கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டவர் கிங்ஸ்பெரி ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்டவரின் வாகனத்தில் தேவாலயத்திற்கு வந்தார் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு பிரிவினர் தங்கள் விசாரணைகள் குறித்த விபரங்களை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்
இதன்போதே கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதலை மேற்கொண்டவர் அந்த இடத்திற்கு எவ்வாறு வந்தார் என்ற விபரத்தை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட பகுதியில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தவேளை தாக்குதலிற்கு மறுநாள் கொச்சிக்கடையில் தேவாலயத்திற்கு அருகில் வெடித்த வாகனத்திலேயே முதல்நாள் தற்கொலை குண்டுதாரி வந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.