நுட்பமுரசு

‘பேஷன் டிப்ஸ்’ தரும் செயற்கை நுண்ணறிவு!

அமேசான் நிறுவனம் உருவாக்கிய, ‘அலெக்சா’ என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளை, பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமின்றி, தனிபர்களும் பயன்படுத்துவதற்காக சில கருவிகளை அறிமுகப்படுத்தியது. எக்கோ, டாட் போன்ற அந்த செயற்கை நுண்ணறிவு கருவிகளுக்கு, மேற்கத்திய நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தக் கருவிகளை உரிமையாளர் தன் குரல் மூலம் கட்டுப்படுத்தலாம். அண்மையில் அமேசான் அறிமுகப்படுத்தியுள்ள, ‘எக்கோ லுக்’ என்ற கருவி, கேமரா வசதி கொண்டது. இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவி, உரிமையாளர் அணிந்திருக்கும் உடை, அவரது தோற்றத்திற்கு எடுப்பாக இருக்கிறதா என்பதை தன் இயந்திரக் குரல் ...

Read More »

கையடக்க ஒலிப்படக் கருவி

லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லுாரியைச் சேர்ந்த இரு முனைவர் பட்ட மாணவர்கள், பேனா அளவுக்கே உள்ள, ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்’ எனப்படும் மீஒலி வருடியை உருவாக்கியுள்ளனர். செவி உணரா ஒலி அலைகள் மூலம் உடலுக்குள் இருக்கும் அங்கங்களை திரையில் படமாக காட்டும் திறன் கொண்டவை மீஒலி வருடி. பலவித நோய்களை அறிவதற்கு உதவுவதோடு, கருவுற்ற குழந்தையின் நலனை அறியவும் உதவும் இக் கருவி, அளவில் பெரிதாகவும், விலை அதிகமாகவும் இருப்பதால், வளரும் நாடுகளில், குறிப்பாக கிராமப்புற மருத்துவமனைகளில் இது இன்றும் எட்டாக் கனி தான். உயிரிப் ...

Read More »

இணைய அட்லஸ் தெரியுமா?

சமீபத்தில் ஒரு வரைபடம் இணைய உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வரைபடம் இணையத்துக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகின் முதல் இணைய அட்லஸ் என இது அழைக்கப்படுகிறது. இணையத்தின் பெளதீக உள்கட்டமைப்பை விவரிக்கும் வகையில் இந்த வரைபடம் அமைந்துள்ளது. இணையம் என்பது வலைப் பின்னல்களின் வலைப் பின்னல் என்பது நமக்குத் தெரியும். அது உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களாகவும் சர்வர்களாகவும் பரவியிருக்கிறது. டேட்டா சென்டர்களால் இணைக்கப்பட்டு, கடலுக்கடியிலான கேபிள்களும் அதன் இணைப்புகளாக அமைந்துள்ளன. ஆனால், இந்த பெளதீக உள்கட்டமைப்பின் விவரம் மிகவும் சிக்கலானது. இந்த விவரங்களைச் சித்தரிக்கும் வரைபடத்தை ...

Read More »

சுவாரசியமான ஒளிப்படச் செயலி

ஸ்மார்ட் போன் உலகில் இப்போது ஒளிப்படம் சார்ந்த செயலிகள் பிரபலமாகவும், சுவாரசியமாகவும் இருக்கின்றன. இந்த வரிசையில் இப்போது பேஸ் ஆப் செயலி அறிமுகமாகி இருக்கிறது. செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட இந்தச் செயலி பயனாளிகளின் ஒளிப்படத்தைப் பலவிதமாக மாற்றிக்கொள்ள உதவுகிறது. ஒருவர் தனது எதிர்காலத் தோற்றத்தை, புன்னகை மிக்க தோற்றத்தைக் காணலாம். பாலினத்தை மாற்றியும் பார்த்துக்கொள்ளலாம். இளம் வயதுத் தோற்றத்தையும் காணலாம். இந்தச் செயலியை வேறு பல விதங்களிலும் சுவாரசியமாகப் பயன்படுத்தலாம். ஏற்கெனவே உள்ள ஒளிப்படங்களைத் திருத்த அல்லது புதிதாக எடுத்த படத்தை மாற்றவும் ...

