அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதில்லை என இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையை தளமாக கொண்ட சர்வதேச செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே கோத்தாபய ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீனாவுடன் இலங்கை செய்துகொண்ட உடன்படிக்கை வர்த்தகரீதியிலானது என்பதால் அது குறித்து மீள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதில்லை என அவர் தெரிவித்;துள்ளார்.
எனினும் இந்த அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய்;ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் ஏனைய துறைமுகங்களின் பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை இலங்கை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது போன்று இந்த துறைமுகத்தின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து விடயங்களையும் இலங்கை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது அவசியம் என கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நான் எல்லை பாதுகாப்பு , கொழும்பு துறைமுகத்தைபோன்று இறைமையுள்ள நாட்டிடம் இருக்கின்றதா என்பது குறித்து ஆராயந்து பார்க்க விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அது எங்களிடம் உள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்க விரும்புகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் இது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ள கோத்தாபய ராஜபக்ச சீனா தூதுவர் ஏற்கனவே தன்னை சந்தித்து பாதுகாப்பு விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு இணங்கியுள்ளார் எனவும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது மீள் பேச்சுவார்த்தையில்லை, எதனையாவது சேர்க்கவேண்டும் என்றால் சேர்ப்போம்,ஆனால் அவை வர்த்தகம் தொடர்பானவையாகயிராது என கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
துறைமுகத்தின் வர்த்தகம் நோக்கம் குறித்து எங்களிற்கு எந்த பிரச்சினையும் இல்லை,அவர்கள் ஏற்கனவே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இணக்கத்திற்கு வந்துள்ளனர் இதனை நான் மாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு அரசாங்கம்செய்துகொண்ட உடன்படிக்கையை மற்றொரு அரசாங்கம் மாற்றும் நிலை காணப்படுகின்றது என்ற உணர்வை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
துறைமுகத்திற்குள் நுழையும் கப்பல்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு குறித்த விடயங்கள் இலங்கையிடம் இருக்கவேண்டும் என அவர்தெரிவித்துள்ளார்.
சீனா அரசாங்கம் இது குறித்த கரிசனையை புரிந்துகொண்டுள்ளது எங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராகவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.