அவுஸ்ரேலியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்ரேலியாவை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா.தென்ஆப்பிரிக்கா- அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்த ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று (2)  2-வது நாள் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற அவுஸ்ரேலியா பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் டி காக், ரோசவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டி காக் 22 ரன்னிலும், ரோசவ் 75 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த டு பிளிசிஸ் 111 ரன்னும், டுமினி 82 ரன்னும் விளாச தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 361 ரன்கள் குவித்தது.

362 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அவுஸ்ரேலியா களம் இறங்கியது. தென்ஆப்பிரிக்காவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியால் அந்த அணி 37.4 ஒவரிலேயே 219 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. வார்னர் (50), டுவிட் ஹெட் (51) ஆகியோர் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தனர். இதனால் தென்ஆப்பிரிக்கா 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் பர்னெல் 3 விக்கெட்டும், ரபாடா மற்றும் பெலுக்வாயோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா 2-0 என முன்னிலையில் உள்ளது.