கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலுக்கு அண்மையாகவுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த வன்முறைக் கும்பல் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அங்கிருந்த தளபாடங்கள் மற்றும் உடைமைகளை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றது. குறித்த சந்தேக நபர்கள் 4 மோட்டார் சைக்கிள்களில் 10 பேர் கொண்ட கும்பல் முகத்தைக் கறுத்தத் துணியால் கட்டியவாறு வீட்டுக்குள் நுழைந்தது. குறித்த சந்தேக நபர்களின் கைகளில் வாள்கள், கத்திகள் மற்றும் கம்பிகள் காணப்பட்டன. வீட்டுக்குள் புகுந்து தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியதுடன் வீட்டிலிருந்த உடைமைகளை நாசமாக்கினர். வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு கும்பல் தப்பிச் சென்ற தாக காவல் துறையினர் ...
Read More »செய்திமுரசு
அவுஸ்திரேலியாவில் இருந்து தமிழ் குடும்பத்தை நாடுகடத்துவதில் பீற்றர் டட்டன் விடாப்பிடி!
இலங்கைக்கு தமிழ்க் குடும்பம் ஒன்றை நாடு கடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவுஸ்தி ரேலியாவின் பல்வேறு நகரங்களிலும் நேற்றுமுன்தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நடேசலிங்கம் – பிரியா தம்பதிகள் மற்றும் அவர்களின் 4 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளை நாடுகடத்துவதில் அவுஸ்ரேலிய அரசு விடாப்பிடியாக உள்ளது. கடந்த சனிக்கிழமை தனி விமானத்தில் ஏற்றப்பட்ட இந்தக் குடும்பத்தினரை, இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. விமானம் புறப்பட்ட பின்னர் நீதிபதி ஒருவர் தொலைபேசி மூலம் பிறப்பித்த உத்தரவினால் அந்த விமானம் மீண்டும் டார்வினுக்குத் திருப்பப்பட்டது. இதையடுத்து, அந்த தமிழ் ...
Read More »19வது திருத்தத்தை மையப்படுத்தி ஆட்சியதிகாரத்தில் போட்டி!
அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மையப்படுத்தி இன்று அரச அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகிய முக்கிய பிரதான பதவிகளுக்கிடையில் கடுமையாக போட்டித்தன்மை நிலவுகின்றது. அரசியல் நெருக்கடியின் விளைவினை நாட்டு மக்களே எதிர்க் கொள்கின்றார்கள் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜா-எல நகரில் நேற்று இரவு இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஏப்ரல்21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் என்று இன்று எவரும் கிடையாது. பொறுப்புக்கள் பிறிதொரு ...
Read More »கலிபோர்னியா படகு தீ விபத்து- 25 பேர் பலி – கடலில் மிதக்கும் சடலங்கள்!
கலிபோர்னியாவில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 25 பலியாகியுள்ளனர். கலிபோர்னியாவின் சண்டாகுறூஸ் கடற்கரை பகுதியில் படகில் ஏற்பட்ட தீ காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 25 பேர் பலியானதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.அவர்களின் உடல்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகின்றன. நான்கு உடல்களை மீட்டுள்ளோம்,ஆனால் அவைகளை அடையாளம் காணமுடியவில்லை என முன்னதாக அதிகாரிகள் தெரிவிதிருந்தனர். கொன்செப்டன் எனப்படும் படகிற்கு அருகில் நான்கு சடலங்கள் கடலில் மிதக்கின்றன எனவும் அதிகாரிகள் தெரிவிததிருந்தனர் படகில் 39 பேர் பயணித்துள்ளனர் இவர்களில் 26 பேரை காணவில்லை எனவும் ...
Read More »அவுஸ்திரேலிய விபத்தில் இலங்கை யுவதி பலி ! இருவர் கைது!
