இலங்கை மற்றுமொரு கொரோனா வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 2954ஆக உயர்ந்துள்ளது.
Read More »செய்திமுரசு
அஞ்சலில் சேராத கடிதம்
அன்புடன் சஜித் பிரேமதாச அவர்களுக்கு நீண்டநாட்களாக உங்களுக்குக் கடிதம் எழுதவேண்டுமென்று நினைத்திருந்தேன். ஏனோ தெரியவில்லை இப்போதுதான் அதற்கான தருணம் கைகூடியது. நீங்கள் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்கிறீர்கள். உங்களுக்கு எழுதுவதற்கு இதையும்விடப் பொருத்தமான தருணம் இருக்குமென்று நான் நினைக்கவில்லை. உங்களது அன்புத்தந்தையார் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டு, 1988 டிசம்பரில் நாட்டின் இரண்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு அந்தக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு எவருமே இதுவரையில் வெற்றி பெறவில்லை, வெற்றிபெற முடியவில்லை. 2019 நவம்பர் ...
Read More »இந்தோனேஷியாவில் குமுறத் தொடங்கியுள்ள சினாபுங் எரிமலை
மேற்கு இந்தோனேஷியாவில் உள்ள ஒரு எரிமலையானது ஞாயிற்றுக்கிழமை குமுறத் தொடங்கியுள்ளது. இந்தோனேசியாவின் முக்கிய தீவுகளில் ஒன்றான சுமத்ராவில் உள்ள சினாபுங் என்ற எரிமலையே இவ்வாறு குமுறத் தொடங்கியுள்ளதாகவும், அதன் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை 1,000 மீட்டர் (3,280 அடி) க்கும் அதிகமான புகை மற்றும் சாம்பலை காற்றில் இந்த எரிமலை வெளியேற்றியுள்ளது, மேலும் சூடான சாம்பல் மேகங்கள் தென்கிழக்கில் ஒரு கிலோமீட்டர் (0.6 மைல்) தொலைவு பயணித்ததாகவும் இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் தீங்கு குறைப்பு நிலையம் ...
Read More »சந்திரிகாவின் புதிய முயற்சி
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணி ஒன்றைத் தனியாக ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய நடவடிக்கைகளில் விரக்திய டைந்தவர்களுக்காக அவர் இவ்வாறு ஒருங்கிணைத்து வருகிறார். இவ்வாறு ஒருங்கிணைக்கப்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பின் வரிசை அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் ...
Read More »இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி……?
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்று முக்கிய அமைச்சு பதவியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கு 20வது திருத்தம் வழிவகுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பதை தடுக்கும் வகையில் 19வது திருத்தத்தில் காணப்படும் கட்டுப்பாடுகளை 20வது திருத்தம் நீக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 20வது திருத்தம் நடைமுறைக்கு வந்து இரண்டு மூன்று மாதங்களில் ஜயந்த ஹெட்டாகொட என்ற அரசதரப்பு நடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகி ...
Read More »கஜேந்திரகுமாரின் உரையை பாராட்டுகிறார் அவுஸ்திரேலிய மாநில எம்பி கியு மக்டேமெற்!
“உண்மையை பேசுகின்ற துணிச்சலான மனிதன். அவர் பாதுகாப்பாக இருக்கவேண்டும் கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார் கியு மக்டேமெற். அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை தனது சமூகதளத்தில் பகிர்ந்துகொண்ட அவுஸ்திரேலிய நியு சவுத் வேல்ஸ் மாநில உறுப்பினர் கியு மக்டேமெற் அவர்களே மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் உரையின் முழு வடிவம் பின்வருமாறு: “தமிழ் மக்களின் உரிமை அங்கீகரிக்கக்கோரியே வடக்கு கிழக்கில் மக்கள் ஏகோபித்த ஆணை வழங்கியிருக்கிறார்கள். நான் ஏகோபித்த ஆணை ...
Read More »கரோனா வைரஸின் மரபணு மாற்றம் குறித்த ஆராய்ச்சிகள் தேவை
கரோனா வைரஸின் மரபணு மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிகள் அதிகம் தேவை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகையில், “கரோனா வைரஸின் மரபணு மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு நிறையக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்த நிறைய ஆராய்ச்சிகள் தேவை. அப்போதுதான் கரோனா வைரஸ் மரபணு அளவில் எத்தகைய மாற்றம் அடைகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையில் ஸ்பானிஷ் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் போல் கரோனா வைரஸ் நீடிக்காது. இப்போது இருக்கும் தொழில்நுட்பம், நவீன மருத்துவம் ஆகியவற்றால் ...
Read More »சென்னையின் வரலாற்றை எப்போது எழுதப்போகிறது தமிழக அரசு?
ஆகஸ்ட் 22: சென்னை தினம் இந்தியாவின் பெருநகரங்களுள் ஆறாவது இடத்தில் இருக்கிறது தமிழகத்தின் தலைநகரமான சென்னை. தென்னிந்தியாவின் அரசியல், பொருளாதார, கலாச்சார மையமாக விளங்கும் சென்னைப் பெருநகரத்துக்கு மாநில அரசின் சார்பில் அதிகாரபூர்வமான ஒரு விவரச் சுவடி வெளியிடப்படவில்லை என்பது நமது வரலாற்று ஆர்வமின்மைக்கு ஓர் உதாரணம். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி சோழ மண்டலக் கடற்கரையில் கோட்டை கட்டுவதற்காக நிலம் வாங்கிய ஆகஸ்ட்- 22ம் தேதியை சென்னை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடிவருகிறோம். சென்னை நகரப் பகுதிக்கு 2,000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட வரலாறு உண்டு என்று ...
Read More »கிறிஸ்துமஸ் தீவில் இருக்கும் தடுப்பு முகாமை மீண்டும் திறப்பதாக 55 மில்லியன் டாலர்கள் செலவாகும் !
ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் இருக்கும் தடுப்பு முகாமை மீண்டும் திறப்பதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்காக 55 மில்லியன் டாலர்கள் செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம், ஆஸ்திரேலியாவின் Yongoh Hill குடியேற்றத் தடுப்பு மையத்திலிருந்து கிறிஸ்துமஸ் தீவு முகாமிற்கு 15 பேர் மாற்றப்பட்டிருந்தனர். முதலில் இவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்கு மாற்றுவதற்கான முயற்சி மையத்தில் ஏற்பட்ட போராட்டத்தினால் தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் அதற்கு அடுத்த நாளே தீவு முகாமிற்கு மாற்றப்படுபவர்களுக்கு மேலோட்டமான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறுகிறார் அகதிகள் ...
Read More »பௌத்த பல்கலைக்கழகங்கள் கல்வி அமைச்சின் கீழ்…………
மகாசங்கத்தினரின் வேண்டுகோளின்பேரில் இலங்கை பௌத்த, பாலி பல்கலைக்கழகத்தையும் புத்த ஷிராவக பிக்கு பல்கலைக்கழகத்தையும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். இரண்டு பல்கலைக்கழகங்களையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார். இப்பல்கலைக்கழகங்களின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சரின் கீழ் முறையாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி பௌத்த ஆலோசனைக் குழுவின் ஐந்தாவது கூட்டத்தொடரின்போது ஜனாதிபதியினால் இத்தீர்மானம் ...
Read More »