சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐ.தே.க வின் உறுப்பினர்களை சந்தித்தமை எதிர்வரும் தேர்தலை மையப்படுத்திய இரகசிய கூட்டணிக்கான முயற்சியல்ல எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இந்த சந்திப்பு நாட்டின் தலைவர் என்ற வகையில் பொதுவானதொரு சந்திப்பாகவே அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. அத்துடன் நாட்டின் திட்டங்களை மையப்படுத்திய சந்திப்புகளை அரசியல் சாயம் பூசவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அக் கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார். சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ள ...
Read More »செய்திமுரசு
சு.க. தேசிய பட்டியல் உறுப்பினர்களுக்கு ஒருவார காலக்கெடு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூலம் தேசிய பட்டியலுக்கு ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகி ஏனைய கட்சிகளில் இணைந்து செயற்படும் உறுப்பினர்களுக்கு சுதந்திர கட்சியின் ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாவதற்கு இம் மாதம் 10 ஆம் திகதி வரை காலக் கெடு வழங்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவித்ததாவது : தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோருக்கு கடந்த ...
Read More »2019 ஜனாதிபதி தேர்தலின் தனித்தன்மை!
நவம்பர் 16 நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் 8வது ஜனாதிபதி தேர்தலாகும். முன்னைய 7 தேர்தல்களுடன் ஒப்பிடும்போது சில பிரத்தியேகமான — சுவாரஸ்யமான அம்சங்களை இத்தடவை தேர்தலில் காணக்கூடியதாக இருக்கிறது. முன்னைய ஜனாதிபதி தேர்தல்களில் பிரதான வேட்பாளர்கள் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக அல்லது எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்துக்கொண்டே போட்டியிட்டார்கள்.ஆனால், இத்தடவை அவ்வாறு யாருமே களத்தில் இல்லை. அரசியல் நிலைவரங்களை நோக்கும்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமதாசவுமே பிரதான வேட்பாளர்கள் ...
Read More »எனது தாயின் வாழ்வுடன் விளையாடிய அதே சக்திகள் எனது மனையுடனும்……!
எனது தாயின் வாழ்வுடன் விளையாடிய அதேசக்திகள் எனது மனைவியின் வாழ்க்கையுடனும் விளையாடுகின்றன என பிரிட்டிஸ் இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மார்க்கிலேயின் தனிப்பட்ட கடிதமொன்றை மெயில் ஞாயிறுபதிப்பில் வெளியிட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே ஹரி இதனை தெரிவித்துள்ளார். ஹரி மெயிலிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளார். மெயிலின் ; இந்த நடவடிக்கையை ஹரி தனது மனைவிக்கு எதிரான ஈவிரக்கமற்ற நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார். தனது தாய்க்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அதேநடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். விளைவுகள் குறித்து சிந்திக்காமல் ...
Read More »அவுஸ்திரேலிய வீராங்கனை மகளிர் இருபதுக்கு – 20 போட்டியில் புதிய உலக சாதனை!
மகளிர் இருபதுக்கு – 20 போட்டியில் புதிய உலக சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இலங்கை மகளிர் அணிக்கு எதிராக இடம்பெற்ற இருபதுக்கு – 20 போட்டியில் அவுஸ்திரேலிய வீராங்கனை அலீசா ஹீலி என்ற வீராங்கனையே இவ்வாறு புதிய உலக சாதனை படைத்துள்ளார். இலங்கை மகளிர் அணிக்கு எதிராக சிட்னியில் இடம்பெற்ற 3 ஆவது இருபதுக்கு – 20 போட்டியிலேயே குறித்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இப் போட்டியில், அவுஸ்திரேலிய வீராங்கனையான அலீசா ஹீலி 61 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 148 ஓட்டங்களைக் குவித்து மகளிர் சர்வதேச இருபதுக்கு – ...
Read More »ஜனாதிபதி வேட்பாளர் : ஹிஸ்புல்லாவின் முக்கிய அறிவிப்பு 5 ஆம் திகதி!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து எதிர் வரும் 5ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏற்கனவே முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கருத்துக்களை வெளியிட்டிருந்த நிலையில் அவரிடம் இது தொடர்பாக நேற்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது முடிவினை அறிவிக்கவுள்ளது. இந்த நிலையில் நான் தற்போது வெளிநாட்டில் நிற்கின்றேன். நான் நாட்டுக்கு வந்தவுடன் அவசரமாக ...
Read More »ஆயுதங்களை தயாரித்து விற்று போர்களை தூண்டும் நாடுகள்!
உலகெங்கும் இடம்பெற்று வரும் போர்களில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்களைத் தயாரித்து விற்று வரும் நாடுகள் பின்னர் அதே போர்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் அகதிகளை ஏற்க மறுத்து வருவதாக பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார். இத்தாலிய குடியேற்றவாசி பெற்றோருக்கு பிறந்த பாப்பரசர் பிரான்சிஸ் (82 வயது) குடியேற்றவாசிகள் மற்றும் அகதிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பாவிலுள்ள குடியேற்றவாசிகளுக்கு எதிரான அரசியல்வாதிகளின் குடிவரவுக் கொள்கை தொடர்பில் அவர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி ...
Read More »ரி – 56 ரக துப்பாக்கி ரவைகள் மீட்பு!
பதுளை – மகியங்கனை வீதியின் தல்தெனவின் உள்ள பாலத்திற்கு அருகில் இருந்து ரி- 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் மீட்டக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் தகவலுக்கமைய அப்பகுதியை சோதனையிட்ட காவல் துறையினர் பொதியிடப்பட்ட நிலையில் ரி- 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 737 ரவைகளை மீட்டுள்ளனர். இந்நிலையில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகளை யார் அப்பகுதியில் வைத்திருப்பார் என்ற கோணத்தில் காவல் துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »மெல்போர்னில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞன் பலி!
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியாவின் எம்பன்டன் பார்க் (Hampton Park) மேல் நிலை கல்லூரியில் கல்வி பயிலும் ரொரென்சோ ஜூரியன்ஸ் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேல்போர்ன் நகரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சாலையில் ரொரென்சோ ஜூரியன்ஸ் தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, நான்கு இளைஞர்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனத்துடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் பின்னர் படுகாயமடைந்த ரொரென்சோ ஜூரியன்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக அந் ...
Read More »ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரேமதாசாக்களின் போராட்டங்கள்!
கடுமையான சவால்களுக்கு முகங்கொடுத்து தந்தையார் ரணசிங்க பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தைப் பெற்றதைப் போன்று மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மகன் சஜித் பிரேமதாசவும் எதிர்ப்புக்களை முறியடித்து அதே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். கட்சி நியமனத்தை வழங்குகிறதோ இல்லையோ 1988 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டே தீருவதென்று முடிவெடுத்த தந்தையார் தனது நீண்டகால அரசியல் விசுவாசியான சிறிசேன குரேயிடம் தேர்தலைச் சந்திக்கத் தயாராகுமாறு கூறியது பழைய அரசியல் அவதானிகளுக்கு நன்கு நினைவிருக்கும். அதே போன்றே மகனும் தன்னை ஐக்கிய தேசிய கட்சியின் ...
Read More »