இலங்கையைச் சேர்ந்த யுவதியொருவரை அவுஸ்திரேலியாவில் விபத்திற்குள்ளாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை அவுஸ்திரேலியாவின் விக்டோரியப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மெர்பேர்ன், கிளெடன் பகுதியிலுள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கடந்த 29 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நிஷாலி பெரேரா என்ற 20 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்தார். அதிவேகமாக வந்த கார் ஒன்று வெலிங்டன், சீனெக் புலேவட் பகுதியில் வீதியைக் கடந்துகொண்டிருந்த மாணவியை மோதித்தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது. இதன் பின்னர் விபத்தினை ஏற்படுத்திய கார், சம்பவம் நடைபெற்று ஒரு ...
Read More »கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்கு பாதிப்பின்றி தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும்!
எதிர்வரும் டிசம்பர் மாதம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில் அதற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டிசம்பர் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை க.பொ.த. சா.த பரீட்சை நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளதுடன், அதற்கான நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இந்த நிலையிலேயே ஜனாதிபதித் தேர்தல் பரீட்சைக்குத் தடையாக அமையாது எனவும் ஆணைக்குழுவின் ...
Read More »தற்கெலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது!
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய பயங்ரவாதியின் தலை மற்றும் உடற்பாகங்கள் இந்து மாயனத்தில் புதைக்கப்பட்டதை அடுத்து குறித்த உடற்பாகங்கள் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதமன்றத்தின் உத்திவின் கீழ் தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளது. குண்டுதாரியின் தலை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த உடற்பாகங்கள் இந்து மாயனத்தில் புதைக்கப்பட்டமை தொடர்பில் அப்பிரேதச மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்படிருந்தனர். அத்தோடு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுப்பட்ட பொதுமக்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை ...
Read More »எனது குடும்பத்தினர் மீது கருணை காண்பியுங்கள்!- பிரியா
கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது குடும்பத்தினர் மீது கருணை காண்பித்து தங்களை அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்குமாறு பிரியா பிரதமர் ஸ்கொட் மொறிசனிற்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். கிறிஸ்மஸ் தீவிலிருந்து எஸ்பிஎஸ் தமிழ்ச்சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். தனது குடும்பத்தினர் சமீபத்தில் சந்தித்துள்ள துயரத்தின் சுமையை தான் உணர்வதாக தெரிவித்துள்ள அவர் தாங்கள் வாழ்ந்த குயின்ஸ்லாந்தின் சிறிய நகரிற்கு எப்போது மீண்டும் திரும்பலாம் என்பது குறித்து குழந்தைகள் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய பிரதமர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ,ஆகவே அவர் ...
Read More »வன்முறை களமாக மாறிய ஹாங்காங்!
வன்முறை களமாக மாறிய ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பதற்றம் உருவானது. ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் 31-வது வாரத்தை எட்டி உள்ளது. இதற்கிடையில், ஹாங்காங்குக்கு சர்வதேச ஓட்டுரிமை மறுக்கப்பட்டதின் 5-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று முன்தினம் மாபெரும் பேரணி நடைபெற்றது. தடையை மீறி இந்த பேரணி நடந்ததால், காவல் துறை போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர். இதில் காவல் துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. ஹாங்காங்கின் பல்வேறு நகரங்களிலும் காவல் ...
Read More »மஹிந்த ராஜபக்ஷவின் பேரம்!
வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களின் வாக்குகள் தீர்க்கமானவையாக இருக்கும் என்பதால், பேரம் பேசுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்து, பரவலாக இருக்கின்ற நிலையில், மஹிந்த தரப்பே பேரத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைத்து, தமிழ்க் கட்சிகள் தான் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பேரம் பேசும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், இதுவரையில் அவ்வாறான எந்தப் பேரமும் நடந்ததாகத் தெரியவில்லை. ஏற்கெனவே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த காலத்தில், அந்த அரசாங்கத்துடன் ஒட்டி, உறவாடிய தமிழ்க் கட்சிகள், எந்தப் பேரத்துக்கும் ...
Read More »