இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களையும், நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் முற்றிலும் காட்டுமிராண்டித்தனமானவை என்றும், அவை பிரிவினையை விடுத்து சகிப்புத்தன்மையையும், வெறுப்பை விடுத்து அன்பை விரும்புவோர் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்றும் பிரித்தானிய வேல்ஸ் இளவரசர் சாள்ஸ் குறிப்பிட்டிருக்கிறார். பிரித்தானியாவின் கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்ற இம்மானுவேல் கிறிஸ்தவ கூட்டமொன்றில் இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிக் கருத்து வெளியிட்ட சாள்ஸ், அவை ‘உலகெங்கிலும் உள்ள மதச்சுதந்திரத்தின் மீதான தாக்குதலாகும்’ என்றும் தெரிவித்திருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் ...
Read More »செய்திமுரசு
ஆஸி. தொடரின் போது ஹர்திக் பாண்டியா ஃபிட் என்று கூற என்.சி.ஏ.வுக்கு ‘பிரஷர்’?
பும்ரா காய விவகாரத்தில் வெளியே அவர் சிகிச்சை பெற்று உடற்தகுதிச் சான்றிதழுக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியை அணுகிய விவகாரத்தில் என்.சி.ஏ. மறுப்பின் பின்னணியில் பல சமயங்களில் ஒரு வீரரை ஃபிட் என்று கூற நெருக்கடி ஏற்படுவதும் மீண்டும் அவர் உடனேயே காயமடைந்தார் என்றால் என்.சி.ஏ. மீது விமர்சனங்கள் எழுவதும் வழக்கமாகி வரும் விஷயம் தெரியவந்தது .அதாவது காயமடைந்த வீரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள், வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. பும்ரா விவகாரத்தில் அவருக்கு 4 மாதங்களாக சிகிச்சை அளித்தவர் வேறு ஒரு மருத்துவர், ...
Read More »யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சிலை அகற்றம்!
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சிலை பொதுமக்களின் எதிர்ப்பால் இன்று சனிக்கிழமை அகற்றப்பட்டது. பொதுமக்களால் புத்தர் சிலை எனவும் சிறைச்சாலை அதிகாரிகளால் சங்கமித்தையின் சிலை எனவும் கூறப்பட்டும் அந்தச் சிலை பொதுமக்களின் கடும் எதிர்பால் சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் சிறைச்சாலை கட்டடத் தொகுதி உள்ளது. அங்கு உதவி சிறைச்சாலை அத்தியட்சகராகக் கடமையாற்றுபவரின் வழிகாட்டலிலேயே இந்தச் சிலை சிறைச்சாலைக்கு முன்பாக வீதியில் அமைக்கப்பட்டது. இந்தச் சிலை கைதி ஒருவரால் 5 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. சிறைச்சாலைக்கு உள்ளே இருந்த இந்தச் ...
Read More »பாலஸ்தீனத்தில் யுத்த குற்றங்கள் – விசாரணைகளை ஆரம்பிக்க சர்வதேச நீதிமன்றம் முயற்சி!
மேற்கு கரையிலும் காஸாவிலும் இடம்பெறுகின்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழ்க்கறிஞர் படு பென்சவுடா இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள மேற்கு கரை கிழக்கு ஜெரூசலேம் மற்றும் காஸா பள்ளத்தாக்கு ஆகியபகுதிகளில் யுத்த குற்றங்கள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் யுத்த குற்ற விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான போதுமான தகவல்களை திரட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான போதிய காரணங்கள் உள்ளன என நான் ...
Read More »ஆஸ்திரேலிய மாகாணத்தில் கடும் வறட்சி – 3 லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்டதால் பரபரப்பு!
ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி நிலவும் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாகவும், போதிய மழை இல்லாததாலும் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. அதிக வெப்பம் காரணமாக அங்குள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு தண்ணீரை பயன்படுத்த அந்த நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கிரேட்டர் ...
Read More »தொடர்ந்து ஆஸ்திரேலிய காவலில் தமிழ் அகதி குடும்பம் !
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோரிய ஈழ தமிழ் குடும்பத்தை அந்நாட்டிலிருந்து வெளியேற்றுவது தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கியிருக்கும் சூழ்நிலையில், அவர்கள் மேலும் 2 மாதங்கள் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. “இந்த குடும்பத்தை மறந்து விடாதீர்கள்,” எனக் கூறியுள்ளார் இக்குடுமப்த்தின் வழக்கறிஞர் கரினா ஃபோர்ட். கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலேயே இரு ...
Read More »தூதரக ஊழியர் கடத்தல் விவகாரத்தில் முரண்படும் அரசாங்கங்கள்!
கடந்த மாதம் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரியும் உள்நாட்டு பெண் ஊழியர், கடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற விவகாரத்தில் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களையும் சுயாதீனமான பொலிஸ் விசாரணைகளின் மூலம் கண்டறியப்படுகின்றவற்றையும் ஏற்றுக் கொண்டு செயற்படுவதற்கு இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானித்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த விவகாரத்தை அரசியல் மயப்படுத்துவது உண்மை கண்டறியப்படுவதைத் தடுக்கும் என்பதால் அதை அரசியல் மயப்படுத்தக்கூடாது என்பதில் ஜனாதிபதி மிகுந்த அக்கறை காட்டுகிறார். அரசியல் மயப்படுத்துவது அரசாங்கத்திற்கும் , இலங்கைகக்கும் சர்வதேச ரீதியில் அபகரீத்தியை ஏற்படுத்தும் என்று ஒரு வட்டாரம் கூறியது. ...
Read More »சுவிஸ் தூதரக விவகாரத்தை வேறுபட்ட முறையில் கையாண்டிருக்க முடியும்!
கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் உள்ளூர் பெண் ஊழியர் ஒருவர் தான் கடத்தப்பட்டு, விசாரணைக்க உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்த முறைப்பாடு தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் காரணமாக இலங்கை விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் பாத்திரம் மீண்டுமொரு தடவை முக்கியய கவனத்தைப் பெற்றிருக்கிறது. பொய்யான தகவல்களைத் திரிபுபடுத்தியதாகவும், அரசாங்கத்தின் மீது அதிருப்தி ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருந்ததாகவும் கூறியே அந்த ஊழியர் கைது செய்யப்பட்டிருப்பது துரதிஷ்டவசமான ஒரு நிலைவரமாகும். அவரின் கடத்தல் தொடர்பாகக் கூறப்பட்ட விபரங்கள் விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்ட தகவல்களுடன் ஒருங்கிசைவாக அமையவில்லை என்று அரசாங்கம் கூறியிருக்கிறது. ஆனால், ...
Read More »அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து சீனாவுடன் புதிய பேச்சுவார்த்தைகள் இல்லை!
அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதில்லை என இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கையை தளமாக கொண்ட சர்வதேச செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே கோத்தாபய ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீனாவுடன் இலங்கை செய்துகொண்ட உடன்படிக்கை வர்த்தகரீதியிலானது என்பதால் அது குறித்து மீள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதில்லை என அவர் தெரிவித்;துள்ளார். எனினும் இந்த அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய்;ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் ஏனைய துறைமுகங்களின் பாதுகாப்பு ...
Read More »ராஜிதவின் முன் பிணை மனு நிராகரிப்பு!
தன்னை கைதுசெய்வதை தடுக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த முன் பிணை மனுவினை தலைமை நீதிவான் லங்கா ஜயரத்ன நிராகரித்துள்ளார்.
Read More »