நியூசிலாந்தில் சிறிய ரக விமானங்களும் சற்றும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 விமானகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாஸ்டர்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் விமானி தவிர பயணிகள் இல்லை.
அதே வேளையில் மற்றொரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று மாஸ்டர்டன் விமான நிலையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தது. இந்த விமானத்திலும் விமானி தவிர பயணிகள் இல்லை.
இந்த 2 விமானங்களும் விமான நிலையத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, சற்றும் எதிர்பாராத வகையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் 2 விமானங்களிலும் தீப்பிடித்தது.
பின்னர் அந்த விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கின. இந்த கோர விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal