மேற்கு கரையிலும் காஸாவிலும் இடம்பெறுகின்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழ்க்கறிஞர் படு பென்சவுடா இதனை தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள மேற்கு கரை கிழக்கு ஜெரூசலேம் மற்றும் காஸா பள்ளத்தாக்கு ஆகியபகுதிகளில் யுத்த குற்றங்கள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் யுத்த குற்ற விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான போதுமான தகவல்களை திரட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான போதிய காரணங்கள் உள்ளன என நான் திருப்தியடைந்துள்ளேன் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகள் மூலம் நீதியை நிலை நாட்ட முடியாது என கருதுவதற்கான காரணங்கள் இல்லை என தலைமை வழ்க்கறிஞர் படு பென்சவுடா தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீதான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் குறித்து தெளிவுபடுத்துமாறு கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை இஸ்ரேல் உடனடியாக கண்டித்துள்ளது.
இது உண்மை மற்றும் நீதிக்கான கரிநாள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இது ஆதாரமற்ற அவதூறான முடிவு எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள பாலஸ்தீன அதிகாரசபை தாமதமின்றி விசாரணகைளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal