செய்திமுரசு

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் வியாழேந்திரன்!

முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன்  அதுரலிய ரத்ன தேரருக்கு  ஆரவளிக்கும் முகமாக மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுளள்ளார். இந்நிலையில் அதுரலிய ரத்ன தேரர் நேற்று முதல் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அமைச்சரான ரிசாத்  பதியுதீன் , கிழக்கு மாகாண ஆளுநரான எம் .எல்.ஏ.எம் ஹிஸ்பல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநரான அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு கோரியே அத்துரலிய ரத்ன தேரர் இன்று உண்ணாவிரதப் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் அடுத்த 3 மாதங்களுக்கு ஏற்படவுள்ள மாற்றம்!

அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடலோர வட்டாரத்தில் அடுத்த மூன்று மாதங்களுக்குக் கடுமையான வெப்பமும், வறட்சியும் நீடிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அந்த வட்டாரத்தின் விவசாயத்துக்குப் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. ஜுன் முதலாம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 30 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை வட்டாரத்தில் முப்பது விழுக்காடு மட்டுமே மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது. அவுஸ்திரேலியா முழுவதும் தற்போது இருப்பதைக் காட்டிலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு அதிக வெப்பமும், வறட்சியும் நீடிக்கும் எனவும், இதனால் ஏற்பட கூடிய ஆபத்துக்களில் ...

Read More »

இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்ற கணவன்!

தனது மனைவியை கொலை செய்த Ahmed Seedat என்ற கணக்காளருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பெர்த் நகரின் Carlisle பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி தனது 32 வயது மனைவியான Fahima Yusuf என்பவரை Ahmed Seedat இரும்புக்கம்பியால் அடித்துக் கொலைசெய்துவிட்டு வீட்டின் பின்புறம் புதைத்திருந்தார். Fahima Yusuf கொலைசெய்யப்பட்ட சமயம் அவர்களது 5 வயது மற்றும் 2 வயதுப் பிள்ளைகள் மற்றைய அறையில் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர். தனது மனைவியைக் கொல்ல வேண்டுமென்பது Ahmed Seedat-இன் நீண்டநாள் ...

Read More »

குடிசையில் வாழும் மத்திய மந்திரி!

மத்திய அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள மத்திய மந்திரி ஒருவர் மிகவும் எளிமையாக, தெருவோர குழாயில்  குளித்து குடிசையில் வாழ்ந்து வருவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி உள்பட 58 பேர் நேற்று மத்திய மந்திரிகளாக பதவி ஏற்றனர். 42 வயது முதல் 71 வயது வரை இளமையும், அனுபவமும் கொண்ட கலவையான அமைச்சரவையாக மோடியின் புதிய அமைச்சரவை அமைந்து உள்ளது. மத்திய மந்திரிகள் 58 பேரில் நாடு முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருப்பவர் பிரதாப் சந்திர சாரங்கி. 64 வயதாகும் இவர் ...

Read More »

ஊட­கங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளமை தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்­தல்!

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மேற்­கொள்­ளப்­பட்ட குண்டு தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள நாடாளு­மன்ற தெரிவுக்குழுவில் இடம்­பெறும் விட­யங்­களை அறிக்­கை­யிட ஊட­கங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளமை தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்­த­லாக அமையும் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி எச்­ச­ரித்­துள்­ளது. சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்ட அக்­கட்­சியின் பிரதி தலைவர் நிமல் சிறி­பால சில்வா, ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் பொதுச் செய­லாளர் மஹிந்த அம­ர­வீர மற்றும் நாடாளு­மன்ற உறுப்­பினர் துமிந்த திஸா­நா­யக்க ஆகி­யோரே இவ்­வாறு எச்­ச­ரிக்கை விடுத்­தனர். இது ...

Read More »

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் அதுரலிய ரத்ன தேரர்!

அதுரலிய ரத்ன தேரர் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அமைச்சரான ரிசாத்  பதியுதீன் , கிழக்கு மாகாண ஆளுநரான எம் .எல்.ஏ.எம் ஹிஸ்பல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநரான அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு கோரியே அத்துரலிய ரத்ன தேரர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தேரர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளதுடன் பொதுமக்களும் குறித்த உண்ணாவிராதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றும் சமர்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

இலங்கை சிவசேனை: பேசப்பட வேண்டிய அயோக்கியர்களின் யோக்கியதை!

எமது சமூகம், முற்போக்கான திசைவழியில் பயணப்படுவது பலரது நலன்களுக்கு ஆபத்தானது. அவர்கள் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் மக்களைப் பிரிக்கும் காரியத்தைக் கனகச்சிதமாகச் செய்கிறார்கள். இதைச் செய்யப் புறப்பட்டிருக்கும் இன்னொரு குழுதான் இலங்கை சிவசேனை. இலங்கையில் மக்களை மதரீதியாகப் பிரித்து, தமது அரசியல் நலன்களை நிறைவேற்றிக் கொள்ளும் வேலையையே இவர்கள் செய்கிறார்கள். இந்த ஆபத்துகளை, நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அண்மையில், பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரரை விடுவித்ததைப் பாராட்டி, அறிக்கையொன்றை வெளியிட்ட, இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம், ஞானசாரரின் ...

Read More »

நீங்கள் வித்தியின் ஆட்கள் தானே? பசில் கேட்டார் ஒரு கேள்வி!

இரகசிய ஏற்பாடு ஒன்றின் அடிப்படையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரைக் கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய தகவல்கள் தெரியவந்துள்ளன. கடந்த 26 ஆம் திகதி நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை ஜனநாயகப் போராளிகள் முதலில் சந்தித்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக மூன்று தேர்தல்கள் வரவுள்ள நிலையில் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலேயே குறித்த சந்திப்புக்கள் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் ...

Read More »

அவுஸ்திரேலியா நோக்கி கடல்பயணம்! நடந்தது என்ன?

அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த   20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது. அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த   படகை கடந்தவாரம் தடுத்துநிறுத்தி அதிலிருந்தவர்களை நாடு கடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்து சமுத்திர பகுதியில் குறிப்பிட்ட படகு கண்டுபிடிக்கப்பட்டது அதில் குழந்தையொன்று உட்பட 20 பேர் காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன குறிப்பிட்ட படகுடன் அதிலிருந்தவர்களை கிறிஸ்மஸ்தீவுகளில்  தடுத்துவைத்திருந்த அவுஸ்திரேலிய அதிகாரிகள் அவர்களின் புகலிடக்கோரிக்கையை நிராகரித்த பின்னர் அவர்களை வாடகை விமானமொன்றின் ...

Read More »

அமேசான் தலைவர் முன்னாள் மனைவி ரூ.1 லட்சம் கோடி நன்கொடை!

அமேசான் நிறுவனத்தின் தலைவரின் முன்னாள் மனைவி தனது சொத்தில் இருந்து ரூ.1¼ லட்சம் கோடியை நன்கொடையாக வழங்குகிறார். உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் (வயது 55). இவர், அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு நாவலாசிரியரான மெக்கின்சியை (48) காதலித்து, திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்துவந்த ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கின்சி ...

Read More »