Read More »

அதிவேக ‘கமரா’: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஒளி பயணம் செய்யும் வேகத்தை போட்டோ எடுக்கும் அதிவேக கமராவை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். சுவீடனில் உள்ள லுண்டு பல்கலைக்கழகத்தின் எலியாஸ் கிறிஸ் டென்ஸ்சன் தலைமையிலான குழுவினர் அதிவேக ‘கேமரா’வை உருவாக்கியுள்ளனர். இந்த கேமரா மூலம் ஒளியின் பயணத்தை போட்டோ எடுக்க முடியும். இந்த கேமரா மூலம் ஒரு வினாடிக்கு 1 லட்சம் போட்டோக்கள் எடுக்க முடியும். ஒளியின் பயணத்தை போட்டோ எடுக்கும் போது அதில் இருந்து வெளியாகும் பல ஒளிகள் ஒன்றிணைந்து ஒரு போட்டோ ஆக வெளியாகிறது. விலங்குகளின் மூளை செயல்பாடு, குண்டு ...

Read More »

தனியார் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட அமெரிக்க உளவு செயற்கை கோள்

தனியார் நிறுவன ராக்கெட் மூலம் முதன் முறையாக உளவு செயற்கை கோளை தற்போது தான் அமெரிக்கா முதன் முறையாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது. அமெரிக்க ராணுவம் ‘என்.ஆர்.ஓ.எஸ்.-76’ என்ற உளவு செயற்கை கோள் தயாரித்துள்ளது. அது 01 ஆம் திகதி  காலை விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பால்கன் 9 என்ற ராக்கெட் மூலம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து அனுப்பப்பட்டது. இந்த நிறுவனம் கோடீசுவரர் லொன் மஸ்க்குக்கு சொந்தமானது. இந்த உளவு செயற்கை கோள் நேற்று (உள்ளூர் நேரப்படி) ...

Read More »

ஸ்மார்ட் லஞ்ச் பாக்ஸ்

வழக்கமான லஞ்ச் பாக்ஸ்க்கு மாற்றாக எளிமையான, ஸ்டைலான லஞ்ச் பாக்ஸ் இது. தெர்மோ கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் உணவு அதே தரத்துடன் இருக்கும். கசிவு இருக்காது. கையாளுவதும் எளிது.

Read More »

மடக்கும் குடுவை

மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் வகையிலான குடுவை. சிறு அடுப்புகளில் வைத்து சூடேற்றலாம். அடிப்பாகம் அலுமினியத்தால் ஆனது. பைபர் கிளாஸ் கோட்டிங் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

Read More »

ZTE நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன்

ZTE நிறுவனத்தின் துணை நிறுவனமான நுபியா, தனது “நுபியா Z17” என்ற புதிய ஸ்மார்ட் போன் ரகத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய ரக ஸ்மார்ட் போன் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக நுபியா நிறுவனத்தின் இணையதளத்தில் Z17 ஸ்மார்ட் போன் குறித்த தகவல்கள் வெளியாகின. பின்னர் இந்த தகவல் அந்த இணையதளத்தில் இருந்து அகற்றப்பட்டது. இணையதளத்தில் வெளியான தகவல்களின்படி, பிங்கர் பிரிண்ட் சென்சார் கருவியுடன் முன் மற்றும் பின் பக்க கேமிராக்களுடன் இந்த ஸ்மார்ட் போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் ...

Read More »

வெப்பநிலைக்கு ஏற்ப மாறும் துணி!

வெயில், குளிர் போன்றவற்றிலிருந்து தப்பிக்க, பல வகை உடைகளும், ‘ஏசி’, மின் விசிறி போன்ற சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், உடையே எந்த தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவாறு மாறி நம்மைக் காக்க முடிந்தால் எப்படி இருக்கும்?அதைத்தான் செய்கிறது, ‘அதர்லேப்’ என்ற நிறுவனம் உருவாக்கியிருக்கும் ஒரு புதுவகை துணி. நைலான், பாலியஸ்டர் போன்ற பொருட்களின் அடுக்குகளைக் கொண்டு, வெளியே குளிர் அதிகமாக இருந்தால் கதகதப்பையும், வெப்பம் அதிகமாக இருந்தால், குளிர்ச்சியையும் தரும் விதத்தில் இந்த புதுவித துணி இருக்கிறது. இரு வேறு தட்பவெப்ப நிலைக்கேற்றபடி விரிவடையும் தன்மையுள்ள ...

Read More »