வடக்கு-கிழக்கு உள்ளிட்ட 6 மாகாணசபைகளுக்கு நவம்பரில் தேர்தல்!

வடக்கு, கிழக்கு உள்பட 6 மாகாண சபைகளுக்கு வரும் நவம்பரில் தேர்தலை நவம்பரில் நடத்த அரசு தீர்மானித்துள்ளதாக உயர்மடத் தகவல் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனுக் கோரல் வரும் செப்ரம்பரில் அறிவிக்கப்படும் எனவும் அந்தத் தகவல் குறிப்பிட்டுள்ளது.  இதுதொடர்பில் கொழும்பு சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாகாண சபைகள் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்துவதற்கான தயார்படுத்தல்களை முன்னெடுக்குமாறு அனைத்து கட்சிகளிடமும் தேர்தல்கள் ஆணையாளர் கேட்டிருந்தார். அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துமாறு பெரும்பாண்மையான கட்சிகள் கேட்டிருந்தன. எனினும் அரசு அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தது.

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. வடக்கு, வயம்ப மற்றும் மத்திய மாகாண சபைகளின் ஆட்சிக் காலம் வரும் செப்ரம்பரில் நிறைவடைகிறது.

இந்த நிலையில் இந்த 6 மாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு செப்ரெம்பரில் விடுக்கப்பட்டு நவம்பரில் தேர்தல் நடத்துவது என அரசு திட்டமிட்டுள்ளது. 6 மாகாண சபைகளுக்கும் நவம்பரில் தேர்தலை நடத்த அனைத்துக் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.