பலருக்கு வழித்தோழனாக விளங்கும் கூகுள் மேப் புதிய சில அம்சங்களுடன் அப்டேட் ஆகி வந்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் முக்கிய படைப்பான மேப் சேவையினை உலகில் பலர் பயன்படுத்துகின்றனர். இதனை மொபைலில் கூட எளிதாக பயன்படுத்த முடியும். பல பயனுள்ள வசதிகளை கொடுக்கும் கூகுள் மேப்பை தற்போது புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் சாதனங்களில் அப்டேட் ஆகியுள்ள கூகுள் மேப் (வேர்ஷன் 9.43.2), பயணிக்க வேண்டிய பாதைகளை புதிய வடிவில் இன்னும் தெளிவாக அடையாளம் காட்டுகிறது. மேலும் ஜி.பி.எஸ் மூலம் குரல் வழிகாட்டும் முறை போன்ற சில வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
புதிய வடிவில் வந்துள்ள கூகுள் மேப் எந்த தாமதமும் இல்லாமல் வேகமாக விரும்பிய இடத்தை அடைய புதிய வழித்தடங்களை காட்டுவதுடன் பெட்ரோல் பங்க், உணவகங்கள், விடுதிகள் முதலியவற்றை தெளிவாக அடையலாம் காட்டுகிறது.