மகாசங்கத்தினரின் வேண்டுகோளின்பேரில் இலங்கை பௌத்த, பாலி பல்கலைக்கழகத்தையும் புத்த ஷிராவக பிக்கு பல்கலைக்கழகத்தையும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இரண்டு பல்கலைக்கழகங்களையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார். இப்பல்கலைக்கழகங்களின் தனித்துவத்தை பாதுகாக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சரின் கீழ் முறையாக மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி பௌத்த ஆலோசனைக் குழுவின் ஐந்தாவது கூட்டத்தொடரின்போது ஜனாதிபதியினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப் பட்டது.
ஜனாதிபதி ஆலோசனை சபையின் 4ஆவது கூட்டத்தொடரில் மகாசங்கத் தினர் முன்வைத்த முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்ற நிலைமைகளை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சு கட்டமைப்பை ஏற்படுத்தும்போது பௌத்த ஆலோ சனை சபையின் வழிகாட்டல்களை அடிப்டையாக கொண்டதாக சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, அரச கொள்கை வகுப்பின்போது தொடர்ந்தும் மகாசங்கத்தினரின் வழிகாட்டலை தான் எதிர்பார்ப்பதாகவும் தெரி வித்தார்.
அறநெறிப் பாடசாலைகள், பிக்குகளின் கல்வி, பிரிவெனாக்கள் மற்றும் பெளத்த பல்கலைக்கழகங்களின் முன்னேற்றத்திற்காக இராஜாங்க அமைச்சு ஒன்றை நேரடிக் கண்காணிப்புக்காக நியமித்திருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் தற்போதைய பிரிவெனா கல்வி முறையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அறநெறிப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முறையான நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக சிறந்த நிலைக்கு மாற்றுவதற்கும் ஜனாதிபதி மேற்கெண்டு வரும் முயற்சிகளை மகாசங்கத்தினர் பாராட்டினர்.
இம்முறை பாராளுமன்றத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு தெரிவுகளை மேற்கொள்ளும் போது பின்பற்றப்பட்ட நடைமுறை நாட்டுக்கு முன்னுதாரணமானதாகும் என மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜத்த சிறி தேரர் குறிப்பிட்டார் .
கடந்த அரசாங்க காலத்தில் இப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட முறை குறித்து மக்கள் வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர் என்றும் தேரர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவையை மட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பொது மக்களின் பணத்தை மீதப்படுத்துவதற்கு உதவும் என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் தெரித்தார்.
நல்ல உணர்வுத் திறன் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்ட மிதிரிகல ஆரண்ய சேனாதிபதி சங்கைக்குரிய உடுஈரியகம தம்ம ஜீவ தேரர் அதனை பாடசாலை வகுப்பறையில் அறிமுகப்படுத் தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
ஆசிரியர்களான பிக்குகள், பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுவதற்கு அக்ரகார காப்புறுதி முறைமைக்கு சமமான காப்புறுதி முறைமையொன்றை அறிமுகப் படுத்துவதன் அவசியத்தை பேராசிரியர் சங்கைக்குரிய இத்துராகாரே தம்மரத்ன தேரர் முன்மொழிந்தார்.
அரசாங்க தொழில்வாய்ப்புகளை வழங்கும்போது அறநெறிப் பாடசாலை களின் இறுதி ஆண்டு மற்றும் தர்மாச்சாரிய சான்றிதழ்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறைமையொன்றின் அவசியத்தை சங்கைக்குரிய திவிய கஹ யஸஸி தேரர் சுட்டிக்காட்டினார்.
பிக்கு கல்வி, பௌத்த கல்வி குறித்த உரையாடல் ஒன்றை அல்லது தேர வாத பௌத்த சமயம் பற்றி கலந்துரையாடுவதற்கான மகாநாடொன் றின் தேவை பற்றி பேராசிரியர் சங்கைக்குரிய கொட்டபிட்டியே ராகுல தேரர் முன்மொழிந்தார்.
பௌத்த ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத் தினர் மற்றும் ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பெளத்த சாசசன, சமய, கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேரா சிரியர் கபில குணவர்த்தன, பௌத்த அலுவல்கள் ஆணையாளர் சுனந்த காரியப்பெரும உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.