வலைத்தளங்களுக்குள் ஊடுருவும் ‘ஹேக்கர்ஸ்’ கைவரிசையால் பிரபல சமூக வலைத்தளமான ‘டுவிட்டர்’, வர்த்தக வலைத்தளமான ‘அமேசான்’ உள்ளிட்ட இணையங்களை பதிவேற்றம் செய்யும் நிறுவனங்கள் கடும் பின்னடைவை சந்திக்க நேர்ந்தது.
அமெரிக்காவின் பிரபலமான இன்டர்நெட் சேவை மையமான internet service company Dyn என்ற நிறுவனம் உலகில் உள்ள பிரபல இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் விபரங்களை பாதுகாப்பாக பிறருக்கு பகிர்ந்து வருகிறது.
இந்த இணைப்பின் வழியாக டுவிட்டர், ஸ்பாட்டிஃபை, கிஸ்மோடோ, ஹெச்.பி.ஓ. உள்ளிட்ட வலைத்தளங்களும், சி.என்.என். போன்ற செய்தி நிறுவனங்களும், ‘பேபால்’ என்ற ஆன்லைன் பணப் பரிமாற்ற நிறுவனமும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க நேரப்படி 21 ஆம் திகதி காலை சுமார் 11 மணியளவில் இந்த internet service company Dyn நிறுவனத்துக்கு சொந்தமான இணைப்புக்குள் ஊடிருவிய ஹேக்கர்கள் அதை முடக்கி விட்டனர்.
அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதியில் வசிக்கும் பலர் இந்த இணைப்பின்மூலம் தகவல்களை அனுப்பவோ, பெறவோ முடியாத நிலைமை உருவானது. இதையறிந்து உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இணையதள பயன்பாட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சிலர் மேற்படி இணையதளங்கள் குறைவான வேகத்தில் செயல்பட்டதாக புகார் அளித்தனர்.
இதேபோல், பிரபலமான பல வலைத்தளங்களை பதிவேற்றம் செய்யும் அமேசான் நிறுவனமும் இதே வகையிலான பின்னடைவை 21 ஆம் திகதி சந்தித்ததாகவும், பின்னர் அந்த குறைபாடு களையப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.