இந்தியாவுக்கும், யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்திற்கும் இடையிலான விமானப் போக்குவரத்தானது இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, முத்தூர் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு சுமார் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இவ்வாண்டின் இறுதிக்குள் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நாங்கள் பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களை பயன்படுத்து நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Eelamurasu Australia Online News Portal