செய்திமுரசு

‘வாப்பாவின் பெயரைச் சொன்னால் காது, வாயை வாப்பா வெட்டுவார்’!

“வாப்பாவின் பெயரை கூறமாட்டேன். வாப்பாவின் பெயரை சொன்னால், என்னுடைய காதுகள் இரண்டையும் வாயையும் வெட்டிவிடுவதாக வாப்பா சொன்னார் என, சஹ்ரானின் நான்கு வயதான மகள் கூறியுள்ளார் என, அம்பாறை காவல் துறை  மற்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு, ஷங்கரில்லா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் பயங்கரவாத தலைவராக மொஹமட் சஹ்ரான் என்பவரின் நான்கு வயது மகளான மொஹமட் சஹ்ரான் ருசேசினாவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நான்கு வயதான அந்த பெண் பிள்ளையிடம் பாதுகாப்பு தரப்பினர் சில விடயங்களை கேட்டபோதே ...

Read More »

அவுஸ்ரேலியாவில் மே 20ம் திகதி புதிய சட்டம்!

காவல் துறையிடம்  சிக்கும் சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரம் அந்த இடத்தில் வைத்தே ரத்துச் செய்யப்படும்வகையில் சட்டமாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் அதிகமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் போது இந்த நடவடிக்கை பின்பற்றப்படும். எதிர்வரும் மே 20ம் திகதி இப்புதிய சட்டத்தின் பிரகாரம் நடைமுறைக்கு வரவுள்ளது. வாகன ஓட்டி ஒருவரை பரிசோதிக்கும் போது 0.05 என்ற அனுமதிக்கப்பட்ட blood alcohol concentration(BAC) அளவைவிடவும் சற்று அதிகமாக இருந்தால்கூட (low-range drink-drivers blood alcohol concentration of 0.05 to less ...

Read More »

குழந்தையை அறிமுகம் செய்து வைத்த பிரித்தானிய தம்பதி!

பிரித்தானிய இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினருக்கு 06 ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. தமது குழந்தையை நேற்று (08) பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தனர். அத்துடன் குழந்தையின் Archie Harrison Mountbatten Windsor என்ற பெயரும் அறிவிக்கப்பட்டது.

Read More »

கொச்சிக்கடை தாக்குதல்; தற்கொலை குண்டுதாரியின் சகோதரர் உட்பட மூவர் கைது!

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவரின் சகோதரர் உட்பட மூவர் கைது  செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர். கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை இடம்பெற்றபோதே குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளனர். புனித உயிர்த்த ஞாயிறு அன்று தற்கொலை குண்டுதாரி நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில்  புனித அந்தோனியார் தேவாலயத்தில் பலர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

கொச்சிக்கடையில் தாக்குதலை மேற்கொண்டவர் தேவாலயத்திற்கு எப்படி வந்தார் ?

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில்  தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டவர் கிங்ஸ்பெரி ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்டவரின் வாகனத்தில் தேவாலயத்திற்கு வந்தார் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக  இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவினர் தங்கள் விசாரணைகள் குறித்த விபரங்களை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர் இதன்போதே கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதலை மேற்கொண்டவர் அந்த இடத்திற்கு எவ்வாறு வந்தார் என்ற விபரத்தை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட பகுதியில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தவேளை தாக்குதலிற்கு மறுநாள் கொச்சிக்கடையில் ...

Read More »

50 தற்கொலை குண்டுதாரிகள் தயார் நிலையில்!

தற்கொலைக் குண்டுதாக்குதல்களை மேற்கொள்ள இன்னும் 50 பேர் தயாராகவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த விடயத்தை எளிதாக எண்ணாமல் பாதுகாப்புத்துறை அவதானத்துடன் செயற்ப்பட வேண்டும் எனவும் பொதுபல சேன சுட்டிக்காட்டியுள்ளது. ராஜகிரிய அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொதுபலசேனா அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தேசிய பாதுகாப்பு இன்னமும் உறுதியான நிலையை அடையவில்லை. பொது மக்களின் பாதுகாப்பு இன்னும் ...

Read More »

சஹ்ரானின் மரணத்தை உறுதிப்படுத்த டீ.என்.ஏ பரிசோதனை!

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்பட்ட சஹ்ரான் ஹாஷிமின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கு, உடற்கூற்று மற்றும் டீ.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு, அறிக்கையை கையளிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுமதியளித்துள்ளது. தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்பட்ட, உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிம், கொழும்பு ஷங்கரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் மரணமடைந்துவிட்டார் என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்கவின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். மரணமடைந்த பயங்கரவாத ...

Read More »

அவுஸ்திரேலிய பிரதமரை முட்டையால் அடித்த பெண்ணுக்கு நீதிபதியின் உத்தரவு!

அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison மீது முட்டையால் தாக்கிய பெண்ணுக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்கள். தாக்குதல் நடத்திய 24 வயதான பெண் எதிர்வரும் மே 27 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகும்படி உத்தரவிட்டுள்ளது. கடும் நிபந்தனையுடன்கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் Scott Morrison   Albury பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தவேளை, அவருக்கு பின்புறமாக வந்த பெண்மணி அவரது தலையின் பின்புறமாக முட்டையால் தாக்குதல் நடத்தியிருந்தார். பிரதமரின் பாதுகாவலர்களால் உடனடியாகவே மடக்கிப்பிடிக்கப்பட்ட குறிப்பிட்ட பெண்மணி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அவரை சோதனையிட்டபோது அவரது கைப்பையிலிருந்து ...

Read More »

மாணவர்களின் பாதுகாப்புக்காக என்ன செய்யலாம்?

பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் எழுந்துள்ள அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் தவணைக் காலம் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில், அவர்களது பெற்றோர் மாத்திரமன்றி, அனைத்துத் தரப்பினரும் எண்ணத் தொடங்கியுள்ளனர். சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலின் போது, சிறு பிள்ளைகள் அறுவரும் கொல்லப்பட்டிருந்தனர். அந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, பயங்கரவாதிகளால் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களுக்கு வீடியோக்கள் சிலவும் வெளியிடப்பட்டிருந்தன. அந்த வீடியோக்களில், தங்களுடைய பிள்ளைகளை அருகில் வைத்துக்கொண்டே, தாம் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குத் தயாராகியிருந்த விடயத்தை, பயங்கரவாதிகள் வெளிப்படுத்தியிருந்தனர். சொன்னதைப்போல, ...

Read More »

தேசியத்தலைவர்பிரபாகரனின் பிறந்த தினம் : சிவாஜிலிங்கத்துக்கு எதிராக வழக்குப் பதிவு

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடியமை மற்றும் விடுதலை புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 26 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதற்கு சிவாஜிலிங்கம் முயற்சித்திருந்தாா். எனினும் அப்போது காவல் துறை  அதனை தடுத்திருந்ததுடன், வழக்கு பதிவு ...

Read More »