கரோனா வைரஸின் மரபணு மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிகள் அதிகம் தேவை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகையில், “கரோனா வைரஸின் மரபணு மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு நிறையக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்த நிறைய ஆராய்ச்சிகள் தேவை. அப்போதுதான் கரோனா வைரஸ் மரபணு அளவில் எத்தகைய மாற்றம் அடைகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ஸ்பானிஷ் ஃப்ளூ வைரஸ் காய்ச்சல் போல் கரோனா வைரஸ் நீடிக்காது. இப்போது இருக்கும் தொழில்நுட்பம், நவீன மருத்துவம் ஆகியவற்றால் 2 ஆண்டுகளுக்குள்ளாகவே கரோனா வைரஸை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.