அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் ரூ.160 கோடி வழங்கப்படும் என ஜி7 நாடுகள் அறிவித்த நிலையில், பிரேசில் நாடு இதனை நிராகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசானில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த காட்டுத்தீயால் உலக நாடுகள் மிகப்பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. அமேசான் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில் இருந்தாலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா உள்ளிட்ட வேறு 8 நாடுகளிலும் இந்த காடுகள் பரவி கிடக்கின்றன. ...
Read More »செய்திமுரசு
இந்தியாவின் அணுவாயுத அரசியல்!
இந்தியாவின் அணுசக்தி கொள்கையில் ஒரு புதிய மாற்றத்தை இந்தியாவின் பாதுகாப்பமைச்சரின் அறிக்கை பிரதிபலிக்கிறது. இந்தியா ஏற்கெனவே அதன் விநியோக முறைகளையும், ராடார் திறனையும் பூர்த்தி செய்துள்ளதாக குறித்த அறிக்கை மூலம் தெரிகிறது. இதன் ஒரு பிரதிபலிப்பாகவே தான் இரட்டை நோக்கங்களுடன் செவ்வாய் மற்றும் சந்திரன் பயணங்களை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அண்மையில் ஏவியிருந்தது. இந்நிலை, பாகிஸ்தானில் அணுவாயுதங்கள் உள்ளிட்ட இலக்குகளை இந்திய வான்படை கண்டுபிடித்து சரிசெய்ய முடியும் என்று இந்திய வான்படை தலைவர் கூறுகிறார். வொஷிங்டன் போஸ்ட் தகவலின் படி, ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மிரில் பொலிஸார் ...
Read More »பளையில் வெடிபொருட்கள் மீட்பு!
பளை, கராண்டிய பகுதியில் ஏ.கே .47 துப்பாக்கி, 120 துப்பாக்கி ரவைகள் 11 கையெறிக் குண்டுகள் மற்றும் 10 கிலோ கிரேம் வெடிபொருட்கள் என்பவற்றை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் எனக் குற்றம் சாட்டி பளை வைத்தியசாலையில் கடந்த 19 ஆம் திகதி கைதான வைத்திய அதிகாரியின் தகவலுக்கு அமைய காவல் துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இவை மீட்கப்பட்டுள்ளன.
Read More »அமேசன் காடுகள் உலகிற்கு ஜீவாதார சுவாசப்பையாகும்!-பாப்பரசர்
பிரேசிலின் அமேசன் மழைக்காட்டுப் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான காட்டுத் தீ சம்பவங்கள் புதிதாக இடம்பெற்று பரவி வருகின்ற நிலையில் அதனை அணைக்கப் பல்லாயிரக்கணக்கான படையினர் போராடி வருகின்றனர். இந்நிலையில் பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானில் இடம்பெற்ற ஆராதனைகளைத் தொடர்ந்து ஆற்றிய உரை யின்போது அமேசன் காட்டுத் தீ குறித்து கவலையை வெளியிட்டுள்ளார். அமேசன் மழைக்காடுகள் இந்த உலகின் முக்கிய சுவாசப்பையாக உள்ளதாக அவர் தெரிவித்தார். “அமேசனில் பாரிய காட்டுத் தீ பரவி வருவது குறித்து நாம் மிகவும் கவலையடைந்துள்ளோம். அந்த (சுவாசப்பை போன்று வளியைச் ...
Read More »நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் – வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணை!
முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பௌத்த விகாரை அமைத்து குடிகொண்டிருக்கின்றனர். மேதானந்த தேரர் என்ற பௌத்த துறவியால் பாரிய புத்தர் சிலை ஒன்று நாட்டப்பட்டு பிள்ளையார் ஆலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழிபாடுகளுக்கு சென்ற மக்களோடு முரண்பட்ட நிலையில் குறித்த இடத்திலேயே அமைதிக்கு பங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து முல்லைத்தீவு பொலிசாரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந் நிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த ...
Read More »ஆண்டின் இறுதிக்குள் பலாலி – இந்தியாவுக்கிடையில் விமான சேவை!
இந்தியாவுக்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்திற்கும் இடையிலான விமானப் போக்குவரத்தானது இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, முத்தூர் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு சுமார் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இவ்வாண்டின் இறுதிக்குள் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நாங்கள் பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான ...
Read More »60 ஆயிரம் தேனீக்களுடன் தேன் கூடு மீட்பு!
அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் நகரில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையில் இருந்து மிகப்பெரும் தேன் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 50 கிலோகிராம் தேன் பெறப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் தேனீ வளர்பாளரான போல் வூட் என்பவர் பிறிஸ்பேன் நகரின் சுபுர்பன் எனும் இடத்தில் அமைந்துள்ள பெண்ணொருவரின் வீட்டுக் கூரையில் இருந்து குறித்த மிகப்பெரும் தேன் கூட்டைக் கண்டு பிடித்துள்ளார். ஏறக்குறைய 10 மாதங்கள் அக்கூடு அங்கு இருந்ததாகவும், அதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேனீக்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. குறித்த தேன் கூட்டில் இருந்து 50 ...
Read More »ஜே.வி.பி.யும் ஜனாதிபதி தேர்தலும்!
ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்காக ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மாபெரும் பேரணியின்போது கொழும்பு காலிமுகத்திடலில் பெருக்கெடுத்த மக்கள் வெள்ளம் நிச்சயமாக அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில் இலங்கையில் வேறு எந்த அரசியல் பேரணியிலும் நாம் கண்டிராததாகும். சுமார் 30 அரசியல் கட்சிகள், குழுக்கள், சிவில் சமூக மற்றும் புத்திஜீவிகள் அமைப்புக்களை உள்ளடக்கிய இந்த இயக்கத்தின் பேரணி இடதுசாரி ஆதரவாளர்களுக்கு குறிப்பாக, பழைய இடதுசாரிக்கட்சிகள் பெரும் செல்வாக்குடன் செயற்பட்ட காலகட்ட அனுபவங்கைளைக் கொண்டவர்களுக்கு ...
Read More »ஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்!
பென் ஸ்டோக்கின் பொறுப்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தினால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பேர்மிங்கமில் இடம்பெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றது. அதன் பின்னர் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டி ...
Read More »அவசரகால சட்டத்தை நீக்கினாலும் நடவடிக்கைகள் தொடரும்!
அவசரகால சட்டத்தை நீக்கினாலும் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கும், கைது நடவடிக்கைகளுக்கும், தற்போது பயங்கரவாத பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் விளக்கமறியலுக்கும் மற்றும் அவர்களின் சொத்துகளை தடைசெய்வதற்கும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காவல் துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். ஊடகமொன்றில் வெளியாகியிருந்த செய்தி தொடர்பில் அவதானம் செலுத்திய பொலிஸ் தலைமையகம், இந்த செய்தி தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவினை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறு அறிவித்தலை மேற்கொள்வதாகவும் காவல் ...
Read More »