நியூசிலாந்து நாட்டில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் விடப்பட்ட சுனாமி எச்சரிக்கையை வாபஸ் பெற்றது அந்நாட்டு அரசு.
நியூசிலாந்து நாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மக்கள் அதிகம் வசிக்காத கெர்மடெக் தீவு பகுதிகளில் இருந்து வடக்கே ஏற்பட்டுள்ளது.
கடலோர பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படுத்தும் அளவில் சுனாமி அலைகள் இருக்கும் என முதலில் எச்சரிக்கை விடப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்பின், சுனாமி எச்சரிக்கையை நியூசிலாந்து அரசு மீளப் பெற்றது.
Eelamurasu Australia Online News Portal