சியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய ஸ்மார்ட்போன் இன்று சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில நாட்களாகக் கிசுகிசுக்கப்பட்டு வந்த எம்ஐ நோட் 2 கருவி இன்றைய புதுவரவாக அமைந்திருக்கின்றது. சீனாவின் ஆப்பிள் என அழைக்கப்படும் சியோமியின் புதுவரவு கருவியில் வழங்கப்பட்டுள்ளது ஏகப்பட்ட சிறப்பம்சங்கள். ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைப் போல் சியோமி எம்ஐ நோட் 2 கருவியில் dual-curved டிஸ்ப்ளே மற்றும் 3G கிளாஸ் பேனல் கொண்டுள்ளது. 5.7 இன்ச் OLED டிஸ்ப்ளே மற்றும் 3D கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.
Read More »நுட்பமுரசு
விண்வெளியில் கீரை வளர்க்கும் நாசா விஞ்ஞானிகள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இலைகோஸ் கீரை வகையை பயிர் செய்யும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். பூமியைப் போன்று விண்வெளியிலும் உணவு வகைகளை பயிர் செய்யும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இலைகோஸ் ரக கீரை வகை பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வை நாசா விண்வெளி வீரர் ஷேன் கிம்புரோ தொடங்கி வைத்திருக்கிறார். இதுகுறித்து இந்த திட்டத்தின் மேலாளர் நிக்கோல் டம்பர் கூறுகையில் “நாங்கள் எதிர்பார்த்ததைவிட பணிகள் சிறிது மந்தமாகவே நடைபெற்றது. எனினும் அனைத்து வகை கீரைகளையும் வெற்றிகரமாக பயிர் செய்து ...
Read More »மக்களைக் கவரும் அப்பிள் ஐபாட்
அக்டோபர் 23, 2001 அன்று ஆப்பிள் துணை நிறுவனரும், முன்னாள் தலைமை அதிகாரியுமான ஸ்டீவ் ஜாப்ஸ், ஐபாட் என்னும் இசை கேட்கும் சாதனத்தை அறிமுகப்படுத்தினார். இது இசை மீதான மக்களின் மனநிலையை மாற்றியமைத்தது என்றுகூடச் சொல்லலாம். ஐபாட் சாதனத்தின் முதல் தலைமுறை 1000 பாடல்களைச் சேமிக்கும் வகையில் 5 ஜி.பி. சேமிப்பானையும், அதைக் கேட்கும் சாதனத்தையும் கொண்டிருந்தது. இரண்டாவது தலைமுறை தொடுதிரை வசதியோடு, விண்டோஸ் இயங்குபொருளின் உதவியையும் கூடுதலாகப் பெற்றிருந்தது. இப்போது மூன்று வகையான ஐ-பாட்கள் சந்தையில் உள்ளன. அவை, அதி கச்சித ஐபோட், ...
Read More »தலைகள் ஒட்டிப் பிறந்த குழந்தைகளை வெற்றிகரமாகப் பிரித்தெடுத்த மருத்துவர்கள்
தலைகள் ஒட்டிப்பிறந்த இரு குழந்தைகளை மருத்துவர்கள் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரித்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டியன் மெக்டொனால்ட், நிகோல் மெக்டொனால்ட் தம்பதியினருக்கு கடந்த வருடம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இவ்விரு ஆண் குழந்தைகளின் தலையும் நேருக்கு நேராக ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்காணப்பட்டன. துடிப்புடன் காணப்பட்ட இக்குழந்தைகளால் அமர்ந்திருக்கவோ, நடக்கவோ முடியவில்லை. படுத்த படுக்கையில் அதுவும் ஒரு குழந்தை புரண்டால் மற்ற குழந்தையும் புரளும் நிலை காணப்பட்டது. ஜேடன், அனியஸ் என பெயரிடப்பட்ட இக் குழந்தைகளுக்கு தற்போது 13 மாத வயதாகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயோர்க் ...
Read More »வாட்ஸ் ஆஃப் காணொளி அழைப்பு அறிமுகம்
குரல் அழைப்பு வசதியுடன், வீடியோ காலிங் வசதியை சோதனை முயற்சியாக வாட்ஸ் ஆஃப் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பரவலான வாடிக்கையாளர்களைக் கொண்ட வாட்ஸ் ஆஃப் நிறுவனம், ஆன்ட்ராய்டு, ஆப்பிள் மற்றும் விண்டோஸ் ஆகிய இயங்குதளங்களில் இயங்கும் மொபைல் போன்களில் இலவச மெசேஜிங் மற்றும் குரல் அழைப்பு சேவையை வழங்கி வருகிறது. அதேபோல், வாட்ஸ் ஆஃப்-பில் புகைப்படம், பைல்கள் மற்றும் ஆடியோ போன்றவற்றை பகிர்ந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. இந்நிலையில், தற்போது பயன்பாட்டில் உள்ள குரல் அழைப்பு வசதியுடன், வீடியோ காலிங் வசதியையும் ...
