கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலுக்கு அண்மையாகவுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த வன்முறைக் கும்பல் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அங்கிருந்த தளபாடங்கள் மற்றும் உடைமைகளை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றது. குறித்த சந்தேக நபர்கள் 4 மோட்டார் சைக்கிள்களில் 10 பேர் கொண்ட கும்பல் முகத்தைக் கறுத்தத் துணியால் கட்டியவாறு வீட்டுக்குள் நுழைந்தது. குறித்த சந்தேக நபர்களின் கைகளில் வாள்கள், கத்திகள் மற்றும் கம்பிகள் காணப்பட்டன.
வீட்டுக்குள் புகுந்து தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியதுடன் வீட்டிலிருந்த உடைமைகளை நாசமாக்கினர். வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு கும்பல் தப்பிச் சென்ற தாக காவல் துறையினர் தெ வித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal