அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மையப்படுத்தி இன்று அரச அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகிய முக்கிய பிரதான பதவிகளுக்கிடையில் கடுமையாக போட்டித்தன்மை நிலவுகின்றது.
அரசியல் நெருக்கடியின் விளைவினை நாட்டு மக்களே எதிர்க் கொள்கின்றார்கள் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜா-எல நகரில் நேற்று இரவு இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஏப்ரல்21 ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் என்று இன்று எவரும் கிடையாது. பொறுப்புக்கள் பிறிதொரு தரப்பின் மீது சுமத்தப்படுகின்றதே தவிர எவ்வித உரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை. நாட்டு மக்கள் இன்று ஒரு சிறந்த அரசாங்கத்தை எதிர்பார்த்துள்ளார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.