எதிர்க்கட்சித் தலைவர் குறித்து சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார். “ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சேர்ந்த 93 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 70 பேர் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். “எனினும், 16 பேர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமை பிரச்சினைக்கு உரிய விடயம்” என ஒன்றிணைந்த எதிரணியினர் தெரிவித்துள்ளனர். எனவே, இது தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி குறிப்பிட்டுள்ளது.
Read More »செய்திமுரசு
வடக்கு-கிழக்கு உள்ளிட்ட 6 மாகாணசபைகளுக்கு நவம்பரில் தேர்தல்!
வடக்கு, கிழக்கு உள்பட 6 மாகாண சபைகளுக்கு வரும் நவம்பரில் தேர்தலை நவம்பரில் நடத்த அரசு தீர்மானித்துள்ளதாக உயர்மடத் தகவல் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுக் கோரல் வரும் செப்ரம்பரில் அறிவிக்கப்படும் எனவும் அந்தத் தகவல் குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பில் கொழும்பு சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாகாண சபைகள் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவதற்கான தயார்படுத்தல்களை முன்னெடுக்குமாறு அனைத்து கட்சிகளிடமும் தேர்தல்கள் ஆணையாளர் கேட்டிருந்தார். அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துமாறு பெரும்பாண்மையான கட்சிகள் கேட்டிருந்தன. எனினும் அரசு அதற்கு ...
Read More »அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு! குழந்தைகள் உட்பட ஏழு பேர் பலி!
அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட ஏழு பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது, மேற்கு அஸ்திரேலியாவின் Margaret River, Osmington பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 4 சிறுவர்கள் மற்றும் 3 பெரியவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் குறித்த வீட்டிற்குச் சென்ற பொலிஸார் 7 பேரின் உடல்களையும் இரு துப்பாக்கிகளையும் மீட்டுள்ளனர். இதேவேளை தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. மேலும் தாக்குதல் நடாத்தியவர்களை பொலிசார் தேடி ...
Read More »தமிழர்களின் உரிமைகளை எவரும் புதைக்க முடியாது!
தமிழர்களின் அரசியல் உரிமைகள், பொருளாதார மற்றும் கலாசார உரிமைகளை எவரும் புதைக்க முடியாது என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பிரிக்கப்படாத நாட்டுக்குள், தமிழ் மக்களும் சமமான பிரஜைகளாக வாழக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும். தடைப்பட்டிருக்கும் அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். வடக்கு,கிழக்குப் பிரச்சினையைத் தீர்க்காமல் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த 8ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கைப்பிரகடன உரை குறித்து நேற்று நடைபெற்ற சபை ...
Read More »நீதிபதி இளஞ்செழியன் திருகோணமலைக்கு இடமாற்றம்!
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய மாணிக்கவாசகர் இளஞ்செழியன் திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார். இதேவேளை திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார். மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற திருமதி சிறிநிதி நந்தசேகரன், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக ...
Read More »சட்ட உதவியுடன் உயிர் துறந்த விஞ்ஞானி!
ஆஸ்திரேலியாவின் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் கௌரவ பேராசிரியராக பணியாற்றிய 104 வயது கொண்ட விஞ்ஞானி டேவிட் குட்ஆல் சட்ட உதவியுடன் தன் உயிரை மாய்ந்து கொண்டார். ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் உள்ள எடித் கோவன் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டேவிட் குட்ஆல் (வயது 104). முதுமைக்காலத்தில் இருந்த இவருக்கு கொடிய நோய்கள் இல்லை என்றாலும், அவரது வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமடைந்து வந்தது. எனவே தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விஞ்ஞானி டேவிட் குட்ஆல் விரும்பினார். தனது தற்கொலைக்கு உதவுமாறு ஆஸ்திரேலிய அரசுக்கு அவர் வேண்டுகோள் ...
Read More »522 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் இணக்கமாம்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற தனியார் காணிகளில் 522 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு சிறிலங்கா இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தனியார் இடங்களை விடுவிக்கும் போது அவற்றில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் வேறு இடத்தில் மீள அமைக்கப்பட உள்ளது. அவற்றை ஸ்தாபிப்பதற்கு செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள 866.71 மில்லியன் ரூபாயை சிறிலங்கா இராணுவத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சர் ...
Read More »புதிதாக குடியேறியவர்கள் அரச கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!
அவுஸ்திரேலியாவின் 2018 ஆம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Scott Morrison 08 ஆம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன்படி 2018-19 ஆம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையின் deficit- துண்டுவிழும் தொகை அல்லது பற்றாக்குறை 18.2 பில்லியன் டொலர்களாக உள்ளது. மேலும் 2019-20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை 2.2 பில்லியன் டொலர்கள் surplus எனப்படும் உபரிநிதியுடன்கூடிய நிதிநிலை அறிக்கையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையினால் பாதிக்கப்படும் தொகுதியினராக புதிதாக குடியேறியவர்களும் அகதிகளும் காணப்படுப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்கள் newstart உள்ளிட்ட அரச ...
Read More »ஊடகவியாளருக்கு குற்றப் புலனாய்வு பிரிவினரால் விடுக்கப்பட்ட அழைப்பு மீளப் பெறப்பட்டது!
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட டுவிட் தொடர்பாக விசாரணை செய்ய குற்றவியல் புலனாய்வு திணைக்களம் பி.பி.சி செய்தியாளர் அஸாம் அமீனுக்கு விடுத்த அழைப்பை மீளப்பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்க மற்றும் சிவில் அமைப்புக்களின் அழுத்தங்கள் காரணமாக இன்று காலை அஸாம் அமீனை தொடர்பு கொண்ட குற்றவியல் புலனாய்வு திணைக்களம் அழைப்பை மீளப்பெற்றுள்ளது. இது தொடர்பாக அஸாம் அமீன் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ் விடயம் தொடர்பாக விசாரணை செய்வற்கு குற்றப்புலனாய்வு பிரிவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்மையானது பொருத்தமானதல்ல என தொலைப்பேசி ...
Read More »மலேசியாவில் 92 வயது நிரம்பியவர் பிரதமராக பதவியேற்க உள்ளார்!
மலேசியாவில் 61 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 92 வயது நிரம்பிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது பிரதமராக பதவியேற்க உள்ளார். மலேசிய பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒன்றரை கோடி மக்களில் 69 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆளும் பி.என். கட்சி தலைமையிலான கூட்டணியை விட ...
Read More »