1981 இல் அச்சிடப்பட்ட புத்தகத்தில் இஸ்லாமிய மதத்தை விட்டு செல்பவர்களுக்கு மரணமே தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் சமூக வாழ்வியல் கட்டமைப்பை சிதைப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை பற்றி கூறப்பட்டுள்ளன இந்த தண்டனைகளால் தவறுகளை செய்யாத சமூக கட்டமைப்பை ஒன்றை உருவாக்குவதே இஸ்லாம் மதத்தின் நோக்கமாக உள்ளதெனவும் கூறப்பட்டுள்ளது என பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட கல்வி அமைச்சின் செயலாளர் – இ.எம்.எம். ரணசிங்கவிடம் தெரிவுக்குழு நடத்திய விசாரணைகளின் போதே அவர் இதனை தெரிவித்தார். கேள்வி – கல்வி அமைச்சின் செயலாளர் என்ற வகையில் இஸ்லாமிய ...
Read More »செய்திமுரசு
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து!
உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் ஜேசன் ராய் அதிரடி ஆட்டத்தால் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இங்கிலாந்து. இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரோன் பிஞ்ச் டக் அவுட்டனார். டேவிட் வார்னர் 9 ரன்னிலும், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய ...
Read More »அவுஸ்ரேலிய படகு விபத்தில் மூவர் உயிரிழப்பு!
அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். சிட்னிக்கு வடக்கே 160 கி.மீ (100 மைல்) தொலைவிலுள்ள நியூகேஸில் இன்று(வியாழக்கிழமை) இந்த படகு விபத்து இடம்பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்த அவசர மீட்பு படையினர் இருவரை காப்பாற்றியுள்ளனர். 40 வயதான ஆண்ணொருவரும், 16 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், குறித்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில் குறித்த படகு ...
Read More »பப்புவா நியூகினியா நாட்டில் பழங்குடியினர் மோதல் – 24 பேர் உயிரிழப்பு!
பப்புவா நியூகினியா நாட்டில் மலைவாழ் பழங்குடி இன மக்களிடையே நிகழ்ந்த மோதலில் 24 பேர் உயிரிழந்தனர். பசிபிக் பெருங்கடல் தீவு நாடு, பப்புவா நியூகினியா. அங்கு மலைவாழ் பழங்குடி இன மக்களிடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன. சட்டத்தின் ஆட்சியை அங்கு நிலை நிறுத்த முடியாமல் அரசாங்கம் திணறுகிறது. இந்த நிலையில், அங்கு இரு பழங்குடி இன மக்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தானியங்கி ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக்கொண்டனர். 3 நாட்களாக நடந்து வந்த இந்த மோதலில் 24 பேர் உயிரிழந்தனர். ...
Read More »நீண்ட நாள் போராட்டத்தின் பின் மீன் பிடிக்க இரு தமிழ் மீனவர்களுக்கு அனுமதி!
நீரியல் வள திணைக்களத்தின் ஊடக அனுமதி வழங்கப்பட்டபோதும் மீண்டும் குறித்த தமிழ் மீனவர்கள் பெரிய மடு குளத்தில் மீன்பிடிப்பதற்கான அனுமதி சகோதர இன மீனவர்களால் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடும் போரட்டத்தின் மத்தியில் ஆறு மாதங்களின் பின்னர் இரண்டு மீனவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டு குறித்த மீனவர்கள் நேற்று புதன் கிழமையிலிருந்து மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னார் – மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஈச்சளவாக்கை மற்றும் சன்னார் பகுதிகளில் நன்னீர் மீன் பிடியில் பல வருடங்களாக ஈடுபட்ட தமிழ் மீனவர்கள் ...
Read More »தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் தேடுதல்!
தமிழீழ விடுதலை புலிகளால் இறுதி போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் அகழ்வு நடவடிக்கை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் 27 ஆம் திகதி அதிகாலை இதே பகுதியில் தங்கத்தை தேடி 15 பேர் அடங்கிய குழு ஒன்றால் விசேட ஸ்கேனர்கள் மூலம் தேடுதல் நடத்தப்பட்டு அகழ்வு நடவடிக்கை ஆரம்பமாகவிருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக அனைவரும் கைது செய்யபட்டிருந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குழுவினரின் தகவலுக்கு அமைவாக ...
Read More »நல்லிணக்கத்துக்கான வழி!
அரசியல் கைதிகளின் விடுதலை மறந்து போன விவகாரமாக மாறிவிட்டது போலத் தோன்றுகின்றது. அரசாங்கம் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்ப தாகப் பல தடவைகளில் வாக்குறுதி அளித்திருக்கின்ற போதிலும், அதனை முடிவுக்குக் கொண்டு வருவதில் அக்கறையற்ற ஒரு போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் என்பதே அரசாங்கத்தினதும், பேரின அரசியல் வாதிகளினதும் நிலைப்பாடாகும். ஆனால் உண்மையில் அவர்கள் பயங்கரவாதிகளல்ல. அவர்கள் அரசியல் கைதிகள். இதனையே அந்தக் கைதிகளும், தமிழ்த் தரப்பினரும் அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கூறி வருகின்றார்கள். ...
Read More »எங்களை ரணில் நம்புவதில்லை!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தங்களை (கூட்டமைப்பை) நம்புவதைவிட, முஸ்லிம் அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையுமே நம்புவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கடந்த மாத இறுதியில் (ஜூன் 26), வவுனியா – பாலமோட்டை பகுதியில், அவரது விசேட நிதியில் அமைக்கப்பட்ட சனசமூக நிலையக் கட்டடத்தைத் திறந்து வைத்த பின்னர் ஊடவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறாகக் கூறியுள்ளார். இது, வெறுமனே சராசரியாக விட்டுவிடக் கூடிய கருத்து அல்ல. அத்துடன், சாதாரண நபர் கூறிய கருத்தும் அல்ல. தமிழ் ...
Read More »இந்தியா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு
அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கிற நாடாக இந்தியா நீண்ட காலமாக உள்ளது. இதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டியுள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா கூடுதல் வரி விதிப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். மேலும், முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை அவர் சமீபத்தில் நீக்கினார். அதைத்தொடர்ந்து கடந்த 28-ந் திகதி ஜப்பானின் ஒசாகா நகரில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின்போது டிரம்பும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசினர். அதில், ...
Read More »மரண தண்டனையை இல்லாதொழிப்பதற்கு இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் !
மரணதண்டனையை முற்றாக இல்லாதொழித்திருப்பதற்குத் தீர்மானித்திருக்கும் பல்வேறு சர்வதேச நாடுகளின் மத்தியில் இலங்கையும் ஒரு அங்கமாகும் என்ற அடிப்படையில், அதனை மீண்டும் நடைமுறைப்படுத்துவது என்பது மிக முக்கிய பிரச்சினையாகும். எனவே மிகவும் குரூரமானதும், இழிவானதுமான மரணதண்டனையை முற்றாக இல்லாதொழிப்பதற்கு இலங்கையர்கள் அனைவரும் உறுதிபூணுவதுடன், அதற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து அழைப்பு விடுத்துள்ளார். மரண தண்டனையை இல்லாதொழிப்பதற்கு இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ள காணொளி ...
Read More »