நுட்பமுரசு

பழைய துணியிலிருந்து விமான எரிபொருள்!

வீணாகும் பொருட்களை மறுசுழற்சி செய்து, எரிபொருட்களை தயாரிக்க முடியுமா? இன்று, உலகெங்கும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இந்த நோக்கத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். ஜப்பானின் சுற்றுச்சூழல் திட்டமிடல் அமைப்பான, ‘ஜெப்லான்’ பசுமை பூமி அமைப்பு மற்றும் ஜப்பான் ஏர்லைன்ஸ் ஆகியவை, பழைய துணிகளிலிருந்து, ‘பயோ எத்தனால்’ எனப்படும் எரிபொரு ளை தயாரிக்க முயன்று வருகிறது. பழைய துணிகளில் உள்ள பருத்தியை நொதிக்கவைத்து, அதில் கிடைக்கும் சர்க்கரைகளை கொண்டு விமான எரிபொருளை தயாரிப்பதே இந்த அமைப்புகளின் நோக்கம். இதற்கென, ஜப்பானிலுள்ள துணி விற்பனையாளர்களிடம் பேசி ...

Read More »

கூகுளின் மின்னஞ்சல் சேவையில் புதிய பாதுகாப்பு!

கூகுளின் மின்னஞ்சல் சேவையில் ஜாவாஸ்க்ரிப்ட் அட்டாச்மென்ட்களை தடுக்க போவதாக கூகுள் குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கை அடுத்த மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் ஜாவாஸ்க்ரிப்ட் அட்டாச்மென்ட்களை (JavaScript attachment) தடுத்து நிறுத்த போவதாக ஜிமெயில் தெரிவித்துள்ளது. மால்வேர் தாக்குதல்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூகுள் வலைபக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பிப்ரவரி 13, 2017 முதல் ஜிமெயிலில் .js தரவுகளை பரிமாற்றம் செய்ய முடியாது. தற்சமயம் .js தரவுகள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே .exe, .msc, மற்றும் .bat ...

Read More »

ஐபால் ஸ்லைடு நிம்பிலே 4GF குரல் அழைப்பு டேப்லட்

ஐபால் நிறுவனம் ஸ்லைடு தொடரை விரிவாக்கம் செய்து அதன் புதிய ஸ்லைடு நிம்பிலே 4GF என்ற குரல் அழைப்பு டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.9,999 விலையுடைய இந்த ஐபால் ஸ்லைடு நிம்பிலே 4GF குரல் அழைப்பு டேப்லட் 4ஜி VoLTE ஆதரவுடன் வருகிறது. இந்த டேப்லட் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து முன்னணி சில்லறை விற்பனையாளர்கள் வழியாக கிடைக்கும். டூயல் சிம் ஆதரவு கொண்ட ஐபால் ஸ்லைடு நிம்பிலே 4GF டேப்லட்டில் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குகிறது. ஐபால் ஸ்லைடு நிம்பிலே 4GF டேப்லட்டில் ...

Read More »

ரோபோ தோல்

நுண்ணுணர்வு ரோபோகளை உருவாக்கும் தொடர் ஆராய்ச்சிகளின் அடுத்த கட்டமாக மனித தோல்களைப் போல் உணர்திறன் கொண்ட மேல்பாகத்தை உருவாக்க முனைந்துள்ளனர் ஆராய்சியாளர்கள். இதற்காக பாம்புகளின் மேல் தோலினைப்போல மிக மிருதுவான மின்னணு தோலினை உருவாக்கியுள்ளனர். இந்த தோல் பல விதமான அதிர்வுகளையும் உள்வாங்கும். ஒரு பொருளை தொடும்போது மனித தொடுதல் போலவே ரோபோவும் உணர்ந்து கொள்ள இந்த செயற்கை தோல் உதவும் என்றும் கூறியுள்ளனர்.

Read More »

மைக்ரோ கொம்பாஸ்

சட்டை பொத்தான் அளவேயானகொம்பாஸ் இது. வழி குழப்பமாகும் இடங்களில் திசைகளைக் காட்டும். நெருப்பு, நீர், பனி எல்லா சீதோஷ்ண நிலைக்கும் தாக்குபிடிக்கும். மைக்ரோ டெக்னாலஜி தொழில்நுட்பம் கொண்ட இதை ரீசார்ஜ் செய்து பயன்படுத்த வேண்டும்.

Read More »

குரல் கட்டளை நுட்பத்தில் முந்தும் ‘அலெக்சா!’

