அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் ரூ.160 கோடி வழங்கப்படும் என ஜி7 நாடுகள் அறிவித்த நிலையில், பிரேசில் நாடு இதனை நிராகரித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசானில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த காட்டுத்தீயால் உலக நாடுகள் மிகப்பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
அமேசான் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில் இருந்தாலும், பொலிவியா, கொலம்பியா, வெனிசூலா உள்ளிட்ட வேறு 8 நாடுகளிலும் இந்த காடுகள் பரவி கிடக்கின்றன. இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவுமாறு உலக நாடுகளுக்கு கொலம்பியா அரசு நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தது.

பிரான்சின் பியாரிட்ஸ் நகரில் ஜி-7 மாநாடு நடந்து வரும் நிலையில், அதில் பங்கேற்றுள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அமேசான் காட்டுத்தீ குறித்து விவாதித்தனர். இறுதியாக, அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க சுமார் ரூ.160 கோடி வழங்கப்படும் என ஜி7 நாடுகள் அறிவித்தது.
இந்த அறிவிப்பை பிரேசில் நாடு நிராகரித்துள்ளது. மேலும் அமேசான் மழைக்காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஜி7 நாடுகளின் உதவி தேவையில்லை என திட்டவட்டமாக கூறியுள்ளது.
Eelamurasu Australia Online News Portal