இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியரும் இயற்பியல், விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங், புதிய செயற்கை அறிவாற்றல் ஆய்வு நிலையம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
எதிர்கால செயற்கை அறிவாற்றல் நிலையம் எனப்படும் அந்த நிலையம், செயற்கை அறிவாற்றலின் பல்வேறு வகையான பயன்பாடு குறித்து ஆய்வு நடத்தும்.
கூடுதல் திறன் கொண்ட அறிவார்ந்த கைபேசிகள் முதல், இயந்திர மனித அறுவை சிகிச்சையாளர்கள், டெர்மினேட்டர் பாணியிலான ராணுவ மனித இயந்திரங்கள் வரை பல வகையான ஆய்வுகள் நடத்தப்படும்.
லிவர்கோல்ம் அறக்கட்டளையின் 12 புள்ளி 3 மில்லியன் டாலர் மானியத்துடன் தொடங்கப்பட்டுள்ள அந்த நிலையம், மனிதகுலத்துக்கு நன்மையளிக்கும் விதமாக செயற்கை அறிவாற்றலைப் பயன்படுத்தும் வகைகள் குறித்து ஆய்வுசெய்யும் என்று கூறப்பட்டது.