தனது அரசாங்கத்தில் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவிற்கு பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும் என்பதைத் தவிர சஜித் பிரேமதாச வேறு பதவிகள் தொடர்பில் இதுவரை எதுவும் கூறவில்லை. அதேபோன்று எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவிருப்பது நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் மாத்திரமேயாகும். இதனூடாக பிரதமர் ஒருவர் நியமனம் செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வசந்த ...
Read More »செய்திமுரசு
அவுஸ்திரேலியாவில் சுறாவின் தாக்குதலில் காலை இழந்த சுற்றுலாவாசி!
அவுஸ்திரேலியாவில் நீருக்கடியில் நீந்தி கொண்டிருந்த வேளை பிரித்தாணியாவை சேர்ந்த இரண்டு சுற்றுலாவாசிகள் சுறாக்களின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்கள். அதில் ஒருவர் சுறாவினால் பலத்த தாக்குதலுக்குட்பட்டு ஒரு காலை இழந்துள்ளார். அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ஏர்லி பீச் அருகே 22 மற்றும் 28 வயதுடைய இருவர் ஸ்நோர்கெலிங் சுற்றுலா படகில் இருந்துள்ளார்கள். அவ்வேளை நீருக்கடியில் நீந்திய போது 22 வயதுடைய நபர் முதலில் சுறாவினால் தாக்கப்பட்டார், அவரது கீழ் காலில் சிதைவுகள் ஏற்பட்டது. பின்னர் சுறா மற்ற 28 வயதுடைய நபரைத் தாக்கி, காலை கடித்ததாக கூறப்படுகிறது. கப்பலில் இருந்த துணை மருத்துவர்களான ...
Read More »தாக்குதலுக்கு முன் டிஎன்ஏ சோதனை நடத்தி பாக்தாதி அடையாளத்தை உறுதி செய்த அமெரிக்க படை!
ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி மீதான தாக்குதலுக்கு முன்னதாகவே அவரது உள்ளாடையைக் கொண்டு மரபணு (டிஎன்ஏ) சோதனை நடத்தி அவரது அடையாளத்தை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திவந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி அமெரிக்கப் படைகளால் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டார். இதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதி காரப்பூர்வமாக அறிவித்தார். மேற்கு ஆசிய நாடுகளுள் ஒன்றான இராக்கை சேர்ந்தவர் அபுபக்கர் அல் பாக்தாதி (வயது 48). சிரியா மற்றும் ...
Read More »ஸ்ரீலங்கா ஈழம் சோசலிச குடியரசு என்னும் பெயரில் ஆட்சிமுறை!
சர்வதேச சோஷலிசத்தை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை,காணிவிடுவிப்பு மற்றும் இனப்பிரச்சினை என்பற்றிற்கு தீர்வினை பெற்றுத்தர எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்திருக்கும் சோஷலிச சமத்துவ கட்சி இதற்கு தகுந்த தீர்வினை பெற்றுத்தரும் வகையிலான செயற்பாடுகளை உலக அளவில் முன்னெடுத்து வருவதாகவும்,முதலாளித்துவத்தின் காரணமாகவே இந்த பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. சோஷலிச சமத்துவ கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை கலாநிதி என்.எம். பெரேரா நிலையத்தில் இடம் பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ...
Read More »தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா! -குயின்ஸ்லாந்
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கடந்த 27 ஆம் திகதி தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ் நிகழ்வு “ஆஸ்திரேலிய பட்டதாரிகள் சங்கத்தினரால்” நடாத்தப்பட்டது.
Read More »கருணா, பிள்ளையான் வழிகாட்டலில் தேர்தல் சதி!
ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் மீதான அச்சுறுத்தல் கள், வாக்கு மோசடிகள், வன்முறைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளை யான் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட இயக்கம் சார்ந்த வர்கள் களமிறக்கப்படும் அபாயம் நிலவுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் முறையிட்டுள்ளது. இது தொடர்பில் அக்கட்சி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் அவ்வமைப்பின் தேர்தல் கண்காணிப்பு குழுவின் அரசியல் பகுப்பாய்வாளர் மேரி பொலன்ட், தமது குழுவின் சார்பில் பிரியங்கா முனசிங்கவுடன் நேற்று செவ்வாய்க்கிழமை ...
Read More »வாக்குரிமையை உதாசீனப்படுத்தாதீர்கள் !
வாக்குரிமையின் முக்கியத்துவத்தைப் பற்றி எமது உயர்ந்த சட்டமான அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களின் இறைமை மக்களுக்குரியது. அதாவது இந்த நாடு மக்களுக்கு சொந்தமானது. அந்த இறைமை அதிகாரத்தை உதாசீனப்படுத்த முடியாது, மக்களே அதனை அனுபவித்தாக வேண்டும். இதற்கு அமைய இந்த இறைமையை அனுபவிப்பதற்கான ஓர் அணுகுமுறையாக வாக்குரிமை கூறப்பட்டுள்ளது. எனவே வாக்குரிமை என்பது மிகவும் முக்கியமானதொன்றாகும் என முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கையில் எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது. இத் ...
Read More »ஆஸ்திரேலியாவில் 50 பேர் கைது!
ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச சுரங்க வள மாநாட்டை எதிர்த்து போராடிய பருவநிலை ஆர்வலர்கள் 50 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பருவநிலை மாற்றத்திற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள பருவநிலை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் ஐ.நா சபையில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில், சுவீடன் நாட்டைச் சேர்ந்த பருவநிலை ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றம் பற்றிய விளைவுகள் குறித்து விளக்கினார். இதை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் பருவ நிலை மாற்ற போராட்டங்கள் ...
Read More »பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு ஊழல் வழக்கில் பாகிஸ்தான் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 24-ந்திகதி 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு என கருதி சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது உடல் நிலை மோசம் ...
Read More »சாரதிகளை சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலிய காவல் துறைக்கு அதிகாரம்!
மக்கள் கூட்டத்திற்குள் காரை வேகமாக ஓட்டி வந்து அசம்பாவித செயலில் ஈடுபட முயன்றால், அந்த வாகனத்தின் சாரதிகளை சுட்டுக்கொல்ல காவல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளை குறிவைத்து, காரை வேகமாக ஓட்டி வந்து மக்கள் மீது மோதச் செய்யும் சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. இதை தடுப்பதற்காக கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், காவல் துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. கடந்த 2017-ம் ஆண்டில் மெல்போர்னில் ...
Read More »