அவுஸ்திரேலியா நோக்கி கடல்பயணம்! நடந்தது என்ன?

அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த   20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.

அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த   படகை கடந்தவாரம் தடுத்துநிறுத்தி அதிலிருந்தவர்களை நாடு கடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமுத்திர பகுதியில் குறிப்பிட்ட படகு கண்டுபிடிக்கப்பட்டது அதில் குழந்தையொன்று உட்பட 20 பேர் காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன

குறிப்பிட்ட படகுடன் அதிலிருந்தவர்களை கிறிஸ்மஸ்தீவுகளில்  தடுத்துவைத்திருந்த அவுஸ்திரேலிய அதிகாரிகள் அவர்களின் புகலிடக்கோரிக்கையை நிராகரித்த பின்னர் அவர்களை வாடகை விமானமொன்றின் மூலம்  இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளனர்

இலங்கையில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்ற பின்னரே இந்த படகு அங்கிருந்து புறப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன

அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயன்றவர்கள் கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டமை ஐந்து வருடங்களில் இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

பாதுகாப்பு காரணங்களிற்காக படகு தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிடப்போவதில்லை என  பிரதி பிரதமர் தெரிவித்துள்ளார்.