வீடு, அலுவலகங்களில் உள்ள சாதனங்களை குரல் உத்தரவின் மூலம் இயக்குவதும், அவை தரும் தகவல்களை குரல் மூலமே கேட்பதும், இனி எதிர்காலத்தில் பரவலாகிவிடும் என்கின்றனர் கணிப் பொறி விஞ்ஞானிகள்.இதனால், செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட, குரல் சார்ந்த சாதனங்களுக்கு இனி கிராக்கி அதிகரிக்கும். இந்த சந்தையில், 2015ல் அமேசான் அறிமுகப்படுத்திய எக்கோ என்ற தட்டையான, ‘ஒலிபெருக்கி’ போன்ற கருவி, அமேசானின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான, ‘அலெக்சா’வைக் கொண்டு இயங்குகிறது. இதை, ‘ஸ்மார்ட் ஸ்பீக்கர்’ என்றே அமேசான் அழைக்கிறது. எக்கோ கருவியிடம் அதன் உரிமையாளர் கட்டளையிட்டால், ...

Read More »

மொபைலிலேயே கண் பரிசோதனை!

கண் கண்ணாடிகளை இணையத்திலேயே வாங்கும் வசதி வந்துவிட்டது. ஆனால், துாரப் பார்வையா, கிட்டப் பார்வையா என்பதை அறிய, மருத்துவர்களை நாடவேண்டியிருக்கிறது. இப்போது அதற்கு மாற்றாகவும் ஒரு கருவி வந்திருக்கிறது. அமெரிக்காவில், கலிபோர்னியாவிலுள்ள, ‘ஐக்யூ’ (Eyeque) என்ற நிறுவனம், அதே பெயரில் உருவாக்கியிருக்கும் சாதனத்தை ஒரு ஸ்மார்ட்போனில் பொருத்திக்கொள்ள வேண்டும். அதனுடன், இலவசமாகக் கிடைக்கும், ‘மை ஐக்யூ’ என்ற மொபைல் செயலியையும் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ஐக்யூ சாதனம் வழியே மொபைலில் தெரியும் சில காட்சி களை பார்த்து, தெளிவாகத் தெரியும் வரை, செயலியில் ...

Read More »

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புது ஆப் வெளியீடு

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க தமிழர்கள் போராடி வரும் நிலையில் இதற்கென புதிய செயலி வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வலியுறுத்தி உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் துவங்கிய இப்போராட்டம் இன்று உலகின் சில நாடுகளில் தமிழர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும் அளவுக்கு விரிவடைந்துள்ளது. நிரந்தர தீர்வை நோக்கி நடத்தப்படும் இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் கூகுள் பிளே ஸ்டோரில் ...

Read More »

ஃபோன்களை சார்ஜ் செய்து தாங்கும் ஜீப்ரானிக்ஸின் கார் மவுண்ட்

கார்களில் ஸ்மார்ட்ஃபோன்களை பாதுகாப்பாக வைக்க, சார்ஜ் செய்ய பல புதிய கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய கைப்பேசி பாக தயாரிப்புகளான ZEB-CH60UM மற்றும் ZEB-CH702UM என்ற ஸ்மார்ட்போன்களுக்கான கார் மவுண்டுகளை வெளியிட்டுள்ளது. காரின் 12V போர்ட்டில் தாங்கிகளின் அடிப்பாகம் நேரடியாக பொருந்திக்கொள்ளும். இது மவுண்டிற்கும் மின்சக்திக்கும் ஒரே போர்ட்டையே உபயோகிக்கிறது, ZEB-CH702UM ஆக இருந்தால் கைப்பேசி பிடியிலேயே கைப்பேசியைப் பொருத்த வேண்டும், இதுவே ZEB-CH60UM இல் சக்திவாய்ந்த காந்தங்கள் இருப்பதால் அவை கைப்பேசியைத் தாங்கிப் பிடிக்கும். ...

Read More »

வழித்தோழனாக விளங்கும் கூகுள் மேப் அப்டேட்..!

பலருக்கு வழித்தோழனாக விளங்கும் கூகுள் மேப் புதிய சில அம்சங்களுடன் அப்டேட் ஆகி வந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் முக்கிய படைப்பான மேப் சேவையினை உலகில் பலர் பயன்படுத்துகின்றனர். இதனை மொபைலில் கூட எளிதாக பயன்படுத்த முடியும். பல பயனுள்ள வசதிகளை கொடுக்கும் கூகுள் மேப்பை தற்போது புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் சாதனங்களில் அப்டேட் ஆகியுள்ள கூகுள் மேப் (வேர்ஷன் 9.43.2), பயணிக்க வேண்டிய பாதைகளை புதிய வடிவில் இன்னும் தெளிவாக அடையாளம் காட்டுகிறது. ...

Read More »