நியூசிலாந்தில் சிறிய ரக விமானங்களும் சற்றும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 விமானகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாஸ்டர்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி தவிர பயணிகள் இல்லை. அதே வேளையில் மற்றொரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று மாஸ்டர்டன் விமான நிலையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தது. இந்த ...
Read More »செய்திமுரசு
உலக யுத்தத்தில் சேதமடைந்த கப்பலின் பாகங்களை திருடியவர்கள் கைது!
மட்டக்களப்பு கல்லடி கடலில் 2 ம் உலகமாக யுத்தத்தில் நீரில் மூழ்கியிருந்த கப்பலின் பாகங்களை சட்டவிரோதமான முறையில் கழற்றிய 3 வெளிநாட்டு பிரஜகளை கடற்படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கல்லடியில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரைஜகள் 3 பேரை சம்பவதினமான நேற்றுமுன்தினம் இரவு கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கடலில் தாண்ட யுத்த கப்பலின் பல இலச்சம் ரூபா பெறுமதி வாய்ந்த கப்பலின் எஞ்சின் பகுதியின் பாகங்கள் மற்றும் இதனை சுழியோடி கழற்றுவதற்கான ஓட்சிசன் சிலின்டர்கள் நீச்சல் உடைகள் உபட பல ...
Read More »குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக உறவினர்கள் காத்திருப்பு!
தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களைப் பார்வையிடுவதற்கு அவர்களது உறவினர்கள் பலர் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக நேற்று நீண்ட நேரம் காத்திருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 2 1ஆம் திகதி இலங்கை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல முஸ்லிம்கள் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 77 சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பிலும், 25 சந்தேகநபர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொறுப்பிலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்வையிடுவதற்காக ...
Read More »அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதி செய்த மோசடி! -அவுஸ்திரேலிய குடியுரிமை ரத்து!
படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அகதி ஒருவர் தனது சொந்தநாட்டில் திருட்டுத்தனமாகப்பெற்ற சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொடுத்து அவுஸ்திரேலிய சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் – அடையாள மோசடி புரிந்தார் என்ற குற்றத்தின் பேரில் – அவரது அவுஸ்திரேலிய குடியுரிமை ரத்துச்செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக செய்யப்பட்ட மேன்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்த 26 வயது ஆப்கான் அகதியொருவருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட நபர் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அதே ஆண்டில் தற்காலிக வதிவிட விசா கிடைத்தது. ...
Read More »மைத்திரியின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் !
குண்டுத்தாக்குதலின் பின்னர் நாட்டின் நிலைமைகள் தற்போது சீரடைந்து வருகின்றன. எனவே அரசாங்கம் தேசிய பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. கடந்தகால தவறுகளை மறந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமருடன் ஒன்றிணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரட்ன, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் சஜித் பிரேமதாசவும் ஒருவர் எனவும் குறிப்பிட்டார். அமைச்சர் ராஜித சேனாரட்ன வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். செவ்வி வருமாறு : கேள்வி : 2015 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பு ...
Read More »நியூசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
நியூசிலாந்து நாட்டில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் விடப்பட்ட சுனாமி எச்சரிக்கையை வாபஸ் பெற்றது அந்நாட்டு அரசு. நியூசிலாந்து நாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மக்கள் அதிகம் வசிக்காத கெர்மடெக் தீவு பகுதிகளில் இருந்து வடக்கே ஏற்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படுத்தும் அளவில் சுனாமி அலைகள் இருக்கும் என முதலில் எச்சரிக்கை விடப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்பின், சுனாமி ...
Read More »வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராஜினாமா!
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரும், ஜனாதிபதி டிரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளருமான சாரா சாண்டர்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளராக இருப்பவர் சாரா சாண்டர்ஸ். மிக கவுரவமிக்க இந்த பதவியை வகிக்கும் 3-வது பெண் இவர் ஆவார். ஜனாதிபதி டிரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளரான இவர், ஒரு முறை, “டிரம்ப் ஜனாதிபதி ஆக வேண்டும் கடவுளே விரும்புகிறார்” என கூறியதன் மூலம் அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றார். இந்த நிலையில், சாரா ...
Read More »நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட பெயர் பலகைகள் அகற்றல்!
முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூட்டப்பட்டு வழிபாடுகள், அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையினால் இரு மதங்களுக்கிடையில் வழிபாடு மற்றும் இடம் தொடர்பிலான பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றில் நடைபெற்று வந்துள்ள நிலையில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கம் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டிருந்தது. இந் நிலையில் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த பௌத்த துறவிகள் மக்கள் ஆகியோர் ...
Read More »எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவுடன் கலந்துடையாட தயார்!
“எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு நான் தயாராகவுள்ளேன்” என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கொக்குவில் புகையிரத நிலைய அதிபர் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்குமுகமாக ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். இத்தாக்குதலானது வட மாகாணத்தை மையப்படுத்தி ஆயுத வன்முறையிலும் பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் ஆவா குழுவினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இவர்களின் பிரச்சினை தொடர்பாக ஜனநாயக ரீதியிலான கலந்துரையாடலை மேற்கொள்ள தான் தயாராக இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையினையும் நாட்டின் எப்பகுதியிலுமுள்ள ...
Read More »ஆஸ்திரேலியா பேட் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சச்சின் வழக்கு!
விளம்பர தூதராக இருக்க ஒப்பந்தம் செய்த தொகையை கொடுக்க தவறியதற்காக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சச்சின் தெண்டுல்கர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் உள்ள ‘ஸ்பார்ட்டன் ஸ்போர்ட்ஸ்’ எனும் கிரிக்கெட் விளையாட்டு சார்ந்த பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் கிரிக்கெட் பேட்களில் சச்சின் தெண்டுல்கரின் பெயரையும் புகைப்படங்களையும் பயன்படுத்தி விளம்பரம் செய்து அவர்களது தயாரிப்புகளை ‘சச்சின் பை ஸ்பார்ட்டன்’ என விற்பனை செய்வதற்கு ஆண்டுக்கு 10 லட்சம் டாலர்கள் தருவதாக கடந்த ...
Read More »