கள் தவறவிட்ட செல்போன் என்னிடம் தான் இருக்கிறது. அவற்றை நான் பத்திரமாக கொடுக்க வேண்டும் என்றால் என்னுடைய ...
Read More »சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் பிரம்மாண்ட மேம்பாலம்!
தென்மேற்கு சீனாவில் 3 மாநிலங்களை இணைக்கும் வகையில் மாபெரும் உயரத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக தயார் நிலையில் உள்ளது. ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா உலகில் ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகப் பரப்பளவின்படி மூன்றாவது பெரிய நாடாகும். உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கிறது. சீனப் பெருஞ்சுவர் இந்நாட்டின் தொன்மையைக் கூறி நிற்கிறது. சீனாவின் தலைநகர் பீஜிங் ஆகும். அந்நாட்டின் வர்த்தகத் தலைநகராகச் ஷாங்காய் உள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் தற்போது 50 ...
Read More »தாக்குதலுடன் தொடர்பில்லாதவர்களை அவமதிக்க வேண்டாம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பானவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் இதனுடன் தொடர்புபடாதவர்களை அவதிக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் முக்கிய காரணி என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Read More »அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது!
நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தை, இனியும் நீடிக்கப்போவதில்லை என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திலிருந்து பதவி விலகிய அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், ஏ.எச்.எம். பௌஸி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா உள்ளிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்று (09) இரவு இடம்பெற்றது. இதன்போது, நாட்டில் அமுலில் இருக்கும் அவசரகாலச் சட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இலக்கு ...
Read More »கைவிடப்பட்ட கதை?
ஜனாதிபதி தேர்தலுக்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. வேட்பாளர்களாக களமிறங்கக்கூடியவர்கள் குறித்து அறிகுறிகள் காட்டப்படுகின்றனவே தவிர, திட்டவட்டமான அறிவிப்புகள் இதுவரையில் இல்லை. ஆனால், தேர்தலுக்கு இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில், பிரதான கட்சிகள் அல்லது கூட்டணிகள் அவற்றின் வேட்பாளர்களை அறிவிப்பதில் நீண்ட தாமதத்தைக் காட்டமுடியாதநிலை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இத்தடவை ஜனாதிபதி தேர்தலில் கட்சிகளினால் முன்வைக்கப்படக்கூடிய பிரதான பிரச்சினை எதுவாக இருக்கும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் ஜனாதிபதி தேர்தல்களில் பிரதான பிரசாரப்பொருளாக இருந்த ‘ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ...
Read More »மாணவர்கள் கடத்தப்பட்டமையை அறிந்திருந்தேன்!
தெஹிவளையில் 5 மாணவர்கள் கடத்தப்பட்டு, கிழக்கு கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்திருந்தார் என்பதை முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்புக்கொண்டுள்ளார். கொழும்பு பகுதியில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 11 பேர் குறித்து விசாரித்து வரும் குற்ற விசாரணைப் பிரிவு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் அளித்துள்ள ‘பி’ அறிக்கையிலேயே இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. தமது விசாரணைகளின்போதே தெஹிவளையில் 5 மாணவர்கள் கடத்தப்பட்டு, கிழக்கு கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்திருந்தார் என்பதை அட்மிரல் வசந்த கரன்னகொட ஒப்புக்கொண்டார் ...
Read More »விக்கி மீண்டும் சம்மந்தனோடு மீள இணைவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை !
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனால் கொண்டுவரப்பட்ட வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்; மீண்டும் சம்மந்தனோடு பேசி கூட்டமைப்பில் மீள இணைவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அது சாத்தியமாகுமா என்பது குறித்தும் எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் எங்கள் இனத்தின் தலைமைத்துவ வித்துவக் காய்ச்சல் இதற்கு வாய்ப்பளிக்காது என்றே நம்புகின்றேன். என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ர துணைத்தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ் கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வடக்கு ...
Read More »ஆஸ்திரேலிய அணியில் இருந்து கவாஜா விலகல்!
உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கவாஜா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மேத்யூ வடே சேர்க்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே தோல்வியடைந்தது. அந்த அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா இடம்பிடித்திருந்தார். தற்போது அவருக்கு ஹாம்ஸ்டிரிங் (தொடைப்பகுதியில்) இன்ஜூரி ஏற்பட்டுள்ளதால் அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேத்யூ வடேவை மாற்று வீரராக தேர்வு செய்துள்ளது ...
Read More »