முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச வைத்திய சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டும் எனக் கோரி, கடந்த வாரம் மனு ஒன்றின் மூலம் உயர்நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தார். அந்த விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் உடல்நல காரணங்களை முன்னிட்டு யோஷிதவுக்கு அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எனினும் யோஷிதவுக்கு தனது காதலியை பார்ப்பதற்காகவே அவுஸ்திரேலியா செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் அனுமதி கிடைத்ததனை தொடர்ந்து யோஷித தனது நண்பர்களிடம் “நான் கொடுத்த கயிரை ...
Read More »செய்திமுரசு
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்ரேலியா
அவுஸ்ரேலியா-தென்ஆப்பிரிக்கா மோதும் 3-வது ஒருநாள் போட்டி இன்று (5)டர்பனில் நடக்கிறது. இதில் தென்ஆப்பிரிக்கா வென்று ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் தொடரை கைப்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது ஒருநாள் போட்டி நாளை டர்பனில் நடக்கிறது. இதிலும் தென்ஆப்பிரிக்கா வென்று ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் தொடரை கைப்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடரை இழக்காமல் இருக்க ...
Read More »கூட்டமைப்பை உடைக்க தென்னிலங்கையில் சதி!
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணாவை பிரித்தது போல தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைக்க தென்னிலங்கை சக்திகள் முயற்சி செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம்சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் நேற்று (3) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் பலமாக இருந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் செயற்பாடுகளை பார்த்துகொண்டு இருந்தது. அரசியல் ரீதியான செயற்பாடுகளை விடுதலைப் புலிகளின் ஆலோசனைகளோடு தான் அதனைச் செய்து வந்தோம். இன்று எமது பலம் மௌனிக்கப்பட்டுள்ளது. தமிழ் முஸ்லிம் ...
Read More »இலங்கைப் பெண்ணொருவருக்கு அவுஸ்திரேலியாவில் அபராதம்
சிறு வயதின் பின்னர் தலைநகர் கொழும்பிற்கு கூட செல்லாத பெண் ஒருவருக்கு அவுஸ்திரேலிய காவல்துறை அபராதம் விதித்து அதனை செலுத்துமாறு அறிவித்துள்ளனர். அனுராதபுரம், திரப்பன பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான சோமரத்னகே தயாவதி என்ற பெண்ணுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பிராந்திய பொலிஸார், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இரண்டு அபராதங்களை விதித்துள்ளனர். குறித்த பெண், ஏ013589868 என்ற இலக்கத்தை உடைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு உரிமையானவர். 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் திகதி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. ...
Read More »யாழில் லக்மாலி நிலைநாட்டிய சாதனை தொடர்பான சுசந்திகாவின் வாய்மூல ஆட்சேபம் நிராகரிப்பு
யாழ். அல்பிரட் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நிறைவு பெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் லக்மாலி லியனஆராச்சி நிலைநாட்டிய தேசிய சாதனை விதிகளுக்கு முரணானது எனத் தெரிவித்து சுசந்திகா ஜயசிங்கவினால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை சர்வதேச தொழில்நுட்ப அதிகாரி மற்றும் விழா தொழில்நுட்ப பணிப்பாளர் பி. எச். டி. வைத்யதிலக்கவினால் நிராகரிக்கப்பட்டது. 800 மீற்றர் ஓட்டப் போட்டி புல்தரை ஓடுபாதையில் நடைபெற்றதாலும் நேரக் கணிப்பு கருவிகள் கையால் இயக்கப்பட்டமையாலும் 800 மீற்றர் ஓட்டப் போட்டி முடிவு நேரங்கள் கருத்தில் ...
Read More »தெற்கில் என்னை பேயாகவும், பூதமாகவும் பார்க்கிறார்கள் -சி.வி.விக்னேஸ்வரன்
தெற்கில் தம்மைப் பேயாகவும், பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும், சித்திரித்து பரப்புரைகளை மேற்கொள்ளப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடந்து வந்த 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் நிறைவு நாளான நேற்று(2) மாலை நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “பேச்சாளர் பட்டியலில் எனது பெயர் முன்பு ...
Read More »“ஆஸ்திரேலியா” அருணகிரி எழுதிய நூல் இன்று வெளியீடு
இராமலிங்கர் பணி மன்றம், ஏவிஎம் இராஜேஸ்வரி அறக்கட்டளை இணைந்து நடத்தும் 51 ஆவது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழாவில், இன்று 3.10.2016 திங்கட் கிழமை மாலை ஐந்து மணிக்கு, அருணகிரி எழுதிய ஆஸ்திரேலியா என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தலைமை ஏற்கிறார்.வழக்கறிஞர் காந்தி முன்னிலை வகிக்கின்றார். இடம்- ஏவிஎம் இராஜேஸ்வரி திருமண மண்டபம், இராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை.
Read More »அவுஸ்திரேலிய பிரஜா உரிமையுடையவர்களின் பெற்றோருக்கான விசா
அவுஸ்திரேலிய அரசாங்கமானது தனது தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெற்றோருக்கான புதிய தற்காலிக விசாவை அறிமுகப்படுத்தவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துவரும் வகையில் புதிய தற்காலிக பெற்றோர் விசா ஒன்று எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜுலை முதல் அறிமுகப்படுத்தப்படுவதாக அந்நாட்டு குடிவரவுத் திணைக்களம் அண்மையில் தெரிவித்திருந்தது. அந்த வகையில், இந்த விசா தொடர்பில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 12 விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 1. புதிய தற்காலிக விசாவுடன் பெற்றோர் 5 வருடங்கள் வரை அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடியும். விசா கட்டணம் ...
Read More »அவுஸ்ரேலியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா
ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்ரேலியாவை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.தென்ஆப்பிரிக்கா- அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்த ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று (2) 2-வது நாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற அவுஸ்ரேலியா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் டி காக், ரோசவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டி காக் 22 ரன்னிலும், ரோசவ் 75 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த டு பிளிசிஸ் 111 ...
Read More »மெல்பேர்ணில் உணர்வுடன் நடந்தேறிய தியாகதீப கலைமாலை நிகழ்வு-2016
பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிருநாட்களாக நீர்கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து 26-09-1987அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 29வது ஆண்டு நினைவுதினமும் கலைமாலை நிகழ்வும் ஒஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் 30-09-2016 வெள்ளிக்கிழமையன்று சென்யூட்ஸ் மண்டபத்தில் மாலை 6.00 மணியளவில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் 26-09-2001 அன்று புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான்வீதியில் சிறிலங்காப்படையினரின் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் சங்கர் மற்றும் 25-08-2002 அன்று சுகயீனம் காரணமாக ...
Read More » Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				 
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			 
				
			