Read More »வலைத்தள ஹேக்கர்கள் கைவரிசை
வலைத்தளங்களுக்குள் ஊடுருவும் ‘ஹேக்கர்ஸ்’ கைவரிசையால் பிரபல சமூக வலைத்தளமான ‘டுவிட்டர்’, வர்த்தக வலைத்தளமான ‘அமேசான்’ உள்ளிட்ட இணையங்களை பதிவேற்றம் செய்யும் நிறுவனங்கள் கடும் பின்னடைவை சந்திக்க நேர்ந்தது. அமெரிக்காவின் பிரபலமான இன்டர்நெட் சேவை மையமான internet service company Dyn என்ற நிறுவனம் உலகில் உள்ள பிரபல இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் விபரங்களை பாதுகாப்பாக பிறருக்கு பகிர்ந்து வருகிறது. இந்த இணைப்பின் வழியாக டுவிட்டர், ஸ்பாட்டிஃபை, கிஸ்மோடோ, ஹெச்.பி.ஓ. உள்ளிட்ட வலைத்தளங்களும், சி.என்.என். போன்ற செய்தி நிறுவனங்களும், ‘பேபால்’ என்ற ஆன்லைன் பணப் பரிமாற்ற ...
Read More »உலகின் முதல் தொங்கும் ரெயில் சேவை
மக்கள் தொகையில் முதல் இடத்தை பிடித்தது மட்டும் அல்லாமல், தொழில் நுட்பத்திலும், சீனா சிறந்து விளங்கி வருகிறது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனங்களில் ரெயிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சீனாவை பொறுத்தவரையில், ரயில்கள் அதிக அளவு இயக்கப்படுகிறது. அதிவேக ரெயில் சேவையிலும், சீனா முதல் இடம் வகிக்கிறது. சீனாவின் முதலாவது தொங்கும் ரெயிலின் சோதனை ஓட்டம், வெற்றியளித்துள்ளதாக சீன தொழிற்நுட்ப துறையினர் அறிவித்துள்ளனர். சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் செஞ்க்டுவில், இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. லித்தினியம் பேட்டரி மின்சக்தியில் ...
Read More »பி.எம்.டபிள்யூ மின்சார பைக்
மோட்டார் சைக்கிள் ஓட்டும் அனுபவத்தை மகிழ்ச்சிக்குரியதாக்கும் வகையில் உலகின் மிகப்பிரலமான கார் தயாரிப்பு நிறுவனமான ‘பி.எம்.டபிள்யூ’ புதிய ரக எலக்ட்ரிக் பைக் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. மோட்டார் சைக்கிள் ஓட்டும் அனுபவத்தை மகிழ்ச்சிக்குரியதாக்கும் வகையில் உலகின் மிகப்பிரலமான கார் தயாரிப்பு நிறுவனமான ‘பி.எம்.டபிள்யூ’ புதிய ரக எலக்ட்ரிக் பைக் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. ஒற்றை பிரேமில் முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிளுக்கு ‘பி.எம்.டபிள்யூ மோட்டாராட் விஷன் நெக்ஸ்ட் 100’ ( BMW Motorrad VISION NEXT 100 bike) என பெயரிடப்பட்டுள்ளது. இதில் உள்ள ...
Read More »புதிய செயற்கை அறிவாற்றல் ஆய்வு நிலையம்- ஸ்டீபன் ஹாக்கிங்
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியரும் இயற்பியல், விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங், புதிய செயற்கை அறிவாற்றல் ஆய்வு நிலையம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். எதிர்கால செயற்கை அறிவாற்றல் நிலையம் எனப்படும் அந்த நிலையம், செயற்கை அறிவாற்றலின் பல்வேறு வகையான பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தும். கூடுதல் திறன் கொண்ட அறிவார்ந்த கைபேசிகள் முதல், இயந்திர மனித அறுவை சிகிச்சையாளர்கள், டெர்மினேட்டர் பாணியிலான ராணுவ மனித இயந்திரங்கள் வரை பல வகையான ஆய்வுகள் நடத்தப்படும். லிவர்கோல்ம் அறக்கட்டளையின் 12 புள்ளி 3 மில்லியன் டாலர் மானியத்துடன் தொடங்கப்பட்டுள்ள அந்த ...
Read More »எஃப். எம், ப்ளூடூத் வசதியுடன் புதிய ஸ்பீக்கர்
ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் சவுண்டுபார் என்கிற புதிய பொருளை அறிமுகப்படுத்துகிறது. ஒன்டர்பார் என்று குறிப்பிடப்படும் இந்த சவுண்டுபார் மெல்லிய, தரமான வடிவில் சந்தைக்கு வந்துள்ளது. ரிமோட் கண்ட்ரோல், ஹெட்ஃபோன் இணைப்பு வசதி, எஃப்.எம் ரேடியோ மற்றும் ப்ளூடூத் உள்ளமைக்கப்பட்ட இந்த சவுண்ட்பாரை சுவற்றிலும் மாட்டி வைக்கலாம். எங்கும் எளிதாக நிறுவலாம். 35 எஃப்.எம் சேனல்கள் வரை இதனால் தனது நினைவாற்றலில் சேமித்து வைக்க முடியும். இதன் 8 மீட்டர்கள் தூரம் வரை செயல்படக்கூடிய ப்ளூடூத் வசதி ஸ்மார்ட்ஃபோன், டேப்லெட் அல்லது தொலைக்காட்சியில் இருந்து இசையை இயக்கிட ...
